கோர்ட் செய்தி

தமிழ்நாடு

பதிவு செய்த நாள் :
விசாரணைக்கு 20 மாதம்; தீர்ப்புக்கு 22 மாதம்
தேர்தல் வழக்கில் தான் இந்த கூத்து

பொதுவாக, எந்த வழக்கானாலும், உடனடியாக விசாரணை நடந்து, தீர்ப்பு வர வேண்டும் என்ற எதிர்பார்ப்பு, அனைவருக்கும் உண்டு. ஆனால், தீர்ப்பு வழங்க, 22 மாதங்கள் எடுத்து கொண்ட தேர்தல் வழக்கு பற்றி யாருக்கு தெரியும். அது நடந்தது, வேறு எந்த நீதிமன்றத்திலும் அல்ல; சென்னை உயர் நீதிமன்றத்தில் தான்.

 விசாரணைக்கு 20 மாதம்; தீர்ப்புக்கு 22 மாதம்:தேர்தல் வழக்கில் தான் இந்த கூத்து

இந்த வழக்கில் விசாரணை நடந்தது, 20 மாதங்கள்; தீர்ப்புக்காக, தேதி தள்ளி வைக்கப்பட்டு, 22 மாதங்களுக்கு பின், உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இந்த சுவாரஸ்யமான வழக்கின் விவரம் இதோ:

கடந்த, 1996 சட்டசபை தேர்தலில், தி.மு.க., உடன், மூப்பனார் தலைமையிலான தமிழ் மாநில காங்., அணி சேர்ந்தது. இந்த அணி, மகத்தான வெற்றி பெற்றது.அப்போது, திருநெல்வேலி மாவட்டம், சேரன்மகாதேவி தொகுதியில், த.மா.கா., சார்பில் போட்டியிட்டவர் வேல்துரை. இவரை எதிர்த்து போட்டியிட்டவர், முன்னாள் சபாநாயகர் பி.எச்.பாண்டியன். தேர்தலில், வேல்துரை வெற்றி பெற்றார்.

அவரின் வெற்றியை எதிர்த்து, சென்னை உயர் நீதிமன்றத்தில், பி.எச்.பாண்டியன் வழக்கு தொடுத்தார். இந்த வழக்கு விசாரணை, உயர் நீதிமன்றத்தில், 20 மாதங்களாக நடந்தது.


நீதிபதி ஜெயசிம்ம பாபு, வழக்கை விசாரித்தார். 1996 ஜூன் 24ம் தேதி, தேர்தல் வழக்கு தொடரப்பட்டது. 1998 பிப்., 24ம் தேதி, விசாரணை முடிந்தது; தீர்ப்பு தேதி தள்ளி வைக்கப்பட்டது.இந்த வழக்கில், 1999 டிச., 29ம் தேதி, தீர்ப்பு வழங்கப்பட்டது.
பி.எச்.பாண்டியன் தொடர்ந்த வழக்கு, தள்ளுபடி செய்யப்பட்டது. அதாவது, 22 மாதங்களுக்கு பின், இந்த தீர்ப்பு வழங்கப்பட்டது. தேர்தல் வழக்கில், விசாரணை முடிந்து தீர்ப்பு தள்ளிவைக்கப்பட்ட நிலையில், இவ்வளவு மாதங்கள் கழித்து தீர்ப்பு வழங்கப்பட்டது, இந்த வழக்கில் தான்.தீர்ப்பு வழங்கியதற்கு, 22 மாதங்களானது மட்டுமல்லாமல், தீர்ப்பின் நகல் வழங்குவதற்கும், 11 மாதங்கள் எடுத்து கொள்ளப்பட்டது தான், முக்கியமான விஷயம்.
உயர் நீதிமன்றத்தில், தேர்தல் வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டதை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில், பி.எச்.பாண்டியன் மனு தாக்கல் செய்தார்.

மனுவை விசாரித்த, நீதிபதிகள் லகோத்தி, அசோக் பன் அடங்கிய, 'டிவிஷன் பெஞ்ச்', 2001 செப்டம்பரில் தீர்ப்பளித்தது.பி.எச்.பாண்டியன் தரப்பில், மூத்த வழக்கறிஞர் சிவசுப்ரமணியம் ஆஜராகி, ''22 மாதங்களுக்கு பின், உயர் நீதிமன்றத்தில் தீர்ப்பு வழங்கப்பட்டு உள்ளது; தீர்ப்பு எழுதும் போது, நாங்கள் எழுப்பிய வாதங்கள் பரிசீலிக்கப்படாமல் இருக்கலாம்,''என்றார்.
'இந்த ஒரு காரணத்திற்காகவே, உயர் நீதிமன்ற உத்தரவை ரத்து செய்து விட்டு, புதிதாக விசாரிக்கும்படி திருப்பி அனுப்பலாம்' என, உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்தனர். அதற்கு, மூத்த வழக்கறிஞர், ''மீண்டும் உயர் நீதிமன்றத்துக்கு அனுப்புவதால், எந்த பலனுமில்லை; அடுத்த தேர்தலும் நடந்து முடிந்து விட்டது,'' என்றார்.

Advertisement

'இந்த வழக்கில் எழுப்பப்பட்ட ஊழல் குற்றச்சாட்டுக்கு, போதிய ஆதாரமில்லை' என கூறிய உச்ச நீதிமன்றம், சில அறிவுரைகளை உயர் நீதிமன்றத்துக்கு வழங்கியது. அதில் கூறியிருப்பதாவது:விசாரணை முடிந்து, தீர்ப்பு தேதியை தள்ளி வைத்து, 22 மாதங்களுக்கு பின், உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
தேர்தல் வழக்கில், இவ்வளவு நீண்ட கால தாமதம் செய்தது முறையற்றது. 22 மாதங்களாக தீர்ப்பு வழங்காமல் இருந்ததை, நியாயப்படுத்த முடியாது. இத்தகைய தாமதம், விமர்சனத்துக்கு வழிவகுக்கும்; அதற்கு இடம் கொடுக்கக் கூடாது.தீர்ப்பின் நகலை அளிக்கவும், 11 மாதங்களாகி உள்ளது.

உயர் நீதிமன்றத்தில், தேர்தல் வழக்கை, சாதாரணமாக அணுகுவது ஏன் என்பதை, எங்களால் புரிந்து கொள்ள முடியவில்லை. தீர்ப்பின் நகல், கால தாமதமாக வழங்குவது, ஆட்சேபனைக்குரியது. இந்த விஷயத்தை, உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி கவனிக்க வேண்டும்.இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டு உள்ளது.

- நமது நிருபர் -

Advertisement

வாசகர் கருத்து (14)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Balaji - Khaithan,குவைத்
27-மார்-201614:53:31 IST Report Abuse

Balajiநீதித்துறையில் பல மாற்றங்களை மேற்கொள்ள வேண்டும். ஒவ்வொரு வழக்குக்கும் கால நிர்ணயித்தல் வேண்டும். இதுபோன்ற தேர்தல் வழக்குகளை விசாரிக்க தேர்தல் சமயத்தில் சிறப்பு நீதிமன்றங்கள் செயல் படுத்த வேண்டும். அதேபோல மிகமுக்கியமானது இவர்களுக்கு விடப்படும் விடுமுறை தேவையற்றது. அதை நீக்க வேண்டும். ஆயிரம் குற்றவாளிகள் விடுவிக்கப்படலாம் ஒரு நிரபராதி கூட தண்டிக்கப்பட்டு விட கூடாது என்பது தான் மூலம். அதே போல காலம் கடந்து வழங்கப்பட்ட நீதியும் மறுக்கப்பட்ட நீதியாகத்தான் கருதவேண்டும் ....

Rate this:
Chandramoulli - Mumbai,இந்தியா
27-மார்-201612:30:42 IST Report Abuse

Chandramoulliஇதிலும் அரசியல் உள்ளது. என்றைக்கு நீதி , ராணுவம் , நிதி , ஒழுங்காக செயல்படுகிறதோ அன்று தான் இந்தியாவிற்கு விடுதலை . இப்போது சுதந்திரம் கிடைத்தும் ஒரு சில பணக்காரர்களால் எல்லாவற்றையும் நிறுத்தி வைக்கும் வல்லமை படைதர்வர்களாக உள்ளனர் . என்றைக்கு மாறுமோ இந்த நிலை .

Rate this:
K.Ravi - Abbasiya,குவைத்
27-மார்-201612:26:03 IST Report Abuse

K.Raviதன்மீது உள்ள சொத்துக்குவிப்பு வழக்கை பல ஆண்டு காலம் இழுத்து அடித்தவர்கள் இதில் கருத்துக்கூறுவது வேடிக்கையானது.

Rate this:
மேலும் 11 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X