வேக கட்டுப்பாட்டு கருவி இல்லாத வாகன உரிமையாளர் மீது நடவடிக்கை| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

வேக கட்டுப்பாட்டு கருவி இல்லாத வாகன உரிமையாளர் மீது நடவடிக்கை

Added : ஏப் 02, 2016
Share
நாமக்கல்: 'நாமக்கல் மாவட்டத்தில், வேக கட்டுப்பாட்டுக் கருவி பொருத்தாத வாகன உரிமையாளர் மீது நடவடிக்கை எடுக்கப்படும்' என, வட்டார போக்குவரத்து துறையினர் எச்சரித்துள்ளனர்.நாட்டில், நாளுக்கு நாள் சாலை விபத்துக்கள் அதிகரித்து வருகின்றன. அதை தவிர்க்கும் வகையில், உற்பத்தியின்போதே, வாகனங்களில் வேக கட்டுப்பாட்டு கருவி பொருத்த வேண்டும் என்ற நடைமுறையை, மத்திய அரசு கொண்டு

நாமக்கல்: 'நாமக்கல் மாவட்டத்தில், வேக கட்டுப்பாட்டுக் கருவி பொருத்தாத வாகன உரிமையாளர் மீது நடவடிக்கை எடுக்கப்படும்' என, வட்டார போக்குவரத்து துறையினர் எச்சரித்துள்ளனர்.
நாட்டில், நாளுக்கு நாள் சாலை விபத்துக்கள் அதிகரித்து வருகின்றன. அதை தவிர்க்கும் வகையில், உற்பத்தியின்போதே, வாகனங்களில் வேக கட்டுப்பாட்டு கருவி பொருத்த வேண்டும் என்ற நடைமுறையை, மத்திய அரசு கொண்டு வந்துள்ளது. எட்டு இருக்கைகள் மேல் மற்றும், 3,500 கிலோ உள்ள பஸ், லாரி, வேன் போன்ற வாகனங்களில், அதிக பட்சம் 80 கி.மீ., வேகத்தில் செல்லும் வகையிலும், பள்ளி வாகனங்கள், குப்பை லாரிகள், கண்டெய்னர் லாரிகளில் அதிகபட்சம், 60 கி.மீ., வேகத்தில் செல்லும் வகையில் வேக கட்டுப்பாட்டு கருவி பொருத்த வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது. கடந்த, அக்டோபர், 1ம் தேதி முதல், புதிய வாகனங்களில், வேக கட்டுப்பாட்டு கருவி பொருத்தப்பட்டிருந்தால் மட்டுமே, தகுதிச் சான்று அளிக்கப்படுகிறது. பழைய வாகனங்களில், நேற்று முன்தினத்துடன் (மார்ச், 31) வேக கட்டுப்பாட்டு கருவி பொருத்த வேண்டும் என்ற கெடு விதிக்கப்பட்டிருந்தது. நாமக்கல் மாவட்டத்தில் கடந்த அக்டோபர் மாதத்துக்கு முன் பதிவு செய்யப்பட்ட, 90 சதவீத வாகனங்களில் வேக கட்டுப்பாட்டு கருவி இல்லை.

இதுகுறித்து, நாமக்கல் வட்டார போக்குவரத்து அலுவலர் (தெற்கு)துரைசாமி கூறியதாவது: இது குறித்து, சம்பந்தப்பட்ட வாகன உரிமையாளர்களிடம் தொடர்ந்து வலியுறுத்தி வந்தோம். மேலும், திடீர் சோதனை மேற்கொண்டு, வேக கட்டுப்பாட்டு கருவி பொருத்தாத வாகனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X