ஜெயிக்கட்டும் 'மேக் இன் இந்தியா!'

Added : ஏப் 01, 2016 | கருத்துகள் (4)
Advertisement
ஜெயிக்கட்டும் 'மேக் இன் இந்தியா!'

இந்தியாவில் பொருள்களின் உற்பத்தியை அதிகப்படுத்த வேண்டும். அதற்கு தேவையானவற்றை செய்ய வேண்டியதற்கு அடிப்படையாக, அரசின் கொள்கைகள் உள்ளன. முதலில் எந்த நாட்டு பொருளாக இருந்தாலும், அது ஏன் இந்தியாவில் தயாராக கூடாது. இந்தியப் பொருட்கள் மட்டுமில்லாது, வேறு நாட்டு பொருளாக இருந்தாலும், அது இந்தியாவில் தயாரிக்கப்படும் போது அதன் விலையும் மற்றும் தொழில் உற்பத்தி சார்ந்த வேலைவாய்ப்புகளும் கூடும்.
இதனால் நமக்கு நல்லதுதானே என்பதுதான் இந்த கோட்பாடின் அடிப்படை. ஆனால் இந்த முயற்சியில் வெற்றி அடைவது என்பது அரசால் மட்டும் முடியாது; ஒவ்வொரு இந்தியனின் செயல்பாட்டில் மாற்றம் ஏற்படும் போதுதான், முழுமையாக மக்களுக்கு ஆதாயமான முயற்சியாக இருக்கும்.
இன்றைக்கு உலகின் தொழிற்சாலையாக சீனா உள்ளது. கையில் கட்டும் வாட்ச் ஆனாலும்; சரி காலில் அணியும் ஷூ ஆனாலும் சரி உலகிற்கு தேவையான பொருள்கள் அத்தனையும் தயாரிக்கும் இடமாக சீனா உள்ளது. இதற்கு முழுக்காரணம் அதன் உள்கட்டமைப்புதான். இங்கு தொழிலாளர்கள் முதல் தொழில் தொடங்குவதற்கான அத்தனை வசதிகளும் தங்குதடையின்றி உடனே கிடைக்கிறது. அவர்களை பார்க்கும் போது நம்மிடம் என்ன குறையுள்ளது என்பதை பார்க்க வேண்டும்.
உண்மையில் சொல்லப்போனால் பொருள்கள் உற்பத்தியில் நம்முடைய அனுபவம் என்பது அதிகம்தான். ஆனாலும் நம்மால் சிறப்பாக செயல்படாமல் போனதற்கு காரணம் என்ன என்பதை ஆராய வேண்டும்.
செயல்களில் மாற்றம் :உலகமயமாக்கலின் அடிப்படை ஆதாரமே வாடிகையாளர்களுக்கானது என்றாகிவிட்டது. இதன் அடிப்படையாக எங்கு எந்த ஒரு பொருளையும், எவ்வளவு விலை குறைவாக உற்பத்தி செய்ய முடியுமோ, அங்குதான் தொழிற்சாலைகளுக்கான வாய்ப்பாக மாறிவிட்டது. நம்முடைய செயல்களில் முழுமையான மாற்றம் தேவைப்படுகிறது. நாம் தயாரிக்கக்கூடிய பொருள்கள், ஒரு ஊருக்கு மட்டும் தேவைப்படுவதாக இல்லை. உலகத்திற்கே தேவையானதாக, உலக சந்தையில் விற்பதற்கு சரியான விலையில், சரியான தரத்துடன் கூடியதாக இருக்க வேண்டும்.
அப்படி இருக்கும் பட்சத்தில், இந்திய வாடிக்கையாளர், கடையில் தனக்கு தேவையான பொருளாக இந்திய பொருளை தேர்வு செய்வார். இங்குதான் நம்முடைய 'இந்தியாவில் செய்யப்பட்ட பொருள்' என்ற நிலைக்கு உலகில் மதிப்பு கிடைக்கும்.ஜப்பானில் இருந்து இந்தியாவிற்கு வரும் சுற்றுலா பயணிகள், தங்களின் உபயோகத்திற்கு வாடகைக்கு எடுக்கும் காரில்கூட, தங்களுடைய ஜப்பான் காரைதான் எடுப்பார்கள். அது டயோட்டாவாக அல்லது நிசானாக தான் இருக்கும்.
இந்த மனநிலை இந்தியர்களிடம் வரும்போது தான், இந்தியாவின் பொருள்களுக்கும், இந்தியாவில் தயாரிக்கப்பட்ட பொருள்களுக்கும் உரிய உலக அங்கீகாரம் கிடைக்கும். இந்த இடத்தில்தான் இந்திய உற்பத்தியாளர்களும், வியாபாரிகளும் மிகவும் கவனிக்க மற்றும் திறமையாக செயல்பட வேண்டிய கட்டாயத்தில் உள்ளார்கள்.
இந்திய வியாபாரிகளும், உற்பத்தியாளர்களும் உங்களின் தரத்தையும், விலையையும் தாங்கிப் பிடிக்க வேண்டும். ஏனென்றால் நீங்கள் போட்டி போடுவது உலக சந்தையில். உலகமயமாதலின் அடிப்படையே வாடிக்கையாளர்கள். எந்த நாட்டின் பொருளை வேண்டுமானாலும் வாங்க முடியும். இங்குதான் நாம் நம்முடைய பொருளை எல்லாரும் வாங்குவதற்கு உழைக்க வேண்டும்.
உலகத்தரம் :முதலில் எல்லா இந்தியரும் வாங்க வேண்டும். நாம் விற்க கூடிய பொருள் உள்ளூர் வியாபாரத்திற்கு என்றாலும், அது உலகத்தரம் வாய்ந்ததாக இருக்க வேண்டும். இல்லை என்றால் நம்முடைய பொருள்களுக்கு மதிப்பு இல்லாது போய்விடும். நீங்கள் ஆப்பிள் அட்டையை பிரிக்கும்போதே அந்த பொருளின் மதிப்பை உணர்ந்து பிரிக்க வேண்டும். அதுபோல், நம்முடைய பொருள்களின் சிறப்பு அம்சம் என்பது அதை பார்சல் செய்வது வரை வரவேண்டும். இன்றைக்கு இந்தியாவின் பொருள்கள் உள்ளூரிலும் உலகச் சந்தையிலும் ஜெயிக்க வேண்டுமானால் இந்த தகுதிகள் அத்தியாவசியமாக உள்ளது. இதை நம் வியாபாரிகளும் தொழில் முனைவர்களும் தெளிவாக தெரிந்து செயல்பட வேண்டிய கட்டாயத்தில் உள்ளார்கள்.மக்கள் தொகையில் சீனாவிற்கு அடுத்த இடத்தில் நாம் உள்ளோம். நமக்கு நிறைய அனுபவம் உள்ளது. தேவையான தொழில் சார்ந்த தொழிலாளர்கள் நம்மிடம் உள்ளனர். தேவையான பயிற்சிகளும் நம்மால் தர முடியும்.
இவ்வளவு இருந்தும், நம்முடைய தொழில் முனைவோர் பெரும்பாலும் வியாபாரிகளாக மாறியதற்கு காரணம் உண்டு. நம்முடைய வட்டி விகிதம், பொருட்களை எடுத்து செல்வதற்கான போக்குவரத்து செலவு, மின்சார வசதிகள் தான் நம்முடைய பொருள்கள் உற்பத்தி செலவை அதிகப்படுத்துகிறது. இதன் விளைவாக நம்முடைய பொருள்களின் விலையும் உலக சந்தையில் அதிகமானதாக உள்ளது. இதை எப்படி சரிசெய்வது என்பது அரசிற்கே மிகச் சவாலான விஷயம்.இதை நாம் சிறப்பாக செயல்படுத்தும் பொழுதுதான், உலகமயமாக்கலின் உண்மையான பலனை, இந்தியாவில் உள்ள ஒவ்வொரு தொழில் செய்பவர்களும் அடையமுடியும். உலக சந்தையில் நம்முடைய பொருள்களுக்கான உரிய அங்கீகாரம் கிடைக்கும்.
கவனம் செலுத்த வேண்டியது எது? தகவல் தொழில்நுட்பம், உள்கட்டமைப்பு மற்றும் மின்சக்தி ஆற்றல் போன்ற துறைகளுடன், மனிதவள வளர்ச்சியிலும் அரசு அதிக கவனம் செலுத்த வேண்டும். பட்ஜெட்டில் எவ்வளவு கொடுத்தாலும், அதை சரியான முறையில் செயல்படுத்தும் போது, ஒவ்வொரு வளர்ச்சியையும் சரியான இடைவெளியில் கணக்கிட்டு, தொடர்ச்சியாக மதிப்பீடு செய்யும்போது முழுமையான பலன் கிடைக்கும். நம்முடைய உற்பத்தித்திறனை முழுவீச்சுடன் செயல்படுத்தினால், உலகச்சந்தையில் பொருட்களுக்கு இடம் கிடைக்கும்.ஆப்ரிக்காவில் பொருள்களை உற்பத்தி செய்வது என்பது சிரமமான காரியம். அங்கு தேவையான தொழிலாளர்களும் கிடைப்பதில்லை.
மற்ற தேவைகளும் முறையாக கிடைப்பதில்லை. எல்லாவற்றிற்கும் மேலாக நிதி, போக்குவரத்து, எரிசக்தி போன்றவையும் சரியான அளவு கிடையாது. தொழில்முனைபவர்களும் கிடையாது. இங்கிருந்து அங்கு சென்று உற்பத்தியாளர்களாக உள்ளார்கள். அவர்கள் எல்லாம் இங்கேயே சிறப்பாக செயல்பட முடியும்.
உழைக்கும் இளைஞர்கள் :சீனாவை விட, இந்தியாவில்தான் உழைக்கக்கூடிய இளைஞர்கள் அதிகம் உள்ளனர். உலகிலேயே அதிகமான இளைஞர்கள் உள்ள நாடும் இந்தியாவே. மத்திய அரசின் இந்த பட்ஜெட்டில் குறிப்பிட்டது போல், திறன் ஊட்டப்பட்ட தொழிலாளிகளை உருவாக்கும் பட்சத்தில், இளைஞர்கள் நாட்டின் பொருளாதார முன்னேற்றத்தில் நேரடியாக பங்குபெற முடியும்.அரசின் செயல்பாடு, தெளிவாகவும், நல்ல வழிகாட்டுதலாகவும் இந்திய தொழில் முனைவோருக்கும், வியாபாரிகளுக்கும் அமையும் பட்சத்தில், உலகதரத்தில் நம்முடைய பொருள்களுக்கு நிரந்தர இடம் கிடைக்கும்.
எல்லா இந்திய தொழில் அதிபர்களும் தேடி தேடி வாங்கும் கார்கள் அத்தனையும் இந்தியாவில் செய்யப்பட்டதாக இருக்கும். அது எந்த டிசைனாக இருந்தாலும், அது இந்தியப் பொருட்களாக இருக்கக் கூடிய காலம் வரும்.முனைவர் எஸ்.ராஜசேகர் இயக்குனர், ஆர்.எல்.இன்ஸ்டிடியூட் ஆப் மேனேஜ்மென்ட் ஸ்டடீஸ்மதுரை

Advertisement


வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Arivu - Salem,இந்தியா
30-மே-201609:33:06 IST Report Abuse
Arivu First we should "Make India" a better place to live.
Rate this:
Share this comment
Cancel
Alwys Robinson - Chennai,இந்தியா
19-மே-201613:18:52 IST Report Abuse
Alwys Robinson Be Indian and buy Indian. If you are spend to buy a indian manufacturing company's shampoo of Rs. 1.0 per week. Our people get a business up to 500 Cr. (~125 cr people x 4 weeks x 1.0). Think about all consumer products like Soap, Shampoo, Cosmetics, Cool drinks, etc. All are requested to buy indian products to help our nation grow.
Rate this:
Share this comment
Cancel
சுந்தரம் - Kuwait,குவைத்
13-மே-201607:39:43 IST Report Abuse
சுந்தரம் பேசறதுக்கும் கேட்கறதுக்கும் நல்லாத்தான் இருக்கு. ஆனா அந்த 600 அடி படேல் சிலை மட்டும் மேக் இன் இந்தியாவால முடியாமத்தானே சைனாவுக்கு காண்ட்ராக்ட் கொடுத்து சைடுல துட்டு பாத்திருக்கோம்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X