அரசியல் செய்தி

தமிழ்நாடு

கருணாநிதி மீதான விமர்சனம் வைகோ பகிரங்க மன்னிப்பு

Added : ஏப் 07, 2016 | கருத்துகள் (6)
Advertisement
 கருணாநிதி மீதான விமர்சனம் வைகோ பகிரங்க மன்னிப்பு

சென்னை: 'தி.மு.க., தலைவர் கருணாநிதியின் ஜாதியை குறிப்பிட்டு பேசியதை, வாழ்நாளில் செய்த குற்றமாகக் கருதுகிறேன். இந்த குற்றத்தை, தாய் உள்ளத்தோடு அவர் ஏற்க வேண்டும்' என, மக்கள் நல கூட்டணி ஒருங்கிணைப்பாளர் வைகோ கூறி உள்ளார்.
இது குறித்து, அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: தே.மு.தி.க.,வில் ஏற்பட்ட நிலை குறித்து, நிருபர்களிடம் நேற்று பேட்டி அளித்தேன். அப்போது, பணம் வாங்கிக் கொண்டு, கட்சி மாறுவது இழிவானது என கூறியபோது, இது உலகத்தின் ஆதித் தொழிலைப் போன்றது என கூறினேன். ஆனால், கருணாநிதி குறித்தோ, அவரது குடும்பத்தினர் குறித்தோ மறைமுகமாக இப்படி சொல்ல வேண்டும் என, இம்மி அளவும் என் மனதில் எண்ணம் இல்லை என்பதை, என் தாய் மீது ஆணையாகக் கூறுகிறேன்.
நாதஸ்வரம் வாசிக்கும் கலை அவருக்கு தெரியும் என்று கூறியது, தவறாக பொருள் கொள்ளும்படி ஆகிவிட்டது. அது மிகப் பெரிய தவறு தான். கருணாநிதியை ஜாதி குறிப்பிட்டு, நான் சொன்னதாக பழிப்பதற்கும் ஆளாகி விட்டதை எண்ணி, வேதனைப்படுகிறேன். இப்படி நான் கூறியதை, என் வாழ்நாளில் செய்த குற்றமாகவே கருதுகிறேன்; அதற்கு மன்னிப்பும் கேட்டுக் கொள்கிறேன். தாய் உள்ளத்தோடு, என் விளக்கத்தை கருணாநிதி ஏற்க வேண்டுகிறேன். இவ்வாறு அறிக்கையில் கூறி உள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து (6)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Chandrasekaran Padmanathan - mahe,செசேல்ஸ்
08-ஏப்-201602:31:44 IST Report Abuse
Chandrasekaran Padmanathan வைகோ பேசிய வார்த்தைகள் பல அரசியல்வாதிகள் மிக சாதாரணமாக பேசி நாம் பார்த்தவை. ஆயினும் வைகோ அப்படி பேசியது தவறு என்பதை மற்ற எவரும் சொல்லும் முன் தன் தவறை உடன் உணர்ந்து வருத்தம் தெரிவித்தது ஒன்றே வைகோ வை நான் இன்னும் மேலாக மதிக்க காரணமாகிறது. வைகோ, தான் ஒரு நற்குடி பிறப்பு, நல்ல பெற்றோர் வளர்ப்பு என்பதை உணர்த்திவிட்டார். வாழ்க வைகோ 
Rate this:
Share this comment
Cancel
Vilathur Nandhiyar - THANJAVUR ,இந்தியா
07-ஏப்-201606:46:15 IST Report Abuse
Vilathur Nandhiyar ...... விருதுபட்டியில் , கருவாட்டு வியாபாரம் செய்த, கருவாட்டுக்காரி சிவகாமியின் சீமந்த புத்திரன் தான் இந்த காமராஜன் என்று, ஒன்பது ஆண்டு பொற்கால ஆட்சி தந்த காமராஜரை அவமானபடுத்தி ஒருமையில் அர்ச்சித்தார், அரசியல் நாகரிகமற்ற கருணாநிதி... ”துறவியாகிவிட்ட பட்டினத்தடிகளை, அவர் தாய் துறந்து விட்டதை போல், நானும் என் மகனை இந்த நாட்டுக்காக, துறந்து விட்டு நிற்கிறேன்' என்று, மூத்த எழுத்தாளர் சாவியிடம், கண்கலங்கி கதறி அழுதிருக்கிறார், காமராஜரின் தாய் சிவகாமி. அந்த புண்ணியவதியைத் தான், “கருவாட்டுக்காரி' என்று, கரித்துக் கொட்டினார் கருணாநிதி..... தன் வாழ்வில், 4,000 நாட்களுக்கு மேல், கொடுஞ்சிறையில் கழித்ததாலும், குடும்பம், குழந்தை, குட்டிகள் என்றிருந்தால், பரிசுத்தமாக மக்கள் பணியாற்ற முடியாது என்றும், தன் தாய் எவ்வளவோ வேண்டியும், “திருமணம் வேண்டாம்' என்று, மக்கள் தலைவராக திகழ்ந்தார், காமராஜர்... அதற்கு, “காமராஜருக்கு யாரும் பெண் கொடுக்க முன்வரவில்லை' என, “நாகரிகத்தோடு' நல்கினார் கருணாநிதி.... ”காமராஜர் என்ன மெத்த படித்தவரா? முன்பெல்லாம் ரஷ்யாவிற்கு எருமை தோலை தான் இந்தியா ஏற்றுமதி செய்தது. இன்று, எருமையையே அனுப்பியுள்ளது' என, காமராஜர், ரஷ்யா சென்றதை பொறுத்துக் கொள்ள முடியாமல், பொறாமைப்பட்டு பேசினார் கருணாநிதி... ”ஐதராபாத் ஸ்டேட் பாங்கிலும், சுவிஸ் வங்கியிலும், பல கோடி ரூபாய், டெபாசிட் போட்டுள்ளார் காமராஜர்' என, அரசியல் “பண்பாட்டோடு'ம் பறைசாற்றினார் கருணாநிதி. அதற்கு, “அந்த கணக்கோட செக் புக்கை, கருணாநிதி கொண்டு வந்தால், கையெழுத்து போட்டு தருகிறேன் அவரே எல்லா பணத்தையும் எடுத்துக் கொள்ளட்டும்' என, நாகரிகத்தோடும், பண்பாட்டோடும் பதிலளித்தார் காலாகாந்தி. இதில் வேடிக்கை என்னவென்றால், காமராஜர் கண் மூடிய போது, அவர் ஜிப்பாவில் வெறும் 100 ரூபாயும், தேனாம்பேட்டை ஸ்டேட் பாங்கில், இரு மாத எம்.பி., சம்பளம், 10 ஆயிரம் ரூபாய் மட்டுமே இருந்தது. இந்த வேதனையிலும், வேடிக்கை என்னவென்றால் பேங்க் பாஸ்புக்கும், செக் புக்கும், சத்தியமூர்த்தி பவனில் தான் இருந்தன. .. இன்று, “கடந்த கால ஆட்சியின் போது, சுவிஸ் வங்கியில் கணக்கை அதிகரிப்பதில் தான், கருணாநிதி கவனம் செலுத்தினார்' என்று, சட்டசபையில் கருணாநிதி மீது கடுங்குற்றஞ்சாட்டினார் அதிமுக எம் எல் ஏ. முத்தாய்ப்பாக, “அண்டங்காக்கா, எருமை தோலர், காண்டாமிருகத் தோலர், பனை ஏறி, மரமேறி, நாடான், சாணான், நனைச்ச பனை, கட்டைப்பீடி காமராஜர், கோமாளி ராஜா, அறிவிலி, அலி வெறுந் தலைவன்' என்று, ஒரிஜினல் தென்னாட்டு காந்தியை, 1 சதவீதம் கூட, அரசியல் நாகரிகமோ, பண்பாடோ இல்லாமல், வாய்க்கு வந்தபடி வசைபாடினார் கருணாநிதி. இந்த லட்சணத்தில், “இன்று அரசியல் பண்பாடும் இல்லை, நாகரிகமும் இல்லை' என, நாக்கிலே வெல்லமாக பேசும் இவரை எதால் ....... ?? இன்றைய தலைமுறையினருக்கு தெரியவா போகுதுன்னு இவர் நல்லவர் வேஷம் போடுகிறார்....இதெற்கெல்லாம் மன்னிப்பு கேட்பாரா கருணாநிதி ..
Rate this:
Share this comment
Padikkadha Medhai - Trichy,இந்தியா
08-ஏப்-201600:47:19 IST Report Abuse
Padikkadha Medhaiநந்தியார் அவர்களே, காமராஜரின் வாழ்நாட்களுக்கு பிறகு பிறந்து வளர்ந்த என்னை மாதிரி மக்களுக்கு கருணாநிதி அவர்களின் அரசியல் நாகரிகத்தை வெளிச்சம் போட்டு கட்டியதுக்கு மிக்க நன்றி. I think people like "Theeppori Arumugam" were inspired by this great leader and they matched him in Obscenity and lack of Decorum. Thanks, again....
Rate this:
Share this comment
Cancel
Nava Mayam - New Delhi,இந்தியா
07-ஏப்-201606:32:11 IST Report Abuse
Nava Mayam விடுதலை புலிகள் ஆதரவாளர்கள் பணம் கிடைத்த வரை புலிகளுக்காக கூவினார்..இப்போ அம்மா பணம் வந்ததும் அவர்க்காக கூவுகிறார்..வைகோ வைக்கோல் திணித்த அரசியல் கன்னுகுட்டி..பயன்படாது..
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X