அரசியல் செய்தி

தமிழ்நாடு

'தே.மு.தி.க.,வின் பி.ஆர்.ஓ., வைகோ' சந்திரகுமார் பாய்ச்சல்

Added : ஏப் 06, 2016 | கருத்துகள் (4)
Share
Advertisement
''தி.மு.க., கூட்டணி பலம் அடைந்து விடக் கூடாது என்பதற்காக, வைகோ, அ.தி.மு.க.,விடம், 1,500 கோடி ரூபாய் பணம் வாங்கினார்,'' என, தே.மு.தி.க.,விலிருந்து நீக்கப்பட்டுள்ள எம்.எல்.ஏ., சந்திரகுமார் குற்றம் சாட்டினார். அவர், நேற்று அளித்த பேட்டி: தி.மு.க.,வை, வைகோ உடைக்க முயற்சித்தபோது, அவருக்குப் பின்னால் இருந்து ஜெயலலிதா இயக்கினார் என்றனர். அந்த கருத்தை வைகோ ஒப்புக்கொள்ள வேண்டும். தி.மு.க.,
 'தே.மு.தி.க.,வின் பி.ஆர்.ஓ., வைகோ' சந்திரகுமார் பாய்ச்சல்

''தி.மு.க., கூட்டணி பலம் அடைந்து விடக் கூடாது என்பதற்காக, வைகோ, அ.தி.மு.க.,விடம், 1,500 கோடி ரூபாய் பணம் வாங்கினார்,'' என, தே.மு.தி.க.,விலிருந்து நீக்கப்பட்டுள்ள எம்.எல்.ஏ., சந்திரகுமார் குற்றம் சாட்டினார்.
அவர், நேற்று அளித்த பேட்டி: தி.மு.க.,வை, வைகோ உடைக்க முயற்சித்தபோது, அவருக்குப் பின்னால் இருந்து ஜெயலலிதா இயக்கினார் என்றனர். அந்த கருத்தை வைகோ ஒப்புக்கொள்ள வேண்டும். தி.மு.க., கூட்டணி, அதிக பலம் அடைந்து விடக்கூடாது என்பதற்காக, 1,500 கோடி ரூபாய் பெற்றுக் கொண்டு, தே.மு.தி.க.,வுடன், மக்கள் நலக் கூட்டணியை, வைகோ இணைத்து விட்டார் என்று பகிரங்கமாகவே, அவர் மீது நான் குற்றம் சுமத்துகிறேன்.
எங்கள் கட்சியான தே.மு.தி.க., விவகாரத்தில் தலையிடுவதற்கு, வைகோவுக்கு எந்த அதிகாரமும் கிடையாது. ம.தி.மு.க., பொது செயலர் பதவியை ராஜினாமா செய்து விட்டு தே.மு.தி.க.,வில், காலியாகவுள்ள பி.ஆர்.ஓ., பதவியில், வைகோ சேர்ந்தால் நல்லது. எங்களை வேறு தொழில் பார்க்க வேண்டும் என்று வைகோ கூறுகிறார். அவர்தான் எதற்கெடுத்தாலும் பேரம் என்கிறார். அரசியல் புரோக்கர் வேலையை அவர் சிறப்பாக செய்து கொண்டிருக்கிறார்.
வைகோ தவிர, திருமாவளவன், முத்தரசன், ராமகிருஷ்ணன் ஆகியோர், தே.மு.தி.க., உட்கட்சி விவகாரத்தில் தலையிட மாட்டோம் என்று கூறுகின்றனர். ஆனால், வைகோ மட்டும் இதில் மூக்கை நுழைக்கிறார். தே.மு.தி.க.,வை உருவாக்கிய எங்களுக்குதான், அந்த வலி தெரியும். வைகோ தொடர்ந்து இதே மாதிரி பேசிக் கொண்டிருந்தால், அதற்காக அவர் அசிங்கப்பட்டு; அவமானப்பட வேண்டியிருக்கும். இவ்வாறு அவர் பேட்டியளித்தார்.
- நமது சிறப்பு நிருபர் -

Advertisement


வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Chandrasekaran Padmanathan - mahe,செசேல்ஸ்
08-ஏப்-201602:52:02 IST Report Abuse
Chandrasekaran Padmanathan சந்திர குமார், விஜயகாந்த் பழம் தின்று கோயம்பேட்டு தெருவில் வீசி ஸ்டாலின் பொறுக்கிய தோல்.
Rate this:
Cancel
SIVA. THIYAGARAJAN - POLUR -TIRUVANNAMALAI,இந்தியா
07-ஏப்-201606:44:13 IST Report Abuse
SIVA. THIYAGARAJAN உரிமை, பங்கு , பாகம் இவைகளை யாரும் அவ்வளவு எளிதாக விட்டு கொடுப்பதே இல்லைங்க.ஆதி பழங்காலத்திலிருந்து.>>> அவரவர்கள் விஷயத்தில் அவரவர்கள் தலையிடத்தானே செய்வர். கூட்டாளி கூட்டு என்பது எதற்கு சம்பந்தப்படாமல் இருப்பதற்கா பங்காளி சண்டையல்லவே பின்ன எதற்கு>>>>>
Rate this:
Cancel
K.Sugavanam - Salem,இந்தியா
07-ஏப்-201602:05:44 IST Report Abuse
K.Sugavanam கருங்காலி PRO வா இருக்க முடியாதுன்னுந்தானே கப்டன் இந்தாளை த்தூ..இன்னு தூக்கி அடிச்சிட்டாரு..இப்போ இவர் திமுக வின் துவார பாலகர்..
Rate this:
Anandan - chennai,இந்தியா
07-ஏப்-201606:26:31 IST Report Abuse
Anandanஅப்போ அதிமுகவிற்கு வந்த 8 MLA வை என்னவென்று சொல்லுவது...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X