பொது செய்தி

தமிழ்நாடு

மரவள்ளி மாவு பூச்சி தாக்குதல்: நடவடிக்கை எடுக்க கோரிக்கை

Added : ஏப் 02, 2016
Share
Advertisement
நாமக்கல்: மரவள்ளியில் மாவு பூச்சித்தாக்குதல் அதிகரித்துள்ளதால், விவசாயிகள் பொருளாதார இழப்புக்கு ஆளாகி உள்ளனர்.நாமக்கல் மாவட்டத்தில், பெரும்பாலான பகுதிகளில் மரவள்ளி சாகுபடி செய்யப்படுகிறது. மரவள்ளியில், தற்போது மாவு பூச்சித்தாக்குதல் அதிக அளவில் காணப்படுகிறது. இதை கட்டுப்படுத்த, ஒட்டுண்ணி அட்டை மாட்டினால், பூச்சிகளை கவர்ந்திழுத்து அழிக்கும். கிராமப்புறங்களில்

நாமக்கல்: மரவள்ளியில் மாவு பூச்சித்தாக்குதல் அதிகரித்துள்ளதால், விவசாயிகள் பொருளாதார இழப்புக்கு ஆளாகி உள்ளனர்.
நாமக்கல் மாவட்டத்தில், பெரும்பாலான பகுதிகளில் மரவள்ளி சாகுபடி செய்யப்படுகிறது. மரவள்ளியில், தற்போது மாவு பூச்சித்தாக்குதல் அதிக அளவில் காணப்படுகிறது. இதை கட்டுப்படுத்த, ஒட்டுண்ணி அட்டை மாட்டினால், பூச்சிகளை கவர்ந்திழுத்து அழிக்கும். கிராமப்புறங்களில் உள்ள விவசாயிகளுக்கு இது குறித்து முழுமையாக தெரிவதில்லை. அந்த பகுதியில், தோட்டக்கலை மற்றும் வேளாண் துறை அலுவலர் சென்று, பூச்சித்தாக்குதலை கட்டுப்படுத்த எடுக்க வேண்டியவை குறித்து விளக்குவதுடன், வேளாண் பல்கலை மூலம் உற்பத்தி செய்யும் ஒட்டுண்ணிகளை வாங்கி பயன்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆனால், துறை அலுவலர்கள் கண்டு கொள்ளாமல் இருப்பதால், விவசாயிகளும் என்ன செய்வது எனத்தெரியாமல், அதிக விலை கொடுத்து பூச்சி மருந்து வாங்கி பயன்படுத்தும் நிலைக்கு தள்ளப்படுகின்றனர். அதன்காரணமாக, மிகுந்த பொருட்செலவு ஏற்படுவதுடன், பெரும் பொருளாதார இழப்புக்கும் ஆளாகின்றனர். தாய் அந்துப்பூச்சிகளை அழிக்கக் கூடிய ஒட்டுண்ணியும் மாவட்டத்தில் போதிய அளவு இருப்பு இல்லை என்றே கூறப்படுகிறது. எனவே, 'மாவு பூச்சித்தாக்குதலை கட்டுப்படுத்தவும், தேவையான ஒட்டுண்ணியை தருவித்து விவசாயிகளுக்கு வழங்கவும், சம்பந்தப்பட்ட அலுவலர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X