சம்பவம் செய்தி

தமிழ்நாடு

பாலியல் பலாத்கார முயற்சி: 'ஏஜி' கிறிஸ்துவ திருச்சபை மத போதகர் கைது

Added : மார் 16, 2016
Advertisement

நாமக்கல்: வீட்டு வேலைக்காரியை பாலியல் பலாத்காரம் செய்ய முயற்சித்த, 'ஏஜி' திருச்சபை போதகர் சாமுவேல் ஆரோனை, நாமக்கல் அனைத்து மகளிர் போலீசார் கைது செய்தனர்.நாமக்கல்-திருச்சி சாலை குப்பம்பாளையத்தில், ?ஷக்கினா, 'ஏஜி' கிறிஸ்துவ திருச்சபை போதகராக, கடந்த, 15 ஆண்டுகளாக, நாமக்கல் கணேசபுரத்தை சேர்ந்த சாமுவேல் ஆரோன், 40, என்பவர் இருந்தார். அவர், திருச்சபைக்கு வரும் பெண்களுக்கு பாலியல் தொந்தரவு கொடுப்பதாக புகார் எழுந்தது. ஷைக்கினா 'ஏஜி' சபை போதகர் சாமுவேல் ஆரோன் வீட்டில், எருமப்பட்டி கைகாட்டியை சேர்ந்த பிரகாஷ் மனைவி நிர்மலா, 31, என்பவர் வீட்டு வேலை செய்து வந்தார். கடந்தாண்டு, மே, 14ம் தேதி, வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் வீட்டில் வேலை செய்து கொண்டிருந்த நிர்மலாவை, பாலியல் பலாத்காரம் செய்ய முயற்சித்துள்ளார். அதனால், அதிர்ச்சி அடைந்தவர் அவரிடம் இருந்து தப்பி வெளியேறினார். ஆனால், போதர் சாமுவேல் ஆரோன், 'வெளியே சொல்லக்கூடாது' என, மிரட்டியதுடன், அடிக்கடி தொலைபேசியிலும், வழியிலும் மிரட்டி, மீண்டும் வேலைக்கு வரும்படி கட்டாயப்படுத்தி உள்ளார்.

இதற்கிடையில், கடந்த மாதம், நாமக்கல் வந்த கோவையை சேர்ந்த போதகர் வேலுசாமி, 'போதகர் சாமுவேல் ஆரோன், என் மனைவியை மயக்கி சீரழித்து கெடுத்து விட்டார்' என, நிர்மலாவிடம் தெரிவித்தார். அதிர்ச்சியடைந்த அவர், தொடர்ந்து பல பெண்களை சீரழித்த சாமுவேல் ஆரோன் மீது, நாமக்கல் அனைத்து மகளிர் போலீசில், நிர்மலா புகார் செய்தார். ஆனால், எவ்வித நடிக்கையும் எடுக்காததால், நாமக்கல் போலீஸ் எஸ்.பி., மகேஸ்வரனிடம் புகார் செய்யப்பட்டது. கடந்த, 6ம் தேதி, சபைக்கு வந்த கிறிஸ்துவ மக்கள் திருச்சபை பூட்டுப்போட்டிருப்பதை கண்டு, அப்பகுதியினர் அதிர்ச்சி அடைந்தனர். ஆத்திரமடைந்த அவர்கள், 'திருச்சபையை முற்றுகையிட்டு, மதபோதகர் சாமுவேல் ஆரோன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்; அவரிடம் இருந்து சபையை மீட்டுத்தர வேண்டும்' என, போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்நிலையில், மனு குறித்த விசாரணைக்கு ஆஜராகும்படி, சாமுவேல் ஆரோனுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்படி, நேற்று பகல், 12 மணிக்கு, நாமக்கல் அனைத்து மகளிர் போலீஸ் ஸ்டேசனுக்கு வந்த போதகர் சாமுவேல் ஆரோனிடம், டி.எஸ்.பி., தமிழ்செல்வன், இன்ஸ்பெக்டர் ஜெயந்தி ஆகியோர் தனித்தனியாக விசாரணை நடத்தினர். விசாரணையில், தான் செய்த தவறை, மதபோதகர் சாமுவேல் ஆரோன் ஒப்புக் கொண்டார். அதை தொடர்ந்து, பெண்களை மானபங்கம் செய்தல், பாலியல் பலாத்காரம் செய்தல், பாலியல் பலாத்கார முயற்சி செய்தல் ஆகிய மூன்று பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து, சாமுவேல் ஆரோனை போலீசார் கைது செய்து விசாரிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X