என் பார்வை:ஏளனங்களும், ஏழு நல்லெண்ணங்களும் | Dinamalar

என் பார்வை:ஏளனங்களும், ஏழு நல்லெண்ணங்களும்

Added : மார் 29, 2016 | கருத்துகள் (2)
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 என் பார்வை:ஏளனங்களும், ஏழு நல்லெண்ணங்களும்

பெண்மையையும், அதன் உண்மையையும் புரிந்து கொள்ளாமலும், புரிந்தும் தெரிந்தும்... அறிந்து கொள்ளாமலும்... பெண் இனத்தை ஏளனமாக பார்க்கும் உலகில் எதனை பிடித்து பெண்கள் உயர்ந்து... நம்மை நாமே உணர்த்தி... உயர்த்தி... நம் மீது ஏவப்பட்ட ஏளனங்களையும் ஏவுகணைகளையும் மடக்கி, உரிய இடத்தில் அமர்ந்து சரிசமத்துவ நிலையை அடைய வேண்டும்.பெண்மை.. மென்மை... தாய்மை.. மேன்மை.. இது தானே உண்மை. அது தானே உரிமை. அந்த அருமை பெருமைகளை உணர்த்த பெண்கள் யாரையும் தேட வேண்டியதில்லை. தேடப் போவதுமில்லை. ஏளனங்களாலும், அதன் தாக்கத்தால் வரும் கேளிக்கைகளும், அவமானங்களும் நம்மிடமிருக்கும் பெண்மை எனும் மேன்மையான உண்மையை என்றும் எவ்விதத்திலும் தகர்த்து விடவில்லை.
எதிலும் ஏளனம், எல்லாவற்றிலும் எளக்காரம் என்று பெண்களை அடிமைப்படுத்துவதில் என்ன வெற்றி அடைந்து விட்டார்கள். சரிபாதியா... சரியான பாதியா என ஏற்று... ஒப்புக்கொள்வதில் இந்த பாதியின் மீதியானவர்களுக்கு ஏன் தயக்கம்?சரிபாதியாகிய பெண்கள் இன்று, சரிசமத்துவ நிலையை விட மேன்மை அடைந்து, இந்த உலகத்தையே ஆளப்பிறந்தவர்களாகி விட்டோம், விடுகிறோம். என்றுமே நம்மால் தான் நல்லது மட்டும் நடக்கும் என்ற ஆணித்தரமான நம்பிக்கையை, ஆண்களின் மனங்களில் சொல்லி வைத்து பதிய வைக்கும் காலம் இது.
கொடுத்து பழகியவர்கள் கெடுத்து பழக்கியவர்கள் அல்ல... பெண்கள் கொடுத்து பழக்கியவர்கள். அன்பை, அறிவை, அரவணைப்பை, பண்பை, பணிவை, மதிப்பை, மரியாதையை, அமைதியை, நட்பை, நாணயத்தை, நம்பிக்கையை, புரட்சியை, புனிதத்தை,சந்நதிகளின் பிறப்பை, வளர்ப்பை, அவர்களுக்கு உழைப்பையும், உணர்வையும் சேர்த்து கவுரவத்தையும்... அதன் உண்மையான உரிமைகளையும் சேர்த்து கொடுத்து பழகியவர்கள் இந்த பெண்கள். பெண்கள் இல்லையென்றால் ஏதுமில்லை... சக்தியில்லை என்றால் ஒட்டுமில்லை. உறவுமில்லை. கூடுமில்லை. கூட்டணியும் இல்லை.
வம்சங்கள் அம்சமாக மலருவதும், உயர்வதும், பெண்கள் கைகளில் தான் உள்ளது. வளர்ச்சியும், அதன் மூலம் வரும் மகிழ்ச்சியும் இதே பெண்களால் தான்.போதை மற்றும் போக பொருட்களாக ஆனால் ஒவ்வொரு காலக்கட்டத்திலும் பெண்களை ஒதுக்கும் காலமும் கோலமும் எதற்கு? விளம்பர படங்களில்இருந்து வியாபார வர்த்தக வழித்தடங்களிலும், விளையாட்டு திடல்களிலும் எல்லா இடங்களிலும், பெண்களை மட்டும் ஏன் தான் போதை பொருளாகவும், போகப் பொருளாகவும் வெளியிடுகின்றனர்.
ஆணவத்தையும் அகங்காரத்தையும் வெளியிட்டு அசிங்கப்படுத்துகிறீர்கள். அடிமைத்தனம் மூலமும், ஆணவத்தின் உச்சக்கட்டத்தின் மூலமாகவும் கொடுமைப்படுத்தி அடிமைப்படுத்தும் எல்லா வர்க்கமும் இறுதியில் இந்த பெண்களிடம் தான், அவர்களின் வாழ்வாதாரத்திற்கு அடைக்கலம் தேடி வருகிறார்கள் என்பதை யாரும் மறுக்க முடியாது. மறக்க முடியாது.பெண்களால் தான் நாட்டின் தரமும் பொருளாதாரமும் உயருகிறது. அன்றும் இன்றும் என்றும் அன்பாலும், பண்பாலும் நல் அரவணைப்பாலும் மன்னித்து கணவரையும், குழந்தைகளையும் விண்ணை நோக்கி உயரச் செய்யும் ஏணியாக இருப்பது பெண்கள்.
என் தாய் மூலம், என் தாய்மொழி மூலம், என் தாய்வீடு மூலம், என் தாய்நாட்டின் மூலம் என அனைத்தும் பெண்மையின் வடிவில்... பெண்களை நிலைநிறுத்தி கொள்ளும் காலம் இது.பெண்களின் மகத்துவம் கடும் சொற்களாலும், சுடும் வஞ்சனைகளாலும் பெரும்சோதனைகளாலும் தகாத வழிகளில் பெண்களை வெறுப்பின் உச்சகட்டத்திற்கு வரை ஏளனம் செய்தவர்களை, இனி பெண்கள் பாரமாகவும், பாவமாகவும் பார்க்கவில்லை. பார்க்கவும் மாட்டார்கள். அவர்களை எல்லாம் உறவு பாலமாகவும், பலனும் பலமும் தரும் பண்பாளராகவும், செவ்வனே செப்பனிட்டு திருத்தி ஏற்று கொள்ள தயார். இதுதான் உண்மையான தாயுள்ளம் கொண்ட பெண்மை. பெண்களின் மகத்துவமும் கூட.
இனியும் ஏளனம் என்ற செய்கைகளையும் இந்த கடும், சுடும் வார்த்தைகளையும் எல்லா குறிப்பிலிருந்தும் எடுத்து அழித்து விடுங்கள். படிப்பும் வருமானமும் இல்லாதவர்களாக நினைத்தவர்கள் ஏராளம். படித்து அதன் மூலம் வரும் வருமானத்தையும், மற்ற அனைத்தையும் அவமானம் எனக் கருதாமல், எல்லாவற்றையும் பிடுங்கி அடிமைத்தனம் செய்த காலம் மாறி விட்டது. இனி அம்மாதிரி எங்கும் எதிலும் எப்போதும் தென்படாது.
உறவின் பலம் :சரிசமத்துவ நிலை எனும் உயர்நிலையை போற்றி தக்க வைத்து கொள்ள, பெண்கள் எடுத்து கொள்ள வேண்டிய உறுதிமொழிகள்...கற்றல்இனிது,.. சுற்றம் பழகின் கூட்டின் சிறப்பு..நல் பகிர்வில்.ஏற்பின் பலம்... நல் சகிப்பு தன்மையில், உறவுகளின் பலம்... விட்டு கொடுக்கும் தன்மையில்.ஒழுக்கத்தின் மணம்... உயர் சுய மதிப்பீட்டில், அன்பின் அரவணைப்பு... பண்பின் பலத்தில்.நம்பிக்கை தான் சிறந்த வாழ்க்கை தரும். கோழையாக வாழ்வதை விட ஏழையாக வாழ்வதே நல் வரம்.யாசிப்பதை விட.. யோசித்து நேசி. நல் ஆசிக்கு ஒரே தடாகத்தில் பூக்கும் நறுமணமலர்களாக பூஜிக்க.வேள்வியை விட கேள்விகள் கேட்பது மேல். கை கோர்த்து பார்.. எதிரியும் உன் வசம் இந்தபாரில்.பஞ்சத்திலும் தஞ்சமடையாமல் வஞ்சத்தை போரிட்டு வெற்றி காண்... தோல்வியையும் சோதித்து பார்... சாதித்து சாதனை புரிவாய்...திட்டங்களையும் சட்டங்களையும் கட்டம் போட்டு ஜெயிக்கும் தருணமிது. படித்தோம்... உழைக்கிறோம்... உயர்கின்றோம்... கலாசாரம் காத்து பண்பாளரானோம்.
உயர்ந்து காட்டுவோம் :உழைத்து உண்மையின் பெண்மையின் தன்மையையும் மேன்மையையும் உணர்வுடன் உயர்த்திகாட்டுவோம். இதில் பயம் எதற்கு? பலமிருக்கு நம் பயணத்தில்.விடிந்த பின் விழித்தெழுவதை விட விழித்து விடிந்தால் நல்லது... நம்பிக்கையில் ஆணி வேராகவும் உறவுகளின் அடித்தளமாகவும் மாறுங்கள். அப்போது தான் நீங்கள் சுமக்கின்ற நம்பிக்கை நீங்கள் கீழே விழும் போது உங்களை தாங்கி கொண்டு, நல் எண்ணங்களோடு உங்களை உயரே உயர்த்தும்.பெண்மையின் உண்மையான மவுனம் என்பது அடிமைத்தனம் அல்ல. அது வலிமையான ஏற்புடமை. ஆயிரமாயிரம் அர்த்தங்களையும் உரக்கச் சொல்லும் பெண்களின் மென்மையை மேன்மை காட்டும் அடையாளம் மற்றும் அங்கீகாரம்... மவுனம்.- எம்.டி.விஜயலட்சுமி,குடும்பநல நீதிமன்ற ஆலோசகர்,மதுரை, 98421 28085.

Advertisement


வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Subbu - chennai,இந்தியா
02-ஜூன்-201618:19:56 IST Report Abuse
Subbu பெண்களின் பண்பும், மென்மையும், அன்பும், அடக்கமும் அவர்களை விட்டு போய் விட்டது, இந்த கால பெண்கள் பெண்சுதந்திரம் என்ற போர்வையில் எல்லை மீறி நடந்து வருகிறார்கள், ஆண்களின் உடைகளை அணிந்து விட்டால் ஆண்மை வந்து விடுமா? நாகரீகம் என்ற போர்வையில் ஆபாச ஆடை அணிந்து ஆணுக்கு நிகராக இரவுகளிலும் சுற்றி திரிந்து கொண்டு இருகிறார்கள்.குடிப்பது, அட்டகாசம் செய்வது, பெற்றவர்களுக்கு அடங்க மறுப்பது, பல ஆண்களுடன் பழகி திரிவது, திருமணத்திற்கு முன்பே உடல் உறவு கொள்வது, கணவனை கேவலபடுத்துவது, போன்றவையா பெண் சுதந்திரம், இவை எதில் போய் முடியபோகிறதோ என்று தெரியவில்லை.
Rate this:
Share this comment
Cancel
vinoth - Chennai,இந்தியா
29-மார்-201610:57:56 IST Report Abuse
vinoth எதாவது எழுதனும்னா 4 வரில எழுதுங்க. ரொம்ப லெந்த்தா போகுது படிக்க கஷ்டமா இருக்குல...
Rate this:
Share this comment
Cancel
babu - Nellai,இந்தியா
29-மார்-201610:44:35 IST Report Abuse
babu நாங்கள் வீட்டில் சமைக்க மாட்டோம், துணி துவைக்க மாட்டோம், பாத்திரம் கழுவ மாட்டோம் ஆனால் கணவனிடம் நிறைய செலவுக்காக பணத்தை கேட்டு சண்டை போடுவோம். தட்டி கேட்டால் நாங்களும் படித்துள்ளோம் என்றும் அப்படி ஒத்து வராட்டி கணவனை அசிங்க படுத்தி விட்டு அவள் பெற்ற வீட்டுக்கு செல்வது, அவளது பெற்றோர் இவளது கணவனின் மீது தேவையில்லா குற்றத்தை சொல்லி காவலில் அடைப்பது, போன்ற ஒழுங்கீனமான (சில) பெண்களை என்னவென்று நீங்கள் சொல்வீர்கள் .....................................
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X