குடியிருப்போர் குரல்

Added : மார் 23, 2016 | |
Advertisement
பூங்கா வேண்டும்மாநகராட்சி, 46வது வார்டுக்குட்பட்ட கணபதி, லட்சுமி நகர் பகுதியில் பூங்காவுக்கு ஒதுக்கப்பட்ட இடத்தில், எந்தவொரு பணியும் ஆரம்பிக்கப்படவில்லை. பலமுறை இப்பகுதியில், பூங்கா அமைக்க அதிகாரிகளை சந்தித்தும், சுற்றுச்சுவர் மட்டும் அரைகுறையாக கட்டிமுடித்துள்ளனர். விரைவில் பூங்கா அமைக்க வேண்டும்.எம்.ராஜேஸ்வரி, லட்சுமி நகர் குடியிருப்போர் சங்கம்.போதை

பூங்கா வேண்டும்மாநகராட்சி, 46வது வார்டுக்குட்பட்ட கணபதி, லட்சுமி நகர் பகுதியில் பூங்காவுக்கு ஒதுக்கப்பட்ட இடத்தில், எந்தவொரு பணியும் ஆரம்பிக்கப்படவில்லை. பலமுறை இப்பகுதியில், பூங்கா அமைக்க அதிகாரிகளை சந்தித்தும், சுற்றுச்சுவர் மட்டும் அரைகுறையாக கட்டிமுடித்துள்ளனர். விரைவில் பூங்கா அமைக்க வேண்டும்.எம்.ராஜேஸ்வரி, லட்சுமி நகர் குடியிருப்போர் சங்கம்.
போதை ஆட்டம்சிட்ரா அருகேயுள்ள பூங்கா நகரில், இரவு நேரங்களில் கூடும் கல்லுாரி மாணவர்கள் கஞ்சா புகைப்பது வாடிக்கையாகி விட்டது. போதையில் அப்பகுதியை கடக்கும் பெண்களிடம், அத்துமீறுவதும் தொடர் செயலாக உள்ளது. போலீசார் கண்காணிப்பு இரவு நேரங்களிலும் இப்பகுதியில் தேவை.- கே.மகேஷ், பூங்கா நகர் குடியிருப்போர் சங்கம்.
டாக்டர்கள் 'லேட்'* மலுமிச்சம்பட்டி, இ.எஸ்.ஐ., மருத்துவமனையில் சரியான நேரத்துக்கு மருத்துவர்கள் வருவதில்லை. இதனால் நோய்வாய்ப்பட்டு வரும் தொழிலாளிகள் பெரிதும் அவதிக்குள்ளாகின்றனர். காலை, மாலை நேரங்களில் மருத்துவரின் கவனக்குறைவால் பலர் பாதிப்படைகின்றனர்.- எச். கண்ணன், மலுமிச்சம்பட்டி.
திருட்டு பயம்உக்கடம், பொன்விழா ஜி.எம்.நகரில் அடிக்கடி திருட்டு நடக்கிறது. இதனால் பொதுமக்கள் இரவு நேரங்களில் வெளியில் நடமாடவே பெரிதும் அச்சப்படுகின்றனர். கடந்த மாதத்தில் மட்டும் ஐந்துக்கு மேற்பட்ட திருட்டுகள் நடந்துள்ளன. போலீசார் கண்காணிப்பு தேவை.- வி.எம்.ஷாஜ், உக்கடம்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X