திருப்போரூர் சட்டசபை தொகுதியில், அ.தி.மு.க., பொதுச் செயலரும், முதல்வருமான ஜெயலலிதா போட்டியிட வேண்டும்' என, அப்பகுதி, அ.தி.மு.க.,வினரும், பொதுமக்களும் விருப்பம் தெரிவித்து உள்ளனர்.
நடைபெற உள்ள சட்டசபை தேர்தலில், ஜெயலலிதா, திருப்போரூர் தொகுதியில் போட்டியிட உள்ளதாக, அப்பகுதியில் பலத்த பேச்சு அடிபடுகிறது.
அதற்கான காரணங்களாக கூறப்படும் அம்சங்கள்:
*ஜெயலலிதா ஓய்வெடுக்க, அடிக்கடி வந்து செல்லும், பங்களா, சிறுதாவூர், பையனுார் ஊராட்சிகளில் உள்ளது
*இந்த தொகுதியில் போட்டியிட்டால், பிரசாரம் செய்வது எளிது என, ஜெயலலிதா கருதுகிறார்
*போட்டியிட்டால், வெற்றி வாய்ப்பு எப்படி இருக்கும் என, உளவுத் துறையினர் மற்றும் ஜெயலலிதாவுக்கு நெருக்கமான சிலர், கடந்த சில நாட்களாக, தொகுதியில் முகாமிட்டு விரிவாக ஆய்வு நடத்தியுள்ளனர்.
இந்த காரணங்களால், தற்போது, ஆர்.கே.நகர் தொகுதி, எம்.எல்.ஏ.,வாக இருக்கும் ஜெயலலிதா, தொகுதி மாறி, திருப்போரூரில் போட்டியிடலாம் என, அப்பகுதி, அ.தி.மு.க.,வினர் நம்புகின்றனர். அவ்வாறு போட்டியிட்டால், தொகுதி வளம் பெறும் என, பொதுமக்களும் விருப்பம் தெரிவித்து உள்ளனர். தங்கள்கருத்துகளை, கட்சி மேலிடத்திற்கு, கட்சியினரும், உளவுத்துறையினரிடம், பொதுமக்களும் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.
தற்போதைய எம்.எல்.ஏ., தண்டரை மனோகரனுக்கு, மீண்டும் போட்டியிட வாய்ப்பு வழங்கப்படாது என்பது உறுதியாகியுள்ளதாக, கட்சியினர் பேசிக் கொள்கின்றனர். அதை உறுதிபடுத்துவது போல, கட்சியில் விருப்ப மனு அளித்திருந்த, மாமல்லபுரம் பேரூராட்சி தலைவர் கோதண்டபாணி, திருக்கழுக்குன்றம் ஒன்றிய செயலர் ஆறுமுகம் ஆகியோர் நேர்காணலில் பங்கேற்றுள்ளனர். மனோகரனை, நேர்காணலுக்கு அழைக்கவில்லை. நேர்காணலுக்கு வந்த இருவரிடமும், திருப்போரூரில் கட்சிக்கு வெற்றி வாய்ப்பு எப்படி உள்ளது? தான் போட்டியிட்டால், வெற்றி பெறமுடியுமா? அதற்கு என்னென்ன செய்ய வேண்டும் என, ஜெயலலிதா கேட்டதாக கூறப்படுகிறது.
மனோகரனுக்கு மறுப்பு ஏன்?
தொகுதியின்
தற்போதைய, அ.தி.மு.க., - எம்.எல்.ஏ., மனோகரன் மீது, தொகுதியில் ஏராளமான
அதிருப்தி நிலவுவதால், அவருக்கு இந்த முறை போட்டியிட வாய்ப்பு வழங்கப்படாது என, கூறப்படுகிறது.
அதற்கான காரணங்களாக, தொகுதியில் அடிபடும் பேச்சுக்கள்:
*இதற்கு முன் இவர், காங்கிரஸ் கட்சியில் இருந்துள்ளார்
*கட்சியினர் அளித்த பல்வேறு புகார்களால், சமீபத்தில், இவரிடம் இருந்த, காஞ்சிபுரம் மத்திய மாவட்ட செயலர் பதவி பறிக்கப்பட்டது
*கட்சியினரை, இவர் மதிப்பதில்லை என்ற குற்றச்சாட்டு, பல ஆண்டுகளாக நிலவி வருகிறது
*ஒன்றிய செயலராக இருக்கும் வரை, புகார்கள் எதுவும் தலைமைக்கு தெரியாதவாறு பார்த்து கொண்ட இவரால், மாவட்ட செயலர் பதவி ஏற்றதும் முடியாமல் போனது
*யார் வணக்கம் சொன்னாலும், பதிலுக்கு வணக்கம் சொல்வதில்லை என்பது, இவர் மீது கூறப்படும் புகார்களில் முதன்மையானது.
- நமது நிருபர் -
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
வாசகர் கருத்து (53)
Reply
Reply
Reply