அரசியல் செய்தி

தமிழ்நாடு

பதிவு செய்த நாள் :
மந்திரிகள் வீடுகளை நோட்டமிடும் உளவுத்துறை

அமைச்சர்களின் செயல்பாடுகளில், கடும் அதிருப்தியில் இருக்கும் முதல்வர் ஜெயலலிதா, அவர்கள் மற்றும் பினாமி பெயரில் சேர்த்துள்ள சொத்துகள், ஊருக்குள் நடத்திய கட்டப் பஞ்சாயத்து உள்ளிட்ட அத்தனை விவரங்களையும் திரட்டித் தருமாறு, உளவுத்துறையினருக்கு உத்தரவிட்டு உள்ளார்.

சமாதானம்:

அ.தி.மு.க., ஐவரணியில் இருந்த அமைச்சர்கள் பன்னீர்செல்வம், நத்தம் விஸ்வாதன், பழனியப்பன் ஆகியோர், தலைமையின் கோபத்திற்கு ஆளாகினர். இதைத் தொடர்ந்து, ஐவர் அணி குழு, நால்வர் அணியாக சுருக்கப்பட்டு, அதில், தங்கமணி, வேலுமணி ஆகியோர் இணைந்தனர். அமைச்சர்கள் பன்னீர்செல்வம், நத்தம் விசுவநாதன் ஆகியோர் கடும் நெருக்கடிக்கு ஆளாக்கப்பட்டு, திரைமறைவில் பல்வேறு விஷயங்கள் நடந்து முடிந்து, தற்போது இருவரும் தலைமையிடம் சமாதானம் ஆகி உள்ளதாகக் கூறப்படுகிறது.

இதற்கிடையில், அந்த இரு அமைச்சர்கள் மற்றும் உயர் கல்வித் துறை அமைச்சர் பழனியப்பன் ஆகியோரை, பின் தொடர்ந்து கண்காணித்து, அவர்கள் செயல்பாடுகள் குறித்து, அறிக்கை தர முதல்வர் உத்தரவிட்டுள்ளதாகக்கூறப்படுகிறது.

மந்திரிகள் வீடு, நோட்டமிடும் உளவுத்துறை


கண்காணிப்பு:

இந்நிலையில், நால்வர் அணியில் முன்னணியில் இருக்கும் அமைச்சர் வைத்திலிங்கம், சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர், தோப்பு வெங்கடாசலம், வீரமணி, கோகுல இந்திரா, வளர்மதி, செல்லுார் ராஜு, முக்கூர் சுப்பிரமணியன் உள்ளிட்ட பல அமைச்சர்களையும் கண்காணிக்க முதல்வர் உத்தரவிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. ஐவர் அணியில், நத்தம் விசுவநாதன் மற்றும் பன்னீர்செல்வம் ஆகியோருக்கு ஏற்பட்ட நெருக்கடிகளைத் தொடர்ந்து, அமைச்சர் வைத்திலிங்கம், தன் சொந்த ஊரான தஞ்சாவூர் பக்கம் தலைகாட்டாமல் இருந்து வருவதாகக் கூறப்படுகிறது. அவருக்கு வலது, இடது கரங்களாக செயல்படும் எம்.பி., பரசுராமன், மாவட்ட பால்வள கூட்டுறவு சங்கத் தலைவர் காந்தி ஆகிய இருவரையும் நோட்டமிட்டு வரும், உளவுத் துறை மற்றும் ரகசிய குழு, அறிக்கைகளை ஆட்சி மேலிடத்திடம் சமர்ப்பித்து விட்டதாகக்

Advertisement

கூறப்படுகிறது.

விரைவில் நடவடிக்கை...:

இது குறித்து, அ.தி.மு.க., வட்டாரங்கள் கூறியதாவது:அமைச்சர் வைத்திலிங்கம் மட்டுமல்ல; தமிழகம் முழுவதும் இருக்கும் அனைத்து அமைச்சர்களின் செயல்பாடுகளையும் கண்காணித்து, அறிக்கை தருமாறு உளவுத் துறைக்கும், தனியார் ஏஜன்சிக்கும் முதல்வர் உத்தரவு பிறப்பித்துள்ளார். அமைச்சரின் சொத்து விவரங்கள் தான் முக்கியமாக சேகரிக்கப்பட்டு வருகின்றன. இது தொடர்பான விவரங்கள் அனைத்தும் முழுமையாக தன் கைக்கு வந்ததும், சம்பந்தப்பட்ட அமைச்சர்கள் மீது அதிரடியாக சில நடவடிக்கைகளை எடுக்கவும் முதல்வர் தயாராகி வருகிறார்.இவ்வாறு அக்கட்சி வட்டாரங்கள் கூறின.
- நமது சிறப்பு நிருபர் -


Advertisement

வாசகர் கருத்து (19)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
mohan ramachandran - chennai,இந்தியா
22-மார்-201605:41:36 IST Report Abuse

mohan ramachandran அட போங்கையா .புதுசா ஏதேனும் போடுங்கள்.வழக்கமாய் நடப்பதுதானே .இதில் எதற்கு எந்த பில்ட் அப் .

Rate this:
மதுரை விருமாண்டி - சான் ஹோஸே, கலிபோர்னியா ,யூ.எஸ்.ஏ
21-மார்-201621:20:44 IST Report Abuse

மதுரை விருமாண்டி"அமைச்சர்களின் " ஜெயலலிதா தன்னோட அடுத்த சொத்துக் குவிப்பு வழக்குக்கு தானே ஆதாரங்களை தேடி வைக்கிறார்.. சொந்தக் காசில் சூன்யம் என்பதற்கு முழு அர்த்தம் இங்கு தெரிகிறது.. பல லட்சம் கோடிகள் சுருடப்பட்டுள்ளதை உளவுத் துறையும், தனியார் நிறுவனமும் கண்டுபிடித்துள்ளதாக அவர்களே ஒப்புக் கொள்கிறார்கள்.. குமாரசாமி கால்குலேட்டரில் போட்டால் கூட 45% அம்ம்மாவின் பங்கும், கமிஷனும், ஐந்தாண்டில் தினசரி கொள்ளைகளும் சேர்த்தால் 1 லட்சம் கோடிகளை இலகுவாக தாண்டி விடும்.. அடுத்து ஆட்சிக்கு வரப் போகும் கட்சிக்கு அருமையான துவக்கமாக இருப்பப் போகிறது..

Rate this:
Pasupathi Subbian - trichi,இந்தியா
21-மார்-201614:10:57 IST Report Abuse

Pasupathi Subbianஇவர்களுக்கு லஞ்சம் வாங்கி தர உதவி செய்த அரசு ஊழியர்களை யார் தண்டிப்பது.

Rate this:
மேலும் 16 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X