மேலும் ஒரு சங்ககால 'மாறன்' நாணயம் கண்டுபிடிப்பு: இரா.கிருஷ்ணமூர்த்தி, தலைவர், தென்னிந்திய நாணயவியல் ஆய்வுக் கழகம், சென்னை

Added : மார் 23, 2016 | கருத்துகள் (4) | |
Advertisement
முப்பது ஆண்டுகளுக்கு முன், மதுரையில் நான் வாங்கி சேகரித்த சங்ககால பாண்டியர் நாணயங்களை, பல வேலை பளுவின் காரணமாக, முழுமையாக ஆய்வு செய்யாமல் வைத்திருந்தேன்.சென்ற மாதம், ஜெர்மன் நாட்டைச் சேர்ந்த நாணயவியல் அறிஞர் ஒருவர், நான் எழுதி வெளிவந்துள்ள, 'Sangam Age Tamil Coins' என்ற நுாலில் உள்ள சில நாணயங்களின் புகைப்படங்கள் தேவை என்றும், அந்த நாணயங்களின் புகைப்படங்களை கொடுத்து உதவுமாறும்,
மேலும் ஒரு சங்ககால 'மாறன்' நாணயம் கண்டுபிடிப்பு: இரா.கிருஷ்ணமூர்த்தி, தலைவர், தென்னிந்திய நாணயவியல் ஆய்வுக் கழகம், சென்னை

முப்பது ஆண்டுகளுக்கு முன், மதுரையில் நான் வாங்கி சேகரித்த சங்ககால பாண்டியர் நாணயங்களை, பல வேலை பளுவின் காரணமாக, முழுமையாக ஆய்வு செய்யாமல் வைத்திருந்தேன்.

சென்ற மாதம், ஜெர்மன் நாட்டைச் சேர்ந்த நாணயவியல் அறிஞர் ஒருவர், நான் எழுதி வெளிவந்துள்ள, 'Sangam Age Tamil Coins' என்ற நுாலில் உள்ள சில நாணயங்களின் புகைப்படங்கள் தேவை என்றும், அந்த நாணயங்களின் புகைப்படங்களை கொடுத்து உதவுமாறும், மும்பையிலுள்ள நண்பர் ஒருவர் மூலம் வேண்டிக் கொண்டார்.அந்த ஜெர்மானிய நாணயவியல் அறிஞர், ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் மற்றும் இந்தியாவில் பஞ்சாப், ராஜஸ்தான், குஜராத், மத்திய பிரதேசம் ஆகிய பகுதிகளில், இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் ஆட்சி செய்த, சிறு குடியரசுகள் வெளியிட்ட நாணயங்கள் குறித்து, அருமையான ஆங்கில நுால் ஒன்றை வெளியிட்டுள்ளார்.அதேபோல் அவர், ஆந்திர மாநிலத்திலும், தமிழகத்திலும், இலங்கையிலும் கண்டெடுக்கப்பட்ட மிகத் தொன்மையான நாணயங்களை ஆய்வு செய்து, நுால் வெளியிட விரும்பினார்.

அவரது அந்தச் சிறந்த பணிக்கு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டுமென்ற நோக்கில் நான், காகித கூடுகளில் பத்திரமாகப் பாதுகாத்து வரும் நாணயங்களை மீண்டும் எடுத்துப் பார்த்தேன். அப்போது நான் முன்பு கவனிக்காத ஒரு நாணயம், என் கண்ணில் பட்டது. அந்த நாணயம் சங்ககால ஆய்விற்கு மிக முக்கியமானது என்பதை உணர்ந்தேன்.அந்த நாணயத்தை பல நாட்களாக, மிக கவனமாக சுத்தம் செய்து, அதில் கண்டவற்றை இங்கு வெளியிட்டுள்ளேன்.நான் ஆய்வு செய்த நாணயத்தைப் பற்றிய குறிப்புகளை இங்கே கொடுத்துள்ளேன்.முன்புறம்: கீழ் பகுதியில் யானை ஒன்று வலப்பக்கம் நோக்கி நிற்கிறது. உருவமும், அதன்மேல் உள்ள எழுத்துக்களும் மிகத் தேய்ந்த நிலையில் உள்ளதால், அதன் சில அங்கங்களை வைத்து முடிவிற்கு வந்தேன்.

யானையின் மேல் இடப்பக்கத்தில்'மா' என்ற எழுத்து உள்ளது. இது, மவுரிய-பிராமி வகை எழுத்து. அதை அடுத்து 'ற' என்ற எழுத்து உள்ளது. இது, தமிழ்-பிராமி வகையைச் சேர்ந்தது. அதற்கு அடுத்ததாக, 'ன்' என்ற எழுத்து உள்ளது. இதுவும், தமிழ்-பிராமி வகையைச் சேர்ந்தது. ஆக, இந்த மூன்று எழுத்துக்களையும் சேர்த்து, 'மாறன்' என்று படிக்க முடிகிறது.பின்புறம்: நாணயத்தின் நடுவில், வேலியிட்ட மரம் போன்ற சின்னம் உள்ளது. இச்சின்னத்தின் வலது பக்கத்தில், இரண்டு மரக்கிளைகளைக் காண முடிகிறது. வலது பக்கத்தின் அடி மூலையில், ஆறு முகடுகளைக் கொண்ட மலைச்சின்னம் உள்ளது. ஆறு முகடுகளில், இரண்டு முகடுகள் உள்ள பகுதி உடைந்துவிட்டதால், நான்கு முகடுகள் மட்டும் தான் தெரிகின்றன. இந்த ஆறு வளைவு முகட்டின் மேல், 'டவுரின்' இலச்சினை மேல் நோக்கி சென்று, மரத்தின் உச்சிப் பகுதியைத் தொட்டு நிற்கிறது.மரத்தின் இடப்பகுதி தான், நம் ஆய்விற்கு முக்கியமான பகுதி. இப்பகுதியில், ஒரு முக்கோண எல்லைக்கோடு உள்ளது. அந்த எல்லைக் கோட்டின் தலைப்பகுதி சிதைந்துள்ளது. இந்த எல்லைக் கோட்டிற்கு உள்ளே, மூன்று எழுத்துக்கள் மிகத் தெளிவாக உள்ளன.

இந்த மூன்று எழுத்துக்களும், இங்கு கொடுக்கப்பட்ட முறையில் அச்சாகியுள்ளன. முக்கோணத்தைத் திருப்பிப் போட்டால், நாம் மிக எளிதாக எழுத்துக்களை படிக்க முடியும்.
முதல் எழுத்து 'மா' மவுரிய பிராமி வகையைச் சேர்ந்தது. இரண்டாவது எழுத்து 'ற' தமிழ்-பிராமி வகையைச் சேர்ந்தது. மூன்றாவது எழுத்து 'ன்' இதுவும் தமிழ்-பிராமி எழுத்து முறையைச் சேர்ந்தது. ஆக, மூன்றையும் சேர்த்து படித்தால், 'மாறன்' என்ற பெயர் வருகிறது.இந்த நாணயத்தில் காணப்படும் 'மா' என்ற எழுத்து, தனித்தன்மையுடையது. இந்த வகை எழுத்து ஈரோடு மாவட்டம், கொடுமணல் அகழ்வாய்வில் கண்டெடுக்கப்பட்ட பல பானை ஓடுகளில் காண முடிகிறது. இதன் காலம், கி.மு., 5ம் நுாற்றாண்டாக, ஆராய்ச்சியாளர்கள் கூறியுள்ளனர்.நாணய அச்சடிப்பு முறை: இந்த நாணயம் உருவாக்கப்பட்ட முறை மிகத் தொன்மையானது. இரண்டு தகடுகளில், தனித்தனியாக அச்சிட்டு, அச்சிடப்படாத பின் பகுதியில் ஈயத்தை உருக்கிவிட்டு, அத்தகடுகளை இணைத்துள்ளது நன்கு தெரிகிறது. இந்த முறை வளர்ச்சியடைந்த பிறகு, நவீன அச்சுமுறை உருவானது.முடிவு: இந்த நாணயத்தை, கொற்கைப் பாண்டியன் வெளியிட்டிருக்கலாம். காலம், கி.மு., 4ம் நுாற்றாண்டு.இதற்கு முன், வெள்ளீயத்தால் ஆன, 'மாறன்' பெயர் பொறித்த சதுர வடிவ நாணயத்தை வெளியிட்டுள்ளேன்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
கதிரழகன், SSLC - சிவகங்கை, TN,இந்தியா
23-மார்-201616:37:26 IST Report Abuse
கதிரழகன், SSLC கிருத்துவ மதகுரு வீரமா முனிவர் செஞ்ச அட்டகாசம், நம்ம தமிழ் எழுத்துருவு மாறிப் போயி நம்மளால நம்ம கோவில் கல்வெட்டுகளையே படிக்க முடியாததாக்கி ஆயிட்டு. அவிங்க மொதல்ல கலாசார சின்னங்கள் மொழி பாரம்பரியம் எல்லாத்தையும் திட்டம் போட்டு யோசிச்சு பல நூறு வருசங்களா அழிச்சுகிட்டு வாராக.
Rate this:
Cancel
Rameeparithi - Bangalore,இந்தியா
23-மார்-201612:31:26 IST Report Abuse
Rameeparithi சங்க கால நாணயத்தை அச்சடித்த நுட்பத்தையும் ஆராய்ந்து எந்த விதமான தொழில் நுட்பம் பயன்படுத்தியது பற்றியும் இந்த இளைய தலைமுறைக்கு கூறவும்
Rate this:
Cancel
Muneeswaran Sadasivam - Abu dhabi,ஐக்கிய அரபு நாடுகள்
23-மார்-201609:42:08 IST Report Abuse
Muneeswaran Sadasivam Hats off to your work Sir. Our society is grateful to you...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X