சி.பி.ஐ., அதிகாரிகளை தாக்கி சுங்க அதிகாரி கடத்தல்?| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

சி.பி.ஐ., அதிகாரிகளை தாக்கி சுங்க அதிகாரி கடத்தல்?

Added : ஏப் 09, 2016
Advertisement
 சி.பி.ஐ., அதிகாரிகளை தாக்கி சுங்க அதிகாரி கடத்தல்?

மதுரை:மதுரையில், லஞ்ச புகார் குறித்து விசாரணை நடத்திய, சி.பி.ஐ., அதிகாரிகளை தாக்கி, சுங்க அதிகாரியை கடத்திய சம்பவம், அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.மதுரை பி.பி.குளத்தில், மத்திய சுங்கம், கலால் மற்றும் சேவை வரித்துறை அலுவலகம் உள்ளது. அங்கு லஞ்சம் கேட்கப்படுவதாக, புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த முருகேசன் என்பவர், சி.பி.ஐ., அதிகாரிகளிடம் புகார் அளித்தார்.
இதுகுறித்து விசாரிக்க, நேற்று முன்தினம் இரவு, 7:00 மணிக்கு, சி.பி.ஐ., அதிகாரிகள், சுங்கத் துறை அலுவலகத்திற்கு வந்தனர். அங்கு, கண்காணிப்பாளர் அசோக்ராஜ், ஹவில்தார் கிருஷ்ணன் ஆகியோரிடம் விசாரணை நடத்தி, சில ஆவணங்களை கைப்பற்றினர். பின், அசோக்ராஜ், கிருஷ்ணனை கைது செய்யும் நடவடிக்கையில்ஈடுபட்டனர். அப்போது, வேனில் வந்த பத்து பேர் கும்பல், சி.பி.ஐ., அதிகாரிகளிடம் அசோக்ராஜ், கிருஷ்ணனை விடுவிக்கும்படி கூறி தகராறில் ஈடுபட்டனர்.
அதிகாரிகளிடமிருந்த ஆவணங்களை கிழித்து எறிந்தனர். பின், சி.பி.ஐ., அதிகாரிகளை தாக்கி, அசோக்ராஜை, கும்பல் வேனில் கடத்தி சென்றது. இதுகுறித்த விசாரணையில், அசோக்ராஜை கடத்தியவர்கள், மத்திய சுங்கம், கலால் துறை அதிகாரிகள் சங்கம் நடத்தும், பள்ளியைச் சேர்ந்தவர்களும், அவர்களது கூட்டாளிகளும் என, தெரியவந்தது. மேலும், அந்த சங்க நிர்வாகிகளில் ஒருவரான அசோக்ராஜ், சி.பி.ஐ., அதிகாரிகள், தன்னை கைது செய்வர் எனக் கருதி, சங்க நிர்வாகிகளுக்கு தகவல் கொடுத்து, அதிகாரிகளை தாக்கிவிட்டு, வேனில் சென்றது தெரியவந்தது.கும்பலை கைது செய்ய, போலீசார் தனிப்படை அமைத்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X