கருவேலமரங்களை கண்டாலே அழிப்பு: விருதுநகர் தாத்தாவுக்கு சல்யூட்

Added : மார் 23, 2016 | கருத்துகள் (15) | |
Advertisement
விருதுநகர்:விருதுநகர் சிவஞானபுரம் ஊராட்சி கருப்பசாமி நகர் மற்றும் ரோசல்பட்டி ஊராட்சி பாண்டியன் நகர் பகுதிகளில் உள்ள கருவேலம் மரங்களை தனி மனிதர் ஒருவர் அகற்றி வருகிறார்.விருதுநகர் மாவட்டம் வறட்சி மாவட்டங்களில் ஒன்றாக உள்ளது. அதற்கு காரணமே மாவட்டம் முழுவதும் உள்ள கருவேலம் மரங்களே என ஆய்வு கூறுகிறது. விருதுநகரில் உள்ள கருப்பசாமி நகர் மற்றும் பாண்டியன் நகர்
கருவேலமரங்களை கண்டாலே  அழிப்பு:  விருதுநகர் தாத்தாவுக்கு சல்யூட்

விருதுநகர்:விருதுநகர் சிவஞானபுரம் ஊராட்சி கருப்பசாமி நகர் மற்றும் ரோசல்பட்டி ஊராட்சி பாண்டியன் நகர் பகுதிகளில் உள்ள கருவேலம் மரங்களை தனி மனிதர் ஒருவர் அகற்றி வருகிறார்.
விருதுநகர் மாவட்டம் வறட்சி மாவட்டங்களில் ஒன்றாக உள்ளது. அதற்கு காரணமே மாவட்டம் முழுவதும் உள்ள கருவேலம் மரங்களே என ஆய்வு கூறுகிறது. விருதுநகரில் உள்ள கருப்பசாமி நகர் மற்றும் பாண்டியன் நகர் பகுதிகளில் கருவேலம் மரங்கள் அடர்ந்து வளர்ந்துள்ளன . இதனால் அப்பகுதி மக்களுக்கு பல்வேறு உடல் சார்ந்த பிரச்னைகள் மற்றும் சுற்றுசூழல் பாதிப்புகள் ஏற்படுகிறது. தேடி, தேடி அகற்றம்இதைதொடர்ந்து கருவேலம் மரங்களுக்கு எதிராக, பாண்டியன் நகரை சேர்ந்த காளிதாஸ், 60 ,என்பவர் "பட்ஸ் டிரஸ்ட்' எனும் அமைப்பை துவங்கினார். அவ்வமைப்பில் தன் மகன் உட்பட நண்பர்கள் சிலரை சேர்த்து கொண்டார். அதன் மூலம் கிடைக்கும் நிதியை கொண்டு கருப்பசாமி நகர் மற்றும் பாண்டியன் நகர் பகுதிகளில் உள்ள கருவேலம் மரங்களை தேடி தேடி அகற்ற ஆரம்பித்தார். தற்போது 12 ஏக்கர் பரப்பளவில் உள்ள கருவேலம் மரங்களை முழுமையாக அகற்றி உள்ளார்.இதற்காக மண் அள்ளும் இயந்திரங்களை வாடகைக்கு வாங்கி இவற்றை அகற்றும் பணியில் தீவிரம் காட்டி வருகிறார் .


மக்கள் ஒத்துழைப்பு:

அவர் கூறுகையில், ""கருவேலம் மரங்களின் பாதிப்பு எவ்வளவு அதிகம் என்பது தெரிந்ததும்,நம்மை சுற்றி இத்தகைய பாதிப்புள்ள உயிர்கொல்லி மரங்கள் இருக்கின்றனவா என தோன்றியது. இதை ஒழிக்க ஏதாவது செய்ய வேண்டும் என்ற எண்ணத்தில் தான் "பட்ஸ்' அமைப்பை துவக்கினேன். தற்போது கருப்பசாமி நகரில் உள்ள கருவேலம் மரங்களை அகற்றி வருகிறோம். இப்பகுதி மக்களின் ஒத்துழைப்பு நன்றாக உள்ளதால் அகற்றும் பணி எளிதாக உள்ளது.


மனதிற்கு மகிழ்ச்சி:

கருவேலம் மரங்களில் வேர்களை ஒரு அடி வரை எடுத்தால் கூட போதும் திரும்ப வளராது. கருவேலம் மரங்களை ஒழித்தால் தான் சுத்தமான காற்று , நிலத்தடிநீர் கிடைக்கும். ஏறையநாயக்கர் ஊரணியில் உள்ள கருவேலம் மரங்களை அகற்றி, தற்போது அதில் தண்ணீரை பார்க்கும்போது மனதிற்கு மகிழ்ச்சியாக உள்ளது.


சுற்றுசூழல் :

விருதுநகர் முழுவதும் கருவேலம் மரங்களை அகற்றி வேம்பு, புங்கை மரங்களை நடும் பணியில் ஈடுபட்டால் தான் சுற்றுசூழல் பாதுகாக்கப்படும். அதற்கான பணியை தற்போதுதான் துவக்கி உள்ளோம். இன்னும் செல்ல வேண்டிய தூரம் அதிகம் உள்ளது,'' என்றார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து (15)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
வேழவேந்தன்.க - Pudukkottai,இந்தியா
23-மார்-201617:36:58 IST Report Abuse
வேழவேந்தன்.க அய்யா அது "கருவேலமரம்" அல்ல. கருவேல மரம். நம் நாட்டு மரம். நிலம் பண்பாடும்: குளிர்ச்சி மிக்கது. இதிலிருந்து வேளாண்மைக்குத் தேவையான கலப்பை மற்றும் பலகைகள் செய்யலாம். ஆனால்,1960 களில் வெளிநாட்டிலிருந்து கொண்டு வரப்பட்ட காட்டுக்கருவை / வேலிக்கருவை / சீமைக்கருவை என்றழைக்கப்படும் மரங்கள் தான் சுற்றுச்சூழலுக்கும், நீராதாரத்திற்கும் கேடு தரும் மரமாகும்.
Rate this:
Cancel
Karthi - tricky  ( Posted via: Dinamalar Android App )
23-மார்-201616:07:15 IST Report Abuse
Karthi வாழ்த்துக்கள் நன்றி ஐயா
Rate this:
Cancel
ஈஸ்வரன் - Palani  ( Posted via: Dinamalar Android App )
23-மார்-201615:46:40 IST Report Abuse
ஈஸ்வரன் இந்த சீமை கருவேல மரம் மிகமிக ஆபத்தானது. நமது மக்களும் அரசும் இதை அவ்வளவு பெரிய விஷயமாக கருதுவதில்லை. இதனால் மிகப் பல நோய்கள் வருகின்றன.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X