அரசியல் செய்தி

தமிழ்நாடு

பதிவு செய்த நாள் :
நேரு குடும்பத்தை மறவாத ஜெ.,
நேரு குடும்பத்தை மறவாத ஜெ.,

முதல்வர் ஜெயலலிதாவின் வீட்டு அலுவலக மேஜையில், நேரு குடும்பத்தைச் சேர்ந்த இந்திரா மற்றும் ராஜிவ் ஆகியோரின் புகைப்படங்கள் உள்ளன. அவர், நேரு குடும்ப நட்பை மறக்காமல் உள்ளதாக, காங்கிரஸ் தொண்டர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

சட்டசபை தேர்தலில், அ.தி.மு.க., சார்பில் போட்டியிட விருப்பம் தெரிவித்தவர்களிடம், மார்ச், 6ல், போயஸ் தோட்ட இல்லத்தில், முதல்வர் ஜெயலலிதா நேர்காணல் நடத்தினார். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள், அ.தி.மு.க., தலைமை அலுவலகத்தால் வெளியிடப்பட்டன.

ஜெயலலிதாவின் மேஜை முன், நான்கு புகைப்படங்கள் வைக்கப்பட்டுள்ளன. அவற்றில், முதல் படம், முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆருடன் ஜெயலலிதா இருக்கும் படம்.

முன்னாள் பிரதமர்கள் :

இந்திரா மற்றும் ராஜிவ் உடனும் இருக்கும் படங்கள், தனித்தனியாக வைக்கப்பட்டுள்ளன. அன்னை தெரசாவுடன் ஜெ., இருக்கும் படமும் இடம்பெற்றுள்ளது.இந்த படங்களை, காங்கிரஸ் தொண்டர்கள், 'வாட்ஸ் ஆப்'பில் பரப்பி வருகின்றனர். சமீபத்தில், ராஜிவ் கொலை வழக்கில், ஆயுள் தண்டனை பெற்றவர்களை, விடுதலை செய்வது தொடர்பாக முடிவெடுக்கும்படி, மத்திய அரசுக்கு ஜெயலலிதா கடிதம் எழுதியிருந்தார். இதனால், அ.தி.மு.க., மீது காங்கிரசார் கடும் கோபத்தில் இருந்தனர். தற்போது வெளியான புகைப்படத்தால், ஜெ., மீதான கோபம் விலகி, மரியாதை வந்திருப்பதாக, காங்கிரசார் தெரிவிக்கின்றனர்.

இது குறித்து, காங்கிரஸ் தொண்டர்கள் கூறியதாவது:ராஜிவ் உடன் நட்பு பாராட்டி,

Advertisement

காங்கிரசுடன், அ.தி.மு.க., கூட்டணி அமைத்தது. இந்த கூட்டணி அமைந்த போது, தமிழகத்தில் பிரசாரத்துக்கு வந்த ராஜிவ், மனித வெடிகுண்டுக்கு பலியானார். இந்த படுகொலையை தொடர்ந்து நடந்த தேர்தலில், அ.தி.மு.க., - காங்கிரஸ் கூட்டணி மிகப்பெரிய வெற்றி பெற்று, முதல் முறையாக ஜெயலலிதா முதல்வரானார். இந்த நிலையில், ராஜிவ் கொலை வழக்கில், ஆயுள் தண்டனையாகக் குறைக்கப்பட்டு சிறையில் இருப்பவர்களை விடுதலை செய்ய, தீர்மானம் நிறைவேற்றுகிறார்; மத்திய அரசுக்கு கடிதம் எழுதுகிறார் என்பதால், ஜெயலலிதாவை நினைத்து வேதனைப்பட்டோம். ஆனால், நேரு குடும்பத்தை உள்ளத்தால் மறவாமல், இத்தனை ஆண்டுகளாக, அவர்களின் புகைப்படங்களை தன் அருகில் வைத்துள்ளார் என்று நினைக்கும் போது உள்ளம் பூரிப்படைகிறது.இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
- நமது நிருபர் -

Advertisement

வாசகர் கருத்து (62)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
muthu Rajendran - chennai,இந்தியா
21-மார்-201620:57:37 IST Report Abuse

muthu Rajendranரெம்பவும் தினமலர் பீல் ஆயிரிச்சா .தேர்தல் வந்தா இப்படித்தான்

Rate this:
Muhammed - DXB,ஐக்கிய அரபு நாடுகள்
21-மார்-201618:54:23 IST Report Abuse

Muhammedஎங்கள் தமிழ் புலி சீமான், தமிழக புதிய முதல்வர், இது நடக்கும்.

Rate this:
Muhammed - DXB,ஐக்கிய அரபு நாடுகள்
21-மார்-201618:45:37 IST Report Abuse

Muhammedவருவான்டா எங்கள் புலி சீமான், புதிய வரலாறு படைக்க, இந்த கூட்டத்தை ஒழிக்க

Rate this:
மேலும் 59 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X