அரசியல் செய்தி

தமிழ்நாடு

பதிவு செய்த நாள் :
இன்று தேர்தல் பிரசாரம் துவக்குகிறார் ஜெ.,
ஒரே மேடையில் 20 வேட்பாளர்கள் அறிமுகம்

சென்னை தீவுத் திடலில் முதல்வர் ஜெயலலிதா இன்று மாலை தேர்தல் பிரசாரத்தை துவக்குகிறார்.

 இன்று தேர்தல் பிரசாரத்தை துவக்குகிறார் ஜெ.,ஒரே மேடையில் 20 வேட்பாளர்கள் அறிமுகம்


சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க., சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை அறிமுகம் செய்யும் அவர் கட்சியின் தேர்தல் அறிக்கையையும் வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. அ.தி.மு.க., வேட்பாளர் பட்டியல் ஏப்., 4ம் தேதி வெளியிடப்பட்டது. அ.தி.மு.க., வேட்பாளர்களை ஆதரித்து முதல்வர் ஜெயலலிதா இன்று பிரசாரத்தை துவக்குகிறார். தமிழகம் முழுவதும் 15 பொதுக்

கூட்டங்களில் பங்கேற்கும் அவர் அ.தி.மு.க., மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்ய உள்ளார்.

சென்னை, தீவுத்திடலில் இன்று மாலை 6:00 மணிக்கு நடைபெறும் பொதுக் கூட்டத்தில், பெரம்பூர் கொளத்துார், வில்லிவாக்கம், திரு.வி.க.நகர் (தனி), எழும்பூர் (தனி),ராயபுரம், துறைமுகம், சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி, ஆயிரம் விளக்கு, அண்ணா நகர், விருகம்பாக்கம், சைதாப்பேட்டை, தியாகராய நகர், மயிலாப்பூர், வேளச்சேரி, சோழிங்கநல்லுார், ஆலந்துார், மதுரவாயல், மாதவரம், திருவொற்றியூர் என 20 வேட்பாளர்களை அறிமுகப்படுத்தி ஓட்டு சேகரிக்க உள்ளார்.மேலும் இக்கூட்டத் தில் அ.தி.மு.க., தேர்தல் அறிக்கையை வெளியிடுவார் என்ற எதிர்பார்ப்பும் நிலவுகிறது.

கலங்கடிக்கும் 'சென்டிமென்ட்': சென்னை தீவுத்திடலில்முதல்வர் பிரசாரத்தை துவக்குவது அ.தி.மு.க.,வினரிடம் கலக்கத்தை ஏற்படுத்தி உள்ளது.கடந்த 1996 சட்டசபை தேர்தல், 2009 லோக்சபா தேர்தல் ஆகியவற்றின்போது ஜெயலலிதா தேர்தல் பிரசாரத்தை தீவுத்திடலில்

Advertisement

துவக்கினார். அந்த தேர்தல்களில் அ.தி.மு.க., தோல்வியை தழுவியது; தி.மு.க., வெற்றி பெற்றது.
அடுத்து 2011 சட்டசபை தேர்தலில், அதே இடத்தில், தி.மு.க., பொதுக் கூட்டம் நடத்தியது. அந்த தேர்தலில் அ.தி.மு.க., வெற்றி பெற்றது. இங்கு பொதுக் கூட்டம் நடத்தினால், தோல்வி நிச்சயம் என்ற 'சென்டிமென்ட்' உள்ள நிலையில், 2016 தேர்தல் பிரசாரத்தை ஜெயலலிதா தீவுத்திடலில் துவக்குவது அக்கட்சியினரிடம் கலக்கத்தை ஏற்படுத்தி உள்ளது.- நமது நிருபர் -

Advertisement

வாசகர் கருத்து (76)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Paran Nathan - Edmonton,கனடா
09-ஏப்-201615:17:08 IST Report Abuse

Paran Nathanதிரையுலகில் ஜெயாவின் ரசிகராக இருந்த என்னால் ஜெயா அரசியலில் புகுந்தபோது ஏற்றுக்கொள்ளமுடியவில்லை. முதலாவது தடவை ஆட்சி அமைத்தபோதும் அதே நிலை. கலைஞர்தான் எல்லாமே எனக்கு. ஜெயா ஆட்சியை இழந்தபோது அவரை அவமானப்படுத்தியதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. 2வது தடவை ஜெயா ஆட்சி அமைத்த போது ஆச்சரியம் அதன்பின் ஜெயாவைப்பற்றி ஆராய்ந்த போது ஆச்சரியமான தகவல்கள் கிடைத்தன. ஏதோ ஒன்று இந்த பெண்ணிடம் இருக்கின்றது என்று என்னால் உணர முடிந்தது. தமிழக மக்களே குறிப்பாக இளைய தலைமுறையினரே இந்த தேர்தல் எல்லா அரசியல் கட்சிகளையும் இல்லாமல் செய்யும். ஜெயாவின் பரிபூரணமான வெற்றி நாளை உங்களில் ஒருவரை அடையாளம் காட்டக்கூடிய வெற்றி. நீங்கள்தயரா???

Rate this:
james arul rayan - chennai ,இந்தியா
09-ஏப்-201614:18:24 IST Report Abuse

james arul rayanமுதலில் தேர்தல் தேதி அறிவித்தவுடன் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமல்படுத்தபடுவது போல் ஜனாதிபதி ஆட்சியையும் அமல்படுத்திவிட வேண்டும். போட்டியிடும் எல்லாருக்கும் சமஉரிமை வழங்கப்பட வேண்டும். முதல்வர் ஆளும்கட்சி என்ற பாகுபாடு இருக்ககூடாது .

Rate this:
Vikky - Singapore,சிங்கப்பூர்
09-ஏப்-201613:28:16 IST Report Abuse

Vikkyஎன்ன சாதனையை சொல்லி ஓட்டு கேட்பீர்கள் , "5 வருடம் சேற்று தவளை போல் இருந்தேன், கும்பகர்ணன் போல் குறட்டை விட்டேன், சிறுதாவூர் , கொடநாடு என்ற இரண்டு பதுங்கு குழிகளில் பதுங்கி இருந்தேன், அத்தி பூத்தாற்போல் வெளி உலகிற்கு காட்சி தந்தேன், ஆகவே ஓட்டு போடுங்கள் செய்வீர்களா , நீங்கள் செய்வீர்களா???? மக்கள் : "செஞ்சிருவோம், ......."

Rate this:
மேலும் 73 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X