ஜேம்ஸ்பாண்ட் பட நாவல்கள் லண்டனில் ஏலம்| Dinamalar

ஜேம்ஸ்பாண்ட் பட நாவல்கள் லண்டனில் ஏலம்

Added : டிச 20, 2010

லண்டன்: ‌‌‌‌‌‌ஜேம்ஸ்பாண்ட் பட கதாபாத்திரத்தினை உருவாக்கியதற்கான மூலக்காரணமான புத்தகம் லண்டனில் 19 ஆயிரம் பவுண்டுகளுக்கு ஏலம் போனது.  லண்டனைச் சேர்ந்த இயான் பிளமிங் எனும் எழுத்தாளரின் கற்பனை கதாபாத்திரத்தில்  உருவானது தான் 007 ஜேம்ஸ்பாண்ட் திரைபடங்கள் ஆகும்.  இவர் எழுதிய நாவல்களை தழுவி திரைப்படமாக தயாரிக்கப்பட்டு உலகம் மூழுவதும் வெளியிடப்பட்டு வெற்றி பெற்று வந்தன. இந்நிலையில் இவரது முதல் நாவலான காஸினோ ராயல் எனும் நாவல் பிரிட்டனின் க்ளவுஸ்டர்ஸ்சையர்ஸ் மாகாணத்தில் உள்ள கெர்னி ஏல நிறுவனத்தில் வைத்து ஏலம் போனதில் 19 ஆயிரம் பவுண்டுகளுக்கும், இரண்டாவது நாவலான லைவ் அன்ட் லெட் டை  6,600 பவுண்டுகளுக்கும், மூன்றாவது நாவலான  மூன்ரேக்கர் 7,2000 பவுண்டுகளுக்கும் ஏலம் போனது.  இது குறித்து  ஏல விற்பனை நடத்துபவர்  டொமினிக் வென்டர் கூறுகையில், எப்‌பொழுதுமே ஜேம்ஸ்பாண்ட் பட நாவல்கள் என்றால் அதனை வாங்குவதற்கு பெரும் ரசிகர் கூட்டம் தான் கூடும். அதன்படி கடந்த 2004-ம் ஆண்டு   ஜேம்ஸ்பாண்டின் நாவல் 22 ஆயிரத்து 750 பவுண்டுகளுக்கு லண்டனில்உள்ள புளும்ஸ்பெர்ரியில் ஏலம்போனது. எனினும் இப்போது நடந்த ‌ஏலத்தில் அதிக தொகையினை பேட்மேன் எனும் நாவல்  24 பவுண்டுகள் ஏலம்போனதாக கூறப்படுகிறது. 


Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X