சம்பவம் செய்தி

தமிழ்நாடு

குழந்தையை கொலை செய்து நாடகமாடிய தாய் கைது

Added : டிச 20, 2010 | கருத்துகள் (3)
Share
Advertisement
பொள்ளாச்சி : பொள்ளாச்சி அருகே பெற்ற குழந்தையை கிணற்றில் வீசி கொலை செய்துவிட்டு, வழிப்பறி கொள்ளையர்கள் கொலை செய்ததாகக் கூறி நாடகமாடிய தாயை போலீசார் கைது செய்தனர். பொள்ளாச்சி அடுத்த அகிலாண்டபுரத்தைச் சேர்ந்தவர் தர்மராஜ் (27); அதே பகுதியைச் சேர்ந்தவர் காளீஸ்வரி (24). இருவரும், ஆனைமலையில் தனியார் ஜவுளி நிறுவனத்தில் வேலை செய்தனர். அப்போது, இருவருக்கும் காதல் ஏற்பட்டது.

பொள்ளாச்சி : பொள்ளாச்சி அருகே பெற்ற குழந்தையை கிணற்றில் வீசி கொலை செய்துவிட்டு, வழிப்பறி கொள்ளையர்கள் கொலை செய்ததாகக் கூறி நாடகமாடிய தாயை போலீசார் கைது செய்தனர். பொள்ளாச்சி அடுத்த அகிலாண்டபுரத்தைச் சேர்ந்தவர் தர்மராஜ் (27); அதே பகுதியைச் சேர்ந்தவர் காளீஸ்வரி (24). இருவரும், ஆனைமலையில் தனியார் ஜவுளி நிறுவனத்தில் வேலை செய்தனர்.

அப்போது, இருவருக்கும் காதல் ஏற்பட்டது. இதற்கு இருதரப்பிலும் எதிர்ப்பு கிளம்பியதால், இரண்டரை ஆண்டுகளுக்கு முன் வீட்டை விட்டு வெளியேறி, திருமணம் செய்து கொண்டனர். அதன்பின், தாத்தூரில் தனிக்குடித்தனம் நடத்தினர். இவர்களுக்கு, ஒன்றரை வயதில் சவுந்தர்ராஜ் என்ற ஆண் குழந்தை இருந்தது. திருமணத்திற்குப் பின், தர்மராஜ் மட்டும் ஜவுளி மில்லில் பணியாற்றி வருகிறார்; காளீஸ்வரி வேலைக்கு செல்வதில்லை.

நேற்று முன்தினம், ஆனைமலை மெயின் ரோட்டிலிருந்து காளீஸ்வரி தனது மகன் சவுந்தர்ராஜுடன் தாத்தூருக்கு நடந்து வரும் போது, அடையாளம் தெரியாத இருவர் "பைக்'கில் வந்து வழிப்பறி செய்ததாகவும், தன்னிடம் இருந்த நான்கு சவரன் தாலிக்கொடியை பறித்துக் கொண்டு, சத்தம் போட்டால் குழந்தையைக் கொன்று விடுவதாகக் கூறி கீழே தள்ளிவிட்டு, குழந்தையை கொண்டு சென்றதாகவும் கூறினார்.

இந்நிலையில், தாத்தூரில் இருந்து ஆனைமலை மெயின் ரோட்டிற்கு வரும் வழியிலுள்ள பொதுக்கிணற்றில், குழந்தையின் சடலம் மிதந்ததை போலீசார் கண்டுபிடித்தனர். வழிப்பறியில் ஈடுபட்ட கொள்ளையர்கள், குழந்தையை கடத்தி கிணற்றில் எதற்காக வீசி கொலை செய்தனர் என்பதைக் கண்டறிய போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டனர்.

குழந்தையின் தாய் காளீஸ்வரியிடம், விசாரித்தபோது முன்னுக்குப் பின் முரணாக பதிலளித்துள்ளார். இதனால், சந்தேகமடைந்த போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தினர்.

போலீசார் கூறியதாவது: வீட்டை எதிர்த்து காதல் திருமணம் செய்து கொண்ட தர்மராஜ் - காளீஸ்வரி இருவருக்கும் பெற்றோருடன் சேர வேண்டும் என்ற ஆர்வம் இருந்தது. இதனால், இருவருக்கும் அடிக்கடி கருத்து வேறுபாடு ஏற்பட்டு, வாக்குவாதம் ஆகியுள்ளது. ஒருகட்டத்தில், காளீஸ்வரி, பெற்றோருடன் இணைய முடிவு செய்துள்ளார்.

இதற்கு குழந்தை இடையூறாக இருக்கும் என நினைத்து, தாத்தூர் செல்லும் வழியிலுள்ள புதரில் தாலிக்கொடியை போட்டுவிட்டு, குழந்தையை அருகிலுள்ள கிணற்றில் வீசி கொலை செய்துள்ளார். அதன்பின், கணவனையும், பொதுமக்களையும் நம்ப வைப்பதற்காக வழிப்பறி கொள்ளையர்கள் நகையைப் பறித்து, குழந்தையை கடத்திச் சென்றதாகக் கூறி நாடகமாடியுள்ளார். விசாரணையில், குழந்தையை கொலை செய்ததை காளீஸ்வரி ஒப்புக் கொண்டார். அவரை போலீசார் கைது செய்தனர்.


Advertisement


வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Anitha - Dubai,யுனைடெட் கிங்டம்
20-டிச-201011:51:22 IST Report Abuse
Anitha நேற்று இந்த நியூஸ் படித்துவிட்டு இரவு தூங்கவில்லை, அந்த தாய் மனம் என்ன பாடுபடும் என்று நினைத்து. ஆனால்...............அவளே பெற்ற பிள்ளையை கொன்று வீசி இருக்கிறாள். அவளுக்கு அந்த குழந்தை வேண்டாம் என்றால் எதாவது அநாதை இல்லத்தில் போட்டு இருக்கலாம், எத்தனை பேர் குழந்தை இல்லாமல் தவிக்கிறார்கள். இவள் தாய் அல்ல பேய். இவளுக்கு நோ ஜெயில் உடனே தூக்கில் போடவேண்டும்.
Rate this:
Cancel
H.Lakshminarayanan - Chennai,இந்தியா
20-டிச-201009:47:10 IST Report Abuse
H.Lakshminarayanan Before the case come to the court all the police men will use her and have relationship with her. once gone to the court means lawyers and judges will have relationship with her and use her. So india no legal sex market except in the justice and police department
Rate this:
Cancel
சிவா - சென்னை,இந்தியா
20-டிச-201006:14:38 IST Report Abuse
சிவா இதெல்லாம் எதுக்கு பிள்ளை பெத்துக்கனும்? பேசாம நைட் ஷோ போயிருக்கலாம்...பாவம் அந்த குழந்தை..god bless you child ...கண்ணீருடன்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X