கோர்ட் செய்தி

தமிழ்நாடு

தலைமறைவு மாணவன், ஆசிரியை திருப்பூரில் மீட்பு: தென்காசியில் நீதிபதி முன்பு ஆஜர்

Updated : மார் 12, 2016 | Added : மார் 12, 2016 | கருத்துகள் (19)
Advertisement
ஆசிரியை திருப்பூரில் மீட்பு

திருநெல்வேலி:ஒரு ஆண்டாக தலைமறைவாக இருந்த நெல்லை பள்ளி மாணவன், ஆசிரியை நேற்று மீட்கப்பட்டு கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டனர்.திருநெல்வேலி, செங்கோட்டை, காலங்கரை பகுதியை சேர்ந்தவர் கேசரி. இவரது மகள் பிரியா என்ற கோதைலட்சுமி 29.எம்.எஸ்.சி., பட்டதாரி. செங்கோட்டையை அருகே இலத்துாரில் தனியார் மெட்ரிக் பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றிவந்தார்.
கடந்த கல்வியாண்டில் பத்தாம் வகுப்பு தேர்வுகள் முடிந்த நாளில் பள்ளிக்கு சென்ற மகளை காணவில்லை என அவரது தந்தை கேசரி, செங்கோட்டை போலீசில் புகார் செய்தார். அதே பள்ளியில் பத்தாம் வகுப்பு பயின்ற கடையநல்லுார், கிருஷ்ணாபுரத்தை சேர்ந்த மாணவனையும் காணவில்லை.மாணவனின் தாய் மாரியம்மாள், கடையநல்லுார் போலீசில் புகார் செய்தார். இருவரும் காணாமல் போனது குறித்து செங்கோட்டை, கடையநல்லூர் போலீசார் விசாரித்தனர். ஒரு ஆண்டாக இருவரும் சென்னை, புதுச்சேரி என வெவ்வேறு இடங்களில் தலைமறைவாக இருப்பதாக அவ்வப்போது தகவல்கள் வந்தன.இதனிடையே மாணவனின் தாயார், மதுரை கோர்ட்டில் வழக்குதொடர்ந்தார். தமது மகனை மீட்டுத்தரும்படி ஆட்கொணர்வு மனுசெய்தார்.எனவே இதுகுறித்து புளியங்குடி டி.எஸ்.பி., ஜெயக்குமார் தலைமையில் தனிப்படையினர் விசாரித்தனர்.
மாணவன், ஆசிரியையின் நண்பர்களுக்கு திருப்பூர் பொதுதொலைபேசிகளில் இருந்து அடிக்கடி போன் வருவதை சைபர் கிரைம் போலீசார் அறிந்தனர். அந்த எண்ணை கண்காணித்த கடையநல்லுார் இன்ஸ்பெக்டர் பத்மநாபன், சப் இன்ஸ்பெக்டர் சுடர்ஒளி தலைமையில் போலீசார் திருப்பூர் சென்றனர். நேற்றுமுன்தினம் இரவில் திருப்பூர், புலவன்பட்டி என்னுமிடத்தில் தனியார் மில்லில் வேலைபார்த்து வந்த மாணவனையும், கோதைலட்சுமியையும் நெல்லை அழைத்துவந்தனர்.
நேற்று பிற்பகல் 2.30 மணிக்கு புளியங்குடி டி.எஸ்.பி., ஜெயக்குமார் முன்னிலையில் ஆஜர்படுத்தினர். விசாரணைக்கு பிறகு இருவரிடத்திலும் வாக்குமூலம் பெற கடையநல்லுார் போலீஸ் ஸ்டேஷன் அழைத்துச் சென்றனர்.இரவு 7 மணி வரை கடையநல்லுார் ஸ்டேஷனில் வைத்து விசாரித்தனர். கோதைலட்சுமி தற்போது 4 மாத கர்ப்பமாக இருக்கிறார். அவரை மருத்துவ பரிசோதனைக்காக தென்காசி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். பின்னர் தென்காசியில் மாஜிஸ்திரேட் ஜெகதீஸ்வரி வீட்டில் ஆஜர்படுத்தினர்.

Advertisement




வாசகர் கருத்து (19)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Cheenu Meenu - cheenai,இந்தியா
13-மார்-201600:23:25 IST Report Abuse
Cheenu Meenu நாட்டில் ஒருசில டீச்சர் இப்படித்தான் படிக்கும் பசங்க கிட்டே உறவுடன் இருக்காங்க. பருவ கோளாறு
Rate this:
Share this comment
Cancel
sagodhary - Paris,பிரான்ஸ்
12-மார்-201622:29:38 IST Report Abuse
sagodhary வேலியே ஆட்டை மேய்ந்தால்,நிலம் எப்படி உருப்படும்
Rate this:
Share this comment
Cancel
Raji - chennai,இந்தியா
12-மார்-201616:15:48 IST Report Abuse
Raji ரொம்ப வீக்கா இருந்தா 4 மாசம் எப்படி ஆகியிருப்பா கொடுமைடா ..
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X