சம்பவம் செய்தி

தமிழ்நாடு

நோய் தாக்கிய பெண் யானை இறந்தது

Added : டிச 20, 2010
Share
Advertisement
சத்தியமங்கலம் : சத்தியமங்கலம் அருகே நோய் தாக்கி பெண் யானை இறந்தது. சத்தியமங்கலம் வனக்கோட்டத்துக்கு உட்பட்டது பவானிசாகர் வனப்பகுதி. இங்குள்ள புதுபீர்கடவு வனப்பகுதியில் ஒரு யானை இறந்து கிடப்பதாக வனத்துறைக்கு தகவல் கிடைத்தது. சத்தியமங்கலம் மாவட்ட வன அதிகாரி சதீஷ் உத்தரவின் பேரில், பவானிசாகர் ரேஞ்சர் சதாசிவம் மற்றும் வனத்துறையினர் சம்பவ இடத்துக்கு

சத்தியமங்கலம் : சத்தியமங்கலம் அருகே நோய் தாக்கி பெண் யானை இறந்தது. சத்தியமங்கலம் வனக்கோட்டத்துக்கு உட்பட்டது பவானிசாகர் வனப்பகுதி. இங்குள்ள புதுபீர்கடவு வனப்பகுதியில் ஒரு யானை இறந்து கிடப்பதாக வனத்துறைக்கு தகவல் கிடைத்தது. சத்தியமங்கலம் மாவட்ட வன அதிகாரி சதீஷ் உத்தரவின் பேரில், பவானிசாகர் ரேஞ்சர் சதாசிவம் மற்றும் வனத்துறையினர் சம்பவ இடத்துக்கு சென்றனர்.

வனத்துறை மருத்துவர் மனோகரன், இறந்த பெண் யானைக்கு பிரேத பரிசோதனை செய்தார். மருத்துவர் மனோகரன் கூறுகையில், ""இறந்த யானைக்கு 20 வயது இருக்கும்; வயிற்று வலி காரணமாக யானை இறந்துள்ளது,'' என்றார். பிரேத பரிசோதனை முடிந்ததும், சம்பவ இடத்திலேயே கழுகு, காட்டுப்பன்றி போன்றவைகளுக்கு இறந்த யானை உணவாக விடப்பட்டது.


Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X