பதிவு செய்த நாள் :
சபதம்
பா.ஜ., நிறுவன நாள் விழாவில் அமித் ஷா :
நாடு முழுவதும் 'தாமரை' மயமாகும் என்கிறார்

புதுடில்லி: ''தற்போது, மத்தியிலும், 14 மாநிலங்களிலும் ஆட்சியில் உள்ள பா.ஜ., அடுத்த, 25 ஆண்டுகளில், பஞ்சாயத்து முதல், பார்லிமென்ட் வரை, நாடு முழுவதும் அனைத்து இடங்களையும் பிடிக்கும்,'' என, கட்சியின் நிறுவன நாள் விழாவில், பா.ஜ., தேசிய தலைவர் அமித் ஷா சபதம் எடுத்தார்.

கடந்த, 2014ல் நடந்த லோக்சபா தேர்தலில், பா.ஜ., தனிப் பெரும்பான்மை பலத்துடன் ஆட்சியை பிடித்தது. தற்போது, 14 மாநிலங்களில் பா.ஜ., மற்றும் அதன் கூட்டணி கட்சிகளின் ஆட்சி உள்ளது.குஜராத், சத்தீஸ்கர், மத்திய பிரதேசம், கோவா, ராஜஸ்தான், ஹரியானா, மஹாராஷ்டிரா, ஜார்க்கண்ட் ஆகிய மாநிலங்களில், பா.ஜ., ஆட்சி நடக்கிறது. ஜம்மு - காஷ்மீரில், மக்கள் ஜனநாயகக் கட்சியுடன் இணைந்து கூட்டணி அரசு அமைத்துள்ளது.

கூட்டணி கட்சிகள்:

இதுதவிர, பா.ஜ., தலைமையிலான தே.ஜ., கூட்டணியைச் சேர்ந்த கட்சிகளின் ஆட்சி, பஞ்சாப், நாகாலாந்து, ஆந்திரா, அருணாச்சல பிரதேசத்தில் நடந்து வருகிறது.லோக்சபாவில் பெரும்பான்மை பலம் இருந்தபோதும், ராஜ்யசபாவில் போதிய பலம் இல்லாததால், பல்வேறு மசோதாக்களை நிறைவேற்றுவதில் சிக்கல் ஏற்பட்டு வருகிறது.

தொண்டர்களுக்கு அழைப்பு:

இந்நிலையில், டில்லியில் நேற்று நடந்த, கட்சியின், 36வது நிறுவன நாள் விழாவில் பா.ஜ., தேசிய தலைவர் அமித் ஷா பேசுகையில், ''அடுத்த, 25 ஆண்டுகளுக்குள், நாட்டில் உள்ள பஞ்சாயத்து முதல், பார்லிமென்ட் வரை, அனைத்து இடங்களையும் பா.ஜ., பிடிக்கும்,'' என, சபதம் ஏற்றார். இதற்காக, தொண்டர்கள் உழைக்க வேண்டும் என, அவர் கோரிக்கை

விடுத்தார்.

பா.ஜ., நிறுவன நாள் விழாவில் அமித் ஷா சபதம் : நாடு முழுவதும் 'தாமரை' மயமாகும் என்கிறார்


'ஓய்ந்துவிட கூடாது':

டில்லியில் உள்ள கட்சி தலைமையகத்தில், நேற்று நடந்த, கட்சியின், 36வது நிறுவன நாள் நிகழ்ச்சியில், பா.ஜ., தேசிய தலைவர் அமித் ஷா பேசியதாவது:பா.ஜ., தற்போது மிகப் பிரபலமாக உள்ளது. ஆனால், இதில் திருப்தி ஏற்பட்டு, ஓய்ந்துவிடக் கூடாது. அடுத்த, 25 ஆண்டுகளில், நாடு முழுவதும், அது பஞ்சாயத்து தேர்தலாக இருந்தாலும், பார்லி., தேர்தலாக இருந்தாலும், அனைத்திலும் பா.ஜ., வெற்றி பெற வேண்டும். இந்த இலக்குடன், அனைவரும் அயராமல் பணியாற்ற வேண்டும்.இவ்வாறு அவர் பேசினார்.

காஷ்மீர் முதல், கன்னியாகுமரி வரை, பா.ஜ., மீது மக்கள் நம்பிக்கை வைத்துள்ளனர். தங்களுடைய கனவுகளை பா.ஜ., நனவாக்கும் என, நம்புகின்றனர்.
நாட்டின் மீதான அன்புடன், அதை வளர்ச்சிப் பாதையில் கொண்டு செல்ல பாடுபட்ட, பாடுபடும் அனைத்து தொண்டர்களுக்கும், பாராட்டையும், நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
- நரேந்திர மோடி,பிரதமர்

பா.ஜ.,வின் வளர்ச்சி

1951 - பாரதிய ஜன சங்கத்தை தோற்றுவித்தார், சியாமா பிரசாத் முகர்ஜி
1977 - எமர்ஜென்சியை தொடர்ந்து, ஜன சங்கம் உள்ளிட்ட கட்சிகள் இணைந்து, ஜனதா கட்சியை உருவாக்கின
1980 -
கட்சி மற்றும் ஆர்.எஸ்.எஸ்., அமைப்பு

Advertisement

இரண்டிலும், ஒரே நேரத்தில் உறுப்பினராக இருப்பதற்கு, ஜனதா கட்சி செயற்குழு தடை விதித்தது - அதை தொடர்ந்து, ஏப்., 6ம் தேதி, பாரதிய ஜனதா கட்சி உருவானது
1984 - லோக்சபா தேர்தலில், இரண்டு இடங்களில் பா.ஜ., வென்றது
1989 - லோக்சபா தேர்தலில், 85 இடங்களில் வென்றது
1996 - லோக்சபா தேர்தலில், 161 இடங்களில் வென்றது; வாஜ்பாய் பிரதமராக பதவியேற்றார். ஆனால், 13 நாட்களில் அரசு கவிழ்ந்தது
1998 - லோக்சபா தேர்தலில், 182 தொகுதிகளில் வென்று, தனிப் பெரும் கட்சியானது; வாஜ்பாய் பிரதமராக இருந்தார். அரசுக்கு அளித்த ஆதரவை, அ.தி.மு.க., விலக்கி கொண்டதால், 13 மாதங்களில் ஆட்சி கவிழ்ந்தது
1999 - லோக்சபா தேர்தலில், 182 இடங்களில் வென்று, மூன்றாவது முறையாக, பிரதமரானார் வாஜ்பாய்; இந்த அரசு, முழு ஐந்தாண்டுகள் ஆட்சி புரிந்தது
2014 - லோக்சபா தேர்தலில், 282 தொகுதிகளில் வென்று தனிப் பெரும்பான்மையுடன், பா.ஜ., ஆட்சி அமைத்தது; நரேந்திர மோடி பிரதமரானார்

2015 - உலகிலேயே மிகவும் அதிகமாக, அதாவது, 11 கோடி பேரை உறுப்பினர்களை கொண்ட கட்சியாக, பா.ஜ., உள்ளதாக அறிவிக்கப்பட்டது.

Advertisement

வாசகர் கருத்து (8)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Samy Chinnathambi - rayong,தாய்லாந்து
07-ஏப்-201604:43:12 IST Report Abuse

Samy Chinnathambiஏன் அண்ணாச்சி நாடு முழுவதும் தாமரை குளம் வெட்ட போகிறாரா?

Rate this:
Sekar Sekaran - Jurong-West,சிங்கப்பூர்
07-ஏப்-201604:36:36 IST Report Abuse

Sekar Sekaranஇந்த வளர்ச்சி என்பது இவர்களின் செயல்பாட்டினால் அல்ல..காங்கிரசின் படுமோசமான ஆட்சியினால் வேறு வழியில்லாமல் தேர்ந்தெடுக்கப்பட்ட கட்சிதான் பா ஜ க..ஆனால் அதுகூட அடுத்த தேர்தலில் இல்லாமல் போய்விடும்..அந்த அளவுக்கு மோசமான ஆட்சியை கொடுக்கின்றார்கள் பா ஜ க வினர்.. மக்களின் மனதில் மோடியை பற்றிய எண்ணம் உச்சத்தில் இருந்தது..ஆனால் அவரது செயல்பாடும் சரி..அவரது கட்சியினரின் செயல்படும் விதமும் ச்சீ என்றாகிவிட்டது மக்களிடையே..அதனை மறுக்கலாம் சிலர்..உண்மையை அறியாமல்..தாமரை கருகிவருகின்றது பல இடங்களில்..அதுதான் நிஜம்..

Rate this:
மதுரை விருமாண்டி - சான் ஹோஸே, கலிபோர்னியா ,யூ.எஸ்.ஏ
07-ஏப்-201604:28:20 IST Report Abuse

மதுரை விருமாண்டி///2015 - உலகிலேயே மிகவும் அதிகமாக, அதாவது, 11 கோடி பேரை உறுப்பினர்களை கொண்ட கட்சியாக, பா.ஜ., உள்ளதாக அறிவிக்கப்பட்டது./// இதிலே ஒருத்தன் கூட தமிழ்னாட்டிலேருந்து இல்லன்குறது தான் செம காமெடி..

Rate this:
மேலும் 5 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X