பதிவு செய்த நாள் :
ராகுல் அப்செட்!

'விஜய்காந்த் எப்படியும் நம்மோடு தான் வருவார். அவருக்கு வேறு வழி கிடையாது' என, நம்பியிருந்த தி.மு.க., தலைவர் கருணாநிதிக்கு, அதிர்ச்சி வைத்தியம் அளித்து, மக்கள் நலக் கூட்டணியோடு சேர்ந்து விட்டார் கேப்டன்.

 ராகுல் 'அப்செட்'

தி.மு.க., தலைவர்கள் மற்றும் தொண்டர்களுக்கு இந்த செய்தி, 'ஷாக்' ஏற்படுத்த, இன்னொரு பக்கம், டில்லியிலும் அதிர்ச்சி அலைகளை உண்டாக்கியுள்ளது. விஜய்காந்த், தி.மு.க., -- - காங்., கூட்டணி பக்கம் வராமல் போனது, டில்லியில் உள்ள காங்.,

தலைவர்களுக்கு பெருத்த ஏமாற்றம். குறிப்பாக, ராகுல் படு, 'அப்செட்' என, சீனியர் காங்., தலைவர்கள் தெரிவிக்கின்றனர்.
தி.மு.க.,வோடு கூட்டணி அமைக்க, ராகுலுக்கு முதலில் விருப்பமில்லை. ஆனால், குலாம்நபிஆசாத் மற்றும் சில தமிழகத் தலைவர்கள், 'தி.மு.க.,வோடு மட்டுமே நாம் சேர முடியும்; வேறெந்த கட்சியும் நம்மை கிட்டேயே சேர்க்காது' என, ராகுலுக்கு ஆலோசனை சொன்னார்கள்.

'விஜய்காந்த், தி.மு.க., பக்கம் வந்து விடுவார்; அவர் தனியாக போட்டியிட முடியாது. அவருக்கு வேறு வழி கிடையாது. கருணாநிதி தன் அரசியல் திறமையால், எப்படியும் கேப்டனை கொண்டு வருவார்' என, இந்த தலைவர்கள் ராகுலிடம் சொல்ல, அவரும், 'சரி...' என, தி.மு.க.,கூட்டணிக்கு ஒத்துக் கொண்டாராம்.
தற்போது, விஜய்காந்த் வேறு பக்கம் போய் விட்டதால், வெறுத்துப் போய் விட்டார் ராகுல். 'உங்களை நம்பி கூட்டணிக்கு ஒத்துக் கொண்டேன்; நீங்கள் சொன்னது ஒன்று;

Advertisement

நடந்தது வேறு' என, ஆலோசனை கூறிய தலைவர்களிடம், கடுமையாகப் பேசினாராம் ராகுல். 'இப்போது கேப்டன் தான் இல்லையே. எனவே, காங்கிரசுக்கு அதிக தொகுதிகள் கேட்டு வாங்குங்கள். 60 தொகுதிக்கு குறையக் கூடாது' என, குலாம்நபி ஆசாத்திடம் கறாராக சொல்லி விட்டாராம் ராகுல். இதனால், சென்னையில் கருணாநிதியைச் சந்தித்த ஆசாத், அதிக தொகுதிகளைக் கேட்க, பேச்சு வார்த்தை இப்போதைக்கு தோல்வியில் முடிந்துள்ளது.

Advertisement

வாசகர் கருத்து (62)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Neelaa - Atlanta,யூ.எஸ்.ஏ
28-மார்-201601:55:02 IST Report Abuse

Neelaaஅய்யா, நான் செங்கொடனுங்க எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகணும் சாமி தம்பி ராகுலுக்கு அரசியல், கூட்டணி, தொகுதி பங்கீடு, விஜயகாந்த் கட்சி... இதப்பத்தி எல்லாம் தெரிய சத்தியமா வாய்ப்பே இல்ல அய்யா அவர் அப்படி சொன்னார் -ன்னு செய்தி அனுப்பறது காங்கிரஸ் மார்கெட்டிங் காரர்களின் வேல தான் சாமி எனக்கு ஒரு உம்ம தெரிஞ்சாகணும் சாமி

Rate this:
Tamilnesan - Muscat,ஓமன்
27-மார்-201615:06:18 IST Report Abuse

Tamilnesan நூறு ஆண்டு கால காங்கிரஸ் கட்சி சென்ற பாராளுமன்ற தேர்தலில் ஒரு தொகுதி கூட வெற்றி பெறவில்லை. ஒரு தொகுதி தவிர அனைத்திலும் டெபாசிட் காலி. பிஜேபி ஒரு தொகுதியில் வெற்றி. தற்போதுள்ள நிலவரப்படி காங்கிரஸ் கட்சி ஒரு தொகுதியில் கூட வெற்றி பெற வேண்டாம்......ஒரே ஒரு தொகுதியில் டெபாசிட் கிடைத்தாலே காங்கிரஸ் கட்சியை பொறுத்தவரை மொத்த தமிழ்நாட்டிலும் வெற்றி என்று கணக்கில் எடுத்து கொள்ளலாம். என்று காங்கிரஸ் கட்சி கர்மவீரர் காமராஜ் அவர்களை கொலை செய்ய முயன்றதோ அன்றே காங்கிரஸ் கட்சிக்கு தமிழ் நாட்டில் கல்லறை கட்டி முடிக்கப்பட்டு விட்டது. ஜெய் ஹிந்த்

Rate this:
vignesh - Sathy,இந்தியா
27-மார்-201614:33:28 IST Report Abuse

vigneshபழம் நழுவி எங்கே விழுந்தது என இன்னும் யாருக்குமே தெரியல

Rate this:
மேலும் 59 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X