பியூஸ் போன தமிழகம் Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

பதிவு செய்த நாள் :
பியூஸ் போன தமிழகம்

'அப்பாடா இப்போதாவது ஒருத்தர் உண்மையை போட்டு உடைத்தாரே!' என்ற நிம்மதி, திரைமறைவில் இருந்து ஆட்சி செய்யும் முதல்வராலும், 'டம்மி' அமைச்சர்களாலும் பாதிக்கப்பட்டவர்களிடம், உருவாகி உள்ளது.

 பியூஸ் போன தமிழகம்

நேற்று முன்தினம், டில்லியில், சி.ஐ.ஐ., எனப்படும் இந்திய தொழில் துறை கூட்டமைப்பு நடத்திய, 'யங் இந்தியா' மாநாட்டில், மத்திய மின் துறை அமைச்சர் பீயுஷ் கோயல், '28 மாநில முதல்வர்களை சந்தித்துவிட்டேன்; தமிழக முதல்வரை மட்டும் சந்திக்கவே முடியவில்லை.
பல முறை முயற்சி செய்த பின், அவரிடம் இருந்து, ஒரு தொலைபேசி அழைப்பு தான் வந்தது' என்று குமுறினார். தமிழகத்தில், முதல்வர், அலுவலகம் செல்வதே ஒரு பெரிய நிகழ்ச்சியாக கடந்த, ஐந்தாண்டுகளாக கொண்டாடப்பட்டு வருகிறது. அவரை வரவேற்க அமைச்சர்கள் அணிவகுப்பு என்ன, பூங்கொத்துக்கள் என்ன என்று, மகாமகத்திற்கு நிகரான அரிய நிகழ்ச்சியாக தான் கையாளப்பட்டு வருகிறது. அப்படி அலுவலகம் வந்தாலும், சராசரியாக, இரண்டு மணி நேரம் தான் அலுவலகத்தில் இருப்பார்.
அமைச்சர்களின் ஐவர் அணி, அதிகாரி களின் மூவர் அணி, முதல்வரை பார்க்க அனுமதியுள்ள நம்பர் 1, 2, 3 அதிகாரிகள் என, முதல்வரின் சிறிய சந்திப்பு வட்டம் பற்றி பல்வேறு விஷயங் கள் ஏற்கனவே எழுதப்பட்டு, அனை வரும் அறிந்த விஷயங்கள் தான். நிலை இப்படி இருக்க, வெளிநாட்டு துாதர்கள், தொழிலதிபர் கள் என, எந்த கொம்பனாலும் முதல்வரை பார்க்க முடியவில்லை என்ற புகாரும் உள்ளது.ஆனால், யாருக்கும் இதைப் பற்றி .

வெளிப்படையாக பேசுவதற்கு, 'தில்' இல்லைசெம்பரம்பாக்கம் விஷயத்தில் மட்டும் அது தலைதுாக்கியது; ஆனால், அவதுாறு வழக்கு மூலம் அமுக்கப்பட்டது. ஆனால், இந்த, 'பார்த்த விழி பார்த்தபடி பூத்திருக்க' பட்டியலில் சேர்ந்துள்ள, மத்திய அமைச்சர் பீயுஷ் கோயல், மேட்டரை போட்டு உடைத்து விட்டார்.
இது பற்றி அவர் ஆவேசமாக பேசியது:தமிழகத்தை பற்றிநிறைய விஷயங்களை பேசலாம். ஆனால், தேர்தல் நடத்தை விதி அமலில் உள்ளதால், சிலவற்றை மட்டும் கூறுகிறேன். ஒரு நாட்டுக்குள் தனி நாடாக தமிழகம் செயல்படுகிறது.

நான் (உதய் மின் திட்டம்) திட்டம் குறித்து, மாநில முதல்வர்கள், மின் துறை அமைச்சர்களை சந்தித்து பேசி வருகிறேன்.கடந்த, 22 மாதங்களில், 28 மாநில முதல்வர்களை சந்தித்து உள்ளேன். ஆனால், தமிழக முதல்வர் ஜெயலலிதாவை என்னால், இதுவரை சந்திக்க முடியவில்லை.
தமிழக மின் துறை அமைச்சரிடம் பேசினேன். அவர், 'நான் அம்மாவிடம் பேசிவிட்டு, திரும்ப அழைக்கிறேன்' என்றார். ஆனால், பதில் வர வில்லை. அந்த கட்சி எம்.பி.,க்கள், பார்லிமென்டில், வாயை திறப்பதில்லை. அவர்கள் சென்னையில், தணிக்கை செய்து அனுப்பப்பட்ட அறிக்கையை, அப்படியே வாசிக்கின்றனர்.
தெரிந்தவர், அறிந்தவர் மூலமாக சந்திக்க முயற்சித்த பின், ஒரு வழியாக அவர் (ஜெ.,), என்னை தொலைபேசியில் தொடர்பு கொண்டார். அப்போது, நாங்கள் பரிந்துரைத்த திட்டம் குறித்து விவாதிக்க, ஒரு குழுவை அனுப்புவதாக தெரி வித்தார். அதன்படி, அந்த குழு வந்தது. மின் துறை சீர்திருத்தம் தொடர்பாக விவாதிக்கப்பட்டது. ஆனால், இன்று வரை, ஒப்பந்தத்தில், தமிழகம்கையெழுத்து இடவில்லை.
அதேசமயம், எங்களின் அனைத்து விதிகளுக்கும் ஒப்பு கொள்வதாக, மற்ற மாநிலங்கள் உடனடியாக தகவல் தெரிவித்தன.
உதாரணத்திற்கு, உ.பி., முதல்வர் அகிலேஷ் யாதவ், எனக்கு கடிதம் எழுதினார். அதில், 'மக்கள் நலனுக்கான திட்டம் என நம்புகிறேன். இதனால், உதய் திட்டத்தில், மகிழ்ச்சியுடன் இணைகிறோம்' என, தெரிவித்திருந்தார்.

Advertisement

பீஹார் தேர்தலில், எங்களை தோற்கடித்த கட்சியின் புதிய அரசு, பதவி ஏற்ற, 15 நாட்களுக்கு உள்ளாகவே, அந்த திட்டத்தில் இணைய விருப்பம் தெரிவித்தது.

இதுபோல், பல்வேறு அரசியல் மற்றும் கொள்கை மாறுபாடுகள் இருந்தாலும், அதை எல்லாம் மனதில் கொள்ளாமல், எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்கள், நாங்கள் பரிந்துரைத்த திட்டங்களுக்கு உடனடியாக ஒப்பு கொண்டன. ஆனால், தமிழகத்தில், ஆட்சி மாற்றம் ஏற்பட்டால் தான், இது சாத்தியமாகும் போல் உள்ளது.இவ்வாறு, மத்திய மின் துறை அமைச்சர் பீயுஷ் கோயல் பேசினார்.
இது பற்றி, தி.மு.க., தலைவர் கருணாநிதி வெளியிட்ட அறிக்கையில், 'தமிழகத்திலே உள்ள பல்வேறு பிரச்சினைகள் பற்றி, அ.தி.மு.க., அரசின் சார்பில் அவ்வப்போது, மத்திய அரசின் அமைச்சர்களோடு தொடர்பு கொண்டு பேசினால் தானே, தமிழகத்திற்குத் தேவையானதை செய்ய முடியும்.

மத்திய அரசின் மின் துறை அமைச்சரே முதல்வர் சந்திக்க வாய்ப்பு அளிக்கவில்லை என கூறியதற்கு, முதல்வர் பதில் அளிக்க வேண்டும்' என, குறிப்பிட்டார்.வெறுமனே ஆடு, மாடு, மிக்ஸி, கிரைண்டர், லேப்டாப், மலிவு விலை உணவகம் என, எத்தனை காலம் தான் தள்ள முடியும்? மின்சார வாரியத்தின் ஒரு லட்சம் கோடி ரூபாய் கடனையும், எப்போதாவது அடைத்தாக வேண்டுமே!

- நமது சிறப்பு நிருபர் --

Advertisement

வாசகர் கருத்து (129)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
sankaranarayanan - tirunelveli,இந்தியா
01-ஏப்-201610:07:47 IST Report Abuse

sankaranarayananஎம்பிக்கள் பிரதமரை சந்திக்க இயலவில்லை - அவர் வெளிநாட்டிலேயே இருக்கிறார் - உள்ளூரில் இருந்தால் ஆர் எஸ் எஸ் கூடாரத்தை விட்டு வெளியே வருவது இல்லை - இதுதான் உண்மை - நீங்கள் ஒரு விரலை அடுத்தவரை நோக்கி நீட்டும்போது மற்ற மூன்று விரல்கள் உங்களை நோக்கி நீளுவது இயல்புதானே

Rate this:
Vetri Vel - chennai,இந்தியா
29-மார்-201600:53:17 IST Report Abuse

Vetri Velயோவ் ப்யுசு போன பல்பு.. எந்த குஜராத்தி கம்பனிக்கு தமிழ் நாட்டில் எந்த திட்டத்தை விலை பேச வந்தீர் என்று சொல் முதலில்.. அதானி கம்பனிக்கு ஒவ்வொரு துறைமுகமா விக்கிறதா கேள்விபடுறோம்... இப்போ மின்சார திட்டம் விக்க வந்தியா... போய் குந்திக்கோ.. நீ டெல்லி யை காலி செய்யும் வரை பேசாமல் இருப்பது தமிழ் நாட்டுக்கு நல்லது... தமிழனுக்கும் நல்லது...

Rate this:
jagan - Chennai,இந்தியா
28-மார்-201623:40:42 IST Report Abuse

jaganஇவ்வளவு குறைபாடு இருந்தும் எதிர் கட்சியால் தோற்கடிக்க முடியவில்லை என்றால், அந்த எதிர் கட்சிகள் எவ்வளவு கையாலாகதவர்கள் என்று தெரிகிறது....அதுக்கு இதுவே பரவில்லை என்று மக்களை நினைக்கும் படி செய்தவர் இந்த கலைஞர்...வரும் தேர்தலிலும் ஜெயிக்க போறார்......God Help TN

Rate this:
மேலும் 126 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X