கட்டணம் திருப்பி தர சேவை மையம் முடிவு

Added : ஏப் 01, 2016 | |
Advertisement
அவிநாசி:அவிநாசி தேசிய பெண்கள் சேவை மையத்தில் ஏற்பட்ட பிரச்னையால், கட்டணத்தை திருப்பியளிக்க, நிறுவனம் உறுதியளித்தது.தேசிய பெண்கள் சேவை மைய கிளை, அவிநாசியில் உள்ளது; டெய்லரிங், ஆடை வடிவமைப்பு, பேஷன் டிசைன், அலங்கார நகை வடிவமைப்பு பயிற்சி அளிக்கப்படுகின்றன. ஆறு மாத பயிற்சி முடிவுற்ற நிலையில், "போதிய பயிற்சி அளிக்கவில்லை; தையல் மிஷின் வழங்க வேண்டும்' என்று கூறி, நேற்று

அவிநாசி:அவிநாசி தேசிய பெண்கள் சேவை மையத்தில் ஏற்பட்ட பிரச்னையால், கட்டணத்தை திருப்பியளிக்க, நிறுவனம் உறுதியளித்தது.தேசிய பெண்கள் சேவை மைய கிளை, அவிநாசியில் உள்ளது; டெய்லரிங், ஆடை வடிவமைப்பு, பேஷன் டிசைன், அலங்கார நகை வடிவமைப்பு பயிற்சி அளிக்கப்படுகின்றன. ஆறு மாத பயிற்சி முடிவுற்ற நிலையில், "போதிய பயிற்சி அளிக்கவில்லை; தையல் மிஷின் வழங்க வேண்டும்' என்று கூறி, நேற்று முன்தினம், பெண்கள், உள்ளிருப்பு போராட்டம் நடத்தினர்.தாசில்தார் அலுவலகத்தில் நேற்று பேச்சு நடந்தது. நிர்வாக தரப்பில், "பெண்களுக்கு மீண்டும் பயிற்சி அளிக்கிறோம். தேவையான பொருட்களை வழங்குகிறோம்' என, கூறப்பட்டது. அதை பெண்கள் ஏற்கவில்லை. இறுதியாக, பயிற்சி கட்டணத்தை, 4ம் தேதி திருப்பி அளிப்பது எனவும், தொகை குறித்து அன்றைய தினம் முடிவு செய்வது எனவும் அறிவிக்கப்பட்டது. இதையேற்று,
பெண்கள் கலைந்து சென்றனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X