அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சி, அ.தி.மு.க.,வுக்கு நிபந்தனையுடன் ஆதரவு அளித்துள்ளது.இதுகுறித்து, அக்கட்சியின் தேசிய செயலர் தேவராஜன், தமிழக பொதுச் செயலரும், உசிலம்பட்டி எம்.எல்.ஏ.,வுமான, பி.வி.கதிரவன் ஆகியோர் கூறியதாவது:
சட்டசபை தேர்தலில், அ.தி.மு.க.,வுக்கு ஆதரவு அளிப்பது என, மாநில செயற்குழு மற்றும் மாவட்ட செயலர்கள் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது.
இதையடுத்து, அ.தி.மு.க., பொதுச் செயலரை சந்தித்து பேசினோம். உசிலம்பட்டி உட்பட, நான்கு தொகுதிகளை ஒதுக்கக்கோரி, அ.தி.மு.க., தலைமையிடம் கடிதம் அளித்தோம். அத்துடன், புதுச்சேரியிலும், ஒரு தொகுதியை ஒதுக்க கோரியுள்ளோம்; ஆலோசிப்பதாக கூறியுள்ளனர்.இதுகுறித்து, மத்திய குழுவுடன் ஆலோசித்தபோது, மேலும் அதிக தொகுதிகளை கேட்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. அ.தி.மு.க.,வுடன் பேச, ஐவர் குழு அமைக்கப்பட்டுள்ளது. மத்திய குழுவும், ஐவர் குழுவும் பேசி, இறுதி முடிவு எடுப்போம். எங்களுடைய, 'சிங்கம்' சின்னத்திலேயே போட்டியிடவும் தீர்மானித்துள்ளோம்.இவ்வாறு அவர்கள் கூறினர். - நமது நிருபர் -