பொது செய்தி

இந்தியா

பதிவு செய்த நாள் :
உச்சக்கட்டம்
விமான நிலையங்களில் பாதுகாப்பு உச்சக்கட்டம்
பயணிகளின் ஷூக்களை கழற்றி சோதனை

புதுடில்லி:பிரஸல்ஸ் பயங்கரவாத தாக்குதலை தொடர்ந்து, இந்தியாவின், முக்கிய விமான நிலையங்களில் பாதுகாப்பு பன்மடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளது. 'சல்லடை போட்டு' சோதனை செய்த பின்னரே, விமானங்களுக்குள் பயணிகள் அனுமதிக்கப்படுகின்றனர்.

இந்திய விமான நிலையங்களில் பாதுகாப்பு உச்சக்கட்டம்:பயணிகளின் ஷூக்களை கழற்றி சோதனை

பெல்ஜியம் தலைநகர் பிரஸல்சில், விமான நிலையத்திலும், மெட்ரோ ரயில் நிலையத்திலும், சமீபத்தில் தற்கொலைப்படை தாக்குதல் நடத்தப்பட்டது. இதில், 35 பேர் கொல்லப்பட்டனர்; 300க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். இந்த சம்பவத்துக்கு, ஐ.எஸ்., பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது.

பெல்ஜியம் தாக்குதலை தொடர்ந்து, இந்தியாவின் முக்கிய விமான நிலையங்களில் பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. டில்லி, சென்னை, மும்பை, பெங்களூரு, ஐதராபாத், கோல்கட்டா, ஆமதாபாத் உள்ளிட்ட விமான நிலையங்களில் வழக்கமான பாதுகாப்பை தவிர, விமானத்திற்குள் ஏறும் முன், இரண்டாம் நிலை சோதனை செய்யப்படுகிறது.
உள்ளூர் போலீசாருடன், தொழிலக பாதுகாப்பு படையினர் இணைந்து, அனைத்து பயணிகளையும் முழுமையாக சோதனை செய்கின்றனர். பயணிகளின் கால் ஷூ, செருப்புமற்றும் பெல்ட்டுகளையும் கூட கழற்றி சோதனை நடைபெறுகிறது. கண்காணிப்பு பிரிவினரும்

கூடுதல் கவனத்துடன் செயல்படுமாறு, அறிவுறுத்தப்பட்டு உள்ளனர்.

விமான நிலைய வளாகத்திற்குள்ளும் சோதனைகள் நடைபெறுகின்றன.இதேபோல், சரக்குகள் அனைத்தும் முழு சோதனைக்கு பின்னரே விமானத்தில் அனுமதிக்கப்படுகின்றன. வெடிகுண்டு செயலிழக்கச் செய்யும் நிபுணர்களும், பயங்கரவாத தடுப்பு படையினரும், விமான நிலையங்களில்முகாமிட்டு கண்காணித்து வருகின்றனர்.
பிரான்சில் ஒருவர் கைது:பெல்ஜியம் தாக்குதலை தொடர்ந்து, மற்ற ஐரோப்பிய நாடுகளிலும் ஐ.எஸ்., பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தக்கூடும் என்ற அச்சத்தால் பாதுகாப்பு அதிகரிக்கப் பட்டுள்ளது.

கடந்த நவம்பரில் பயங்கரவாத தாக்குதலுக்கு ஆளான பிரான்ஸ் நாட்டில், உச்சபட்ச உஷார் நிலை அறிவிக்கப்பட்டு உள்ளது. பாரிஸ் நகரில் நடந்த தேடுதல் வேட்டையில், சந்தேகத்துக்கிடமான ஒருவரை, போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
இந்தியர்கள் மீட்பு:பயங்கரவாத தாக்குதலுக்கு ஆளான பிரஸல்ஸ் விமான நிலையத்தில் சிக்கியிருந்த இந்தியர்கள், சிறப்பு விமானம் மூலம் இந்தியா அழைத்து வரப்பட்டனர். பெல்ஜியத்தில் விமான நிலையங்கள் மூடப்பட்டுள்ளதால், அங்கிருந்த இந்தியர்கள், 214 பேரும், ஜெட் ஏர்வேஸ் விமான பணியாளர்களும் தாயகம் திரும்புவதில் சிக்கல் நீடித்தது.

இதையடுத்து, அவர்கள்அனைவரும் சாலை மார்க்கமாக, நெதர்லாந்து நாட்டின் ஆம்ஸ்டர்டாம் நகருக்கு அழைத்து செல்லப்பட்டனர்; அங்கிருந்து விமானம் மூலம் டில்லிக்கும், பின்னர் மும்பைக் கும் அழைத்து வரப்பட்டனர். அவர்களது உடைமை களை மற்றொரு விமானத்தில் எடுத்து வர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
6 பயங்கரவாதிகள் கைது: பெல்ஜியத்தில்,
பயங்கரவாத தாக்குதலில், காலித் மற்றும்

Advertisement

Advertisement

வாசகர் கருத்து (6)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Chandramoulli - Mumbai,இந்தியா
27-மார்-201612:27:30 IST Report Abuse

Chandramoulliஇந்தியாவில் உள்ள மக்கள் தொகை அதிக அளவில் இருக்கும் போது , அதற்க்கு தகுந்த பாதுகாப்பு கொடுப்பது என்பது இயலாத காரியம். அதுவும் பொது மக்கள் நடமாட கூடிய இடங்கள் அதிகம் உள்ள மும்பை ரயில் , ஷேர் மார்கெட் , டையமண்ட் மார்க்கெட் போன்ற இடங்களில் பாதுகாப்பு என்பது மிகவும் கடினம் . ஒரு சில தீவிரவாத இயக்கங்கள் இந்தியாவில் வாக்கு வாங்குவதற்கு அவர்களை உபயோகம் செய்து கொள்கின்றனர் . தவறு நடக்கும் இடம் அரசியல் கட்சிகளிடம் இருந்து ஓட்டு வாங்க நாட்டையே பலியாக்கு கின்றனர் .

Rate this:
K.Sugavanam - Salem,இந்தியா
27-மார்-201609:04:51 IST Report Abuse

K.Sugavanamபாதுகாப்பு சோதனை நம் பாதுகாப்புக்கு தானே...எனவே அனைவரும் ஒத்துழைக்க வேண்டும்...

Rate this:
Loganathan - Madurai,இந்தியா
27-மார்-201604:17:44 IST Report Abuse

Loganathan பெரும்பாலான நாடுகளில் ஷூ மற்றும் பெல்டு களை கழற்றி தான் சோதனை மற்றும் ஸ்கான் செய்கிறார்கள்.

Rate this:
மேலும் 3 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X