தானே : தானேயில் கட்சி தொண்டர்களிடம் பேசிய மகாராஷ்டிர நவநிர்மாண் சேனா கட்சி தலைவர் ராஜ்தாக்ரே, தண்ணீர் பீச்சி ஹோலி கொண்டாடும் வடஇந்தியர்களை தாக்குங்கள். மராத்திய பண்டிகைகளை எங்கிருந்தோ வந்த மற்ற இனத்தவர்கள் கொண்டாடும் போது ஏன் நாம் கொண்டாட கூடாது? என்றார். கடந்த சில நாட்களுக்கு முன், மராத்தியர்கள் அல்லாதவர்களின் ஆட்டோக்களை தீயிட்டு கொளுத்துங்கள் என ராஜ்தாக்ரே கூறியது பெரும் சர்ச்சையை கிளப்பிய நிலையில், தற்போது ஹோலி கொண்டாடும் மராத்தியர்கள் அல்லாதவர்களை தாக்கும்படி அவர் கூறி இருப்பது புதிய பிரச்னையை கிளப்பி உள்ளது.