அரசியல் செய்தி

தமிழ்நாடு

கூண்டோடு ராஜினாமா சேலம் தே.மு.தி.க., மிரட்டல்

Added : ஏப் 06, 2016
Share
Advertisement
சேலம்: 'விஜயகாந்த், தன் முடிவை மாற்றாவிட்டால், கூண்டோடு ராஜினாமா செய்யப் போகிறோம்' என, சேலம் மேற்கு மாவட்ட தே.மு.தி.க., நிர்வாகிகள் மிரட்டல் விடுத்துள்ளனர்.சேலம் மேற்கு மாவட்ட தே.மு.தி.க., நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம், நேற்று, மாவட்ட துணை செயலர் மாதேஸ் தலைமையில் நடந்தது. 100க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். முடிவுகள் குறித்து, மாதேஸ் கூறியதாவது: தன்னிச்சையாக விஜயகாந்த்,

சேலம்: 'விஜயகாந்த், தன் முடிவை மாற்றாவிட்டால், கூண்டோடு ராஜினாமா செய்யப் போகிறோம்' என, சேலம் மேற்கு மாவட்ட தே.மு.தி.க., நிர்வாகிகள் மிரட்டல் விடுத்துள்ளனர்.சேலம் மேற்கு மாவட்ட தே.மு.தி.க., நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம், நேற்று, மாவட்ட துணை செயலர் மாதேஸ் தலைமையில் நடந்தது. 100க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். முடிவுகள் குறித்து, மாதேஸ் கூறியதாவது: தன்னிச்சையாக விஜயகாந்த், மக்கள் நலக் கூட்டணியுடன் சேர்ந்துள்ளதை, மறுபரிசீலனை செய்ய வேண்டும். சேலம் மேற்கு மாவட்ட செயலர் பார்த்திபனை, கட்சியை விட்டு நீக்கியதை இக்கூட்டம் கண்டிக்கிறது.
விஜயகாந்த், தன் முடிவை உடனடியாக மறுபரிசீலனை செய்ய வேண்டும். இல்லையேல், நிர்வாகிகள் அனைவரும், கூண்டோடு ராஜினாமா செய்வது என, முடிவு செய்யப்பட்டு உள்ளது.இவ்வாறு அவர் கூறினார். 40 பேர் தான் சேலம் மேற்கு மாவட்ட செயலரும், எம்.எல்.ஏ.,வுமான அழகாபுரம் மோகன்ராஜ் கூறுகையில், ''விஜயகாந்த், எந்த முடிவை எடுத்தாலும் தொண்டர்கள் பின்பற்றுவர். சுயநலத்துக்காக பிரிந்து போனவர்களால், கட்சிக்கு எந்த நஷ்டமும் இல்லை. துரோகிகள் வாழ்ந்ததாக, சரித்திரமே கிடையாது. வீரவன்னியர் பேரவையில் இருந்து, 65 பேருடன் பார்த்திபன் வந்தார். இன்று, 40 பேர் கூட, அவர் பின்னால் செல்ல மாட்டார்கள்,'' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X