அரசியல் செய்தி

தமிழ்நாடு

பதிவு செய்த நாள் :
பணம் பறக்கிறது; பறக்கும்படை 'கப்சிப்': கருணாநிதி கண்டனம்

சென்னை : போலீஸ் துறை வாகனங்கள், ஆம்புலன்ஸ் வாகனங்களில் பணம் எடுத்து செல்வதை, தேர்தல் கமிஷனின் பறக்கும் படை கண்டு கொள்வது இல்லை என, தி.மு.க., தலைவர் கருணாநிதி குற்றம் சாட்டியுள்ளார்.

பணம் பறக்கிறது,பறக்கும்படை கப்சிப், கருணாநிதி கண்டனம்

கருணாநிதி, நேற்று வெளியிட்ட அறிக்கை: இந்த ஆண்டு இதுவரை நடைபெற்ற, பிளஸ் 2 பொதுத்தேர்வில், வேதியியல், கணிதம்

கேள்வித்தாள் மிகக் கடினமாக இருந்ததால், மாணவர்கள் மட்டுமின்றி, அவர்களின் பெற்றோரும் மிகுந்த வேதனை அடைந்துள்ளனர். இதில், மாணவர்கள் ஆறுதல் அடையும் வண்ணம் நல்ல தீர்வு காண வேண்டும். நெய்வேலிபழுப்பு நிலக்கரி நிறுவனத்தின் பெயரை, 'என்.எல்.சி., இந்தியா லிமிடெட்' என, மாற்றுவதற்கு, மத்திய அரசு, குறிப்பாக பிரதமர் திட்டமிட்டுள்ளார். தேவையில்லாத இந்த முயற்சியில் ஈடுபட வேண்டாம்.

பறக்கும் படையினர் சோதனையின் போது, சிறிய, நடுத்தர வணிகர்கள் கொள்முதலுக்கு கொண்டு செல்லும் பணம், பொதுமக்கள் சுபகாரியநிகழ்ச்சிகள் மற்றும் மருத்துவ சிகிச்சைக்காக கொண்டு செல்லும் பணத்தை பறிமுதல் செய்கின்றனர். உரிய ஆவணங்களைக் காட்டிய பின், பணத்தை திருப்பிக் கொடுக்க அலைய விடுகின்றனர். தேர்தலுக்காக பணம் எடுத்து செல்பவர்கள், போலீஸ் துறை

Advertisement

வாகனங்களிலும், ஆம்புலன்ஸ் வாகனங்களிலும் செல்வதை, பறக்கும் படையினர் கண்டு கொள்வது இல்லை. எனவே, தேர்தல் அதிகாரிகள், இந்த பிரச்னையில் நியாயமாகவும், நேர்மையாகவும் நடந்து கொள்ள வேண்டும். இவ்வாறு, அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.


Advertisement

வாசகர் கருத்து (56)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
அம்பி ஐயர் - நங்கநல்லூர், சென்னை - 600 061,இந்தியா
25-மார்-201622:38:59 IST Report Abuse

அம்பி ஐயர்அப்படியா....??? ஆம்புலன்ஸ்ல இதுவரைக்கும் எத்தனை கோடிகள் தலைவரே கொண்டு போயிருக்கீங்க....???

Rate this:
tamil - Chennai  ( Posted via: Dinamalar Android App )
21-மார்-201621:45:09 IST Report Abuse

tamilஇந்த கட்டு மரத்த உள்ள தள்ளுங்க

Rate this:
ramalingam gurusamy - Toronto ,கனடா
21-மார்-201618:54:56 IST Report Abuse

ramalingam gurusamyபாம்பின் கால் பாம்பறியும் என்பது திருமங்கலம் பார்முலா அறிமுகம் நாயகனுக்கு என்னை தெரியலையா ஒன்னும் புரியலையா என்று பாடிக்கொண்டே பதுங்கு குழிக்குள் படுத்துக்கொண்டே சாதிப்பவர், இந்த சகலகலாவல்லவன் என்பது கருவில் உள்ள சிசு முதல் அறிந்த ரகசியம். இவர் சொல்கின்ற பறக்கும்படை, காவல்துறை ஆம்புலன்ஸ் தவிர்த்த மார்க்கங்களில் இவர் ஓட்டுக்கு கூலி கொடுக்க தயார் என்ற அறிவிப்பாகவே இதை கருத வேண்டும். ஆனால் இது போன்ற செயல்களுக்கு ஆதரவின்றி மந்திரிசபையை கலைத்து விட்டால் ஆளும் கட்சியினர் பல்பிடுங்கப்பட்ட பாம்பாக மற்ற கட்சியினர் நிலையில் சகஜமாகி விடுவர். அரசு இயந்திரங்களை தவறாகப் பயன்படுத்தும் வல்லமையும் இராது. தேர்தல் ஆணையத்திற்கும் பாதி புகார் குறைந்துவிடும் நம்பிக்கையை ஏற்படுத்தும்.

Rate this:
மேலும் 53 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X