புதுடில்லி;உலகின் மிகவும் பிரபலமான, பிரிட்டனின் லண்டனில் உள்ள, 'மேடம் துஷாட்ஸ்' மெழுகு சிலை அருங்காட்சியகத்தில், பிரதமர் மோடியைத் தொடர்ந்து, டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலின் சிலையும் நிறுவப்பட உள்ளது.ஆம் ஆத்மி கட்சியின் தலைவரான அரவிந்த் கெஜ்ரிவால், டில்லி முதல்வராக உள்ளார். லண்டனில் உள்ள மெழுகு சிலை அருங்காட்சியகத்தில் அவருடைய மெழுகு சிலை வைக்க அனுமதி கோரி, கெஜ்ரிவாலுக்கு கடந்த வாரம் கடிதம் அனுப்பியுள்ளது அருங்காட்சிய நிர்வாகம்.
டில்லியில், அடுத்த ஆண்டு அமைய உள்ள இந்த அருங்காட்சியக கிளையிலும், கெஜ்ரிவாலின் சிலை வைக்கப்பட உள்ளது.உலகப் புகழ் பெற்ற தலைவர்கள், நடிகர்கள், விளையாட்டு வீரர்கள் போன்றவர்களின் மெழுகு சிலைகள் லண்டனில் உள்ள அருங்காட்சியகத்தில் இடம்பெற்றுள்ளன. சமீபத்தில், பிரதமர் மோடியின் மெழுகு சிலை வைக்க அவருடைய அளவுகள் எடுக்கப்பட்டன.கெஜ்ரிவாலுக்கு, அருங்காட்சியக நிர்வாகம் சார்பில் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. இந்திய அரசியலில் அவர் செய்துள்ள புரட்சிக்காக, சிலை அமைக்கப்பட உள்ளதாக அந்தக் கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.
இந்திய பிரபலங்கள்...உலகப் புகழ்பெற்ற இந்த அருங்காட்சியகத்துக்கு உலகின் பல்வேறு நாடுகளில் கிளைகள் உள்ளன. அந்த வரிசையில் டில்லியிலும் அமைக்க அனுமதி அளிக்கப்
பட்டுள்ளது. லண்டன் அருங்காட்சியகத்தில் மகாத்மா காந்தி, இந்திரா, பாலிவுட் நட்சத்திரங்கள் அமிதாப், ஷாரூக் கான், சல்மான் கான், ஐஸ்வர்யா ராய், கரீனா கபூர், மாதுரி தீட்சித், ஹிருத்திக் ரோஷன், முன்னாள் கிரிக்கெட் வீரர் சச்சின் ஆகியோருடைய சிலைகள் இடம் பெற்றுள்ளன.