அரசியல் செய்தி

தமிழ்நாடு

பதிவு செய்த நாள் :
'பூத் சிலிப்' விவகாரத்தில் தேர்தல் கமிஷன் கண்டிப்பு:கட்சிகள் வழங்குவது செல்லாது என அறிவிப்பு

சென்னை:''தேர்தல் கமிஷன் சார்பில் வழங்கப்படும், 'பூத் சிலிப்' தேர்தல் பார்வையாளர் மேற்பார்வையில், வீடு வீடாக வழங்கப்படும். எனவே, அரசியல் கட்சிகள் வழங்கும் பூத் சிலிப் செல்லாது,'' என, தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி அறிவித்துள்ளார்.

'பூத் சிலிப்' விவகாரத்தில் தேர்தல் கமிஷன் கண்டிப்பு:கட்சிகள் வழங்குவது செல்லாது என அறிவிப்பு

தமிழக சட்டசபை தேர்தலை ஒட்டி, அங்கீகரிக்கப்பட்ட தேசிய மற்றும் மாநில

கட்சிகளின் ஆலோசனை கூட்டம், தலைமை செயலகத்தில் நேற்று நடந்தது. கூட்டத்திற்கு, தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி தலைமை வகித்தார்.
இதில், அ.தி.மு.க., சார்பில், பொள்ளாச்சி ஜெயராமன்; தி.மு.க., - இளங்கோவன்; பா.ஜ., - ராகவன், பாலசந்திரன்; மார்க்சிஸ்ட் கம்யூ., - சண்முகம், பாக்கியம்; காங்கிரஸ் - ஜோதி; தே.மு.தி.க., -ரவீந்திரன், சந்தோஷ்; இந்திய கம்யூ., - மூர்த்திஉள்ளிட்ட பலர் பங்கேற்றனர். கூட்டத்தில், தேர்தல் நடத்தை விதிகள், தேர்தல் செலவு கண்காணிப்பு தொடர்பான விளக்கங்கள், அரசியல் கட்சியினர் செய்ய வேண்டியவை, செய்யக் கூடாதவை, ஓட்டுப்பதிவு அன்று செய்ய வேண்டிய முறைகள், போன்றவை குறித்து விளக்கப் பட்டது.தேர்தல் செலவு கணக்கு எவ்வாறு

Advertisement

கணக்கிடப்படுகிறது; தேர்தல் விளம்பரம் மற்றும் வாகனங்களுக்கு ஆன்லைனில் அனுமதி பெறுவது குறித்தும் விவரிக்கப்பட்டது.கூட்டம் முடிந்த பின், ராஜேஷ் லக்கானி நிருபர்களிடம் கூறியதாவது:தேர்தல் கமிஷன் சார்பில், ஓட்டுச்சாவடி அலுவலர், வீடு வீடாகச் சென்று, பூத் சிலிப் வழங்குவார். இப்பணியானது, தேர்தல்பார்வையாளர் மேற்பார்வையில் நடைபெறும். இதில் தவறு எதுவும் நடந்தால், பார்வையாளரிடம் புகார் அளிக்கலாம்.

ஓட்டுச்சாவடி அலுவலர்கள் வினியோகம் செய்தது போக மீதமுள்ள பூத் சிலிப்புகளை யாரிடமும் வழங்காமல், அவர்களே வைத்திருக்க வேண்டும். ஓட்டுச்சாவடி அலுவலர், தேர்தல் அன்று ஓட்டுச்சாவடி முன், பூத் சிலிப் வாங்காதவர்களுக்குவழங்குவார். அரசியல் கட்சிகள் கொடுக்கும், பூத் சிலிப் செல்லாது.இவ்வாறு ராஜேஷ் லக்கானி தெரிவித்தார்.

Advertisement

வாசகர் கருத்து (31)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
மலரின் மகள் - EDINBURGH,யுனைடெட் கிங்டம்
27-மார்-201622:35:29 IST Report Abuse

மலரின் மகள்பூத் ஸ்லிப் என்றால் என்ன? எனக்கு ஒன்னும் தெரியவில்லை. மதுரையில் படிக்கும் என் தோழியிடம் கேட்டேன். நம்முடைய பெயர் ஓட்டுப் போடா லாயக்குதான் என்று தேர்தல் கமிசன் ஒரு லிஸ்ட் வைத்திருக்குமாம் அதை ஒரு சீட்டில் அச்சடித்து தருவார்களாம். அதை மே 16 ல் நாம் ஓட்டுப் போட வேண்டிய மரத்தடி பள்ளியில் பொய் ஒரு ஓரமாக உட்காந்திருக்கும் பெண்களிடம் பெற்றுக் கொள்ள வேண்டுமாம். அதைக் கொடுத்தால் விரலில் மை வைப்பார்களாம் என்றால். அது அன்றைக்கு ஒரு நாள் ஔர் முறை மட்டும் தான் அதுவும் அந்த பள்ளிக்கொடத்தில் மட்டும் தான் செல்லுபடியாகுமாம். கட்சி சின்னம் பொருத்தி அரசியல் கட்சிகள் கூட சீட்டு தருவார்களாம் அதனுடன் நல்ல கிரிச்ப்பா புத்தடம் புதியதாக வேறொரு சலிப்பும் தருவார்களாம். செவ்வக வடிவத்தில் மிகவும் அழகாக இருக்குமாம். அது இந்தியாவின் மூளை முடுக்கு ராசு அலவலகம் என்று எல்லா இடங்களிலும் 24/7 பயன் படுமாம். அதற்குத்தான் நல்ல மதிப்பாம். தேர்தல் கமிசன் தரும் லிஸ்டில் நம் பெயர் இருந்தால் தான் கட்சிகள் நமக்கு ஸ்லிப் தருமாம். எது நல்லது? சற்று விளக்குங்களேன்.

Rate this:
Chandramoulli - Mumbai,இந்தியா
27-மார்-201614:37:44 IST Report Abuse

Chandramoulliநானும் ரவுடி தான் என்ற வசனம் நினைவுக்கு வருகிறது >>>>>> பில்டிங் ஸ்ட்ராங் . பேஸ்மென்ட் வீக் . இதுவும் நினைவுக்கு வருகிறது .

Rate this:
Chandramoulli - Mumbai,இந்தியா
27-மார்-201611:49:09 IST Report Abuse

Chandramoulliமும்பையிலும் நடக்கிறது. எங்களுக்கு 4 வாக்குகள் உண்டு. வீட்டில் இருப்பவர்கள் நானும் எனது மனைவியும் தான் . மகள்கள் இருவரும் வேறு நகரங்களில் வேலை பார்க்கின்றனர் . 1 வாக்குக்கு 1500 வழங்கினார்கள் . நாங்கள் வாங்க வில்லை . பக்கத்துக்கு வீட்டில் உள்ளவர் எதிர் கட்சி நபர் என்றும் தெரியும். அவர்களும் 1500 வீதம் 7 நபர்களுக்கு வாங்கி கொண்டனர் . பூத் ஸ்லிப் கொடுத்தனர் . எல்லா இடங்களிலும் இது நடக்கிறது, தமிழகத்தில் நடப்பது போன்று ஊடகங்கள் தான் தமிழகத்தின் மானத்தை வாங்குகின்றனர் . தமிழர்களை தலை குனிய வைக்கின்றனர் . எல்லா கட்சிகளும் ஒன்று தான். அப்படியும் வாக்கு 55 % . கண்டு பிடியுங்கள் . வாக்கிற்கு இவ்வளவு பணம் கொடுத்ததும் ஏன் வாக்கு பதிவு 80 % வரவில்லை . எங்கள் தொகுதியில் வெற்றி பெற்றவர் வேறு கட்சியினர் . தேர்தலுக்கு பிறகு வேட்பாளர்கள் எல்லோரும் கூட்டணி வைத்து ஊழல் பணம் பிரித்து கொள்கின்றனர் . இதுதான் மும்பையில் உள்ள தொகுதியின் நிலவரம். இங்கு உள்ளவர்கள் எல்லோரும் பண முதலைகள் .

Rate this:
மேலும் 28 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X