பதிவு செய்த நாள் :
சுப்ரீம் கோர்ட்டில் ஜெ., வழக்கு
தேர்தலுக்கு முன் தீர்ப்பு வருமா?

உச்ச நீதிமன்றத்தில் நடந்து வரும், முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்து குவிப்பு வழக்கு விசாரணையின் முடிவு, தமிழக சட்டசபை தேர்தலுக்கு முன் வருமா என்ற எதிர்பார்ப்பு, அரசியல் வட்டாரங்களில் எழுந்துள்ளது.

வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக தொடரப்பட்ட வழக்கில், ஜெயலலிதாவுக்கு, நான்கு ஆண்டுகள் தண்டனை, 100 கோடி ரூபாய் அபராதத்தை, பெங்களூரு தனி நீதிமன்றம் விதித்தது. சசிகலா, இளவரசி, சுதாகரனுக்கு, தலா நான்கு ஆண்டுகள் சிறை, 10 கோடி ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. இந்த உத்தரவை, கர்நாடக உயர் நீதிமன்றம் ரத்து செய்தது.இதை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில், கர்நாடக அரசு தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது. தி.மு.க., பொதுச் செயலர் அன்பழகன், பா.ஜ., மூத்த தலைவர் சுப்பிரமணியன் சாமி ஆகியோரும் மனுக்கள் தாக்கல் செய்துள்ளனர். சொத்து குவிப்பு வழக்கு, தற்போது இறுதி கட்டத்தை நெருங்குகிறது. உச்ச நீதிமன்ற நீதிபதிகள் பினாகி சந்திரகோஷ், அமிதவராய் அடங்கிய, 'பெஞ்ச்', இந்த வழக்கை விசாரித்துவருகிறது.

கர்நாடக அரசு தரப்பில், மூத்த வழக்கறிஞர்கள் துஷ்யந்த் தவே, ஆச்சார்யா வாதங்கள்

செய்துள்ளனர். ஹோலி பண்டிகையை ஒட்டி,உச்ச நீதிமன்றத்துக்கு அடுத்த வாரம் விடுமுறை என்பதால், மார்ச் 29ல், மீண்டும் வாதங்கள் துவங்குகின்றன. ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரன் தரப்பில், மூத்த வழக்கறிஞர்கள் வாதங்களை துவங்க உள்ளனர். ஜெ., தரப்பில், மூத்த வழக்கறிஞர்கள் நாகேஸ்வர ராவ், சேகர் நாப்டே ஆகியோரும், வழக்கில் தொடர்புடைய நிறுவனங்கள் சார்பில், மூத்த வழக்கறிஞர் அரிமா சுந்தரமும் வாதாடுகின்றனர்.கர்நாடக அரசு தரப்பில் எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு பதிலளிக்க, ஜெ.,தரப்பும் தயாராக உள்ளது. ஜெ., தரப்பில், மூத்த வழக்கறிஞர் பி.குமார், வழக்கறிஞர்கள் மணிசங்கர், அசோகன், செந்தில் ஆகியோர் தினசரி ஆஜராகின்றனர்.

சுப்ரீம் கோர்ட், ஜெ., வழக்கு, தேர்தலுக்கு முன் தீர்ப்பு

வழக்கு விசாரணையை, தி.மு.க., தரப்பும், உன்னிப்பாக கவனித்து வருகிறது. வழக்கு விசாரணையின் போது, தி.மு.க.,வை சேர்ந்த, மூத்த

Advertisement

வழக்கறிஞர் சண்முகசுந்தரம், நீதிமன்றத்தில் ஆஜராகி விடுகிறார்.தி.மு.க., தரப்புக்கு அனுமதி கிடைத்தால், மூத்த வழக்கறிஞர் அந்தியர்ஜுனா வாதாடுவார். இல்லையென்றால், எழுத்துப்பூர்வமாக வாதங்களை தாக்கல் செய்ய அனுமதிக்கலாம். சுப்பிரமணியன் சாமியும் அனுமதி கேட்டுள்ளார். இ ந்த வழக்கில், ஏப்ரல் முதல் வாரத்தில் விசாரணை முடிந்து விட்டால், சட்டசபை தேர்தலுக்கு முன், தீர்ப்பு வந்து விடும் என்கின்றனர், வழக்கை கவனித்து வரும் வழக்கறிஞர்கள். தீர்ப்பு எப்படி இருந்தாலும், அது, தமிழக தேர்தலில் பிரதிபலிக்கும் என்பது மட்டும் உண்மை.
- நமது நிருபர் -


Advertisement

வாசகர் கருத்து (81)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
kowsik Rishi - Chennai,இந்தியா
23-மார்-201617:53:25 IST Report Abuse

kowsik Rishiஅரசிடம் சம்பளம் வாங்கி கொண்டு சட்டம் நீதி துறை வேலை செய்யும் இவர்களுக்கு ஒரு வேண்டுகோள் : செல்வி ஜே ஜெயலலிதாவின் சொத்து வழக்கு தீர்ப்பு பற்றி சும்மா இந்த மாதிரி பூச்சாண்டி செய்தி வெளியிடும் வேலையை நிறுத்திகொள்ளுங்கள். தீர்ப்பு வரும்போது வரட்டும் இன்றைக்கு கூட வரட்டுமே அதை பற்றி உங்களுக்கு என்ன. நீங்கள் ஒரு அரசு ஊழியர்கள் தான். ஆகவே தேர்தல் அரசியல் பண்ணும் இடமாக இது வேண்டாம். இது ஒரு அப்பீல் வழக்கு, தீர்ப்பு வருது தீர்ப்பு வருது என்று பூச்சாண்டி செய்தி எல்லாம் வேண்டாம். செல்வி ஜே ஜெயலலிதாவின் மக்கள் ஆதரவிற்கு இது ஒரு பாதகமும் செய்யபோவதில்லை மு. கருணாநிதி என்ற தீய சக்தியின் அரசியல் கோழை தனம், காழ்புனார்ச்சி, வயிற்றெரிச்சல், தன் ஊழல் குடும்ப அரசியல் தொழில் முடங்கிபோகும் யன்ற இத்தியாதி காரணங்களால் செல்வி ஜே ஜே வை அரசியல் களத்தில் வெல்ல முடியாத மு. கருணநிதி பிடித்த சட்ட நீதித்துறை ஊழியர்களை பிடித்த வேலை இது அகவே ஜே ஜே வின் சொத்து வழக்கு தீர்ப்பு வருது வருது என்று பூச்சன்ன்டி செய்தி எல்லாம் இனி வேண்டாம்,

Rate this:
SIVA. THIYAGARAJAN - POLUR -TIRUVANNAMALAI,இந்தியா
22-மார்-201604:14:08 IST Report Abuse

SIVA. THIYAGARAJANதீர்ப்பு வழங்குபவர்களும் மானிடர்கள் தானே. உச்ச நீதி மன்றத்திற்கு பிறகும் மேல் முறையீடு..

Rate this:
Hari Iyer - Austin,இந்தியா
22-மார்-201600:47:46 IST Report Abuse

Hari Iyerவருடங்கள் பல கடந்ததால் இந்த வழக்கு தள்ளுபடி செய்யப்படுகிறது என்று தீர்ப்பு வர வாய்ப்பு உள்ளது. அந்த நிலையில் ஜெயா தண்டனையில் இருந்து தப்பி விடுவார்.கருணாநிதி புலம்பிக் கோடே இருப்பார்.கேப்டன் ஜெயுடன் கூட்டணி வைத்து ஒரு சில மெம்பர்களை பெறுவார்.இந்த தயிரியம் ஜெயாவுக்கு உண்டு.தேவையானால் 15 ஆண்டுகள் கேசை நீட்டவும் ஜெயா தயங்க மாட்டார்.கருணா ஆட்சியில் ஏன் கேசை முடிக்கவில்லை?

Rate this:
மேலும் 78 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X