'பனாமா பேப்பர்ஸ்' மோசடி விவகாரம் அறிக்கை சமர்ப்பிக்க மோடி உத்தரவு Dinamalar
பதிவு செய்த நாள் :
'பனாமா பேப்பர்ஸ்' மோசடி விவகாரம்
அறிக்கை சமர்ப்பிக்க மோடி உத்தரவு

புதுடில்லி: வெளிநாடுகளில், இந்தியர்கள், போலி நிறுவனங்கள் துவக்கி சட்ட விரோதமாக, பணம் முதலீடு செய்ததாக வெளியான, 'பனாமா பேப்பர்ஸ்' பட்டியல் தொடர்பாக, 15 நாட்களில், முதல் அறிக்கையை தாக்கல் செய்யும்படி, அதிகாரிகளுக்கு பிரதமர் நரேந்திர மோடி உத்தரவிட்டுள்ளார்.

 'பனாமா பேப்பர்ஸ்':அறிக்கை தர உத்தரவு

மத்திய அமெரிக்க நாடுகளில் ஒன்றான பனாமாவை சேர்ந்த, 'மொஸாக் பொன்ஸீகா' என்ற நிறுவனம், உலகம் முழுவதும் உள்ள, 'பண முதலைகள்' போலி பெயர்களில் நிறுவனங்கள் துவங்கி, அவற்றில் சட்டவிரோதமாக முதலீடு செய்வதற்கான சேவைகளை வழங்கி வந்தது. 500 இந்தியர்கள்இந்நிறுவனம் மூலம், வெளிநாடுகளில் உள்ள போலி

நிறுவனங்களில் முதலீடு செய்ததாக, பாலிவுட்நடிகர் அமிதாப் பச்சன், நடிகை ஐஸ்வர்யா ராய், டி.எல்.எப்., நிறுவனதலைவர் குஷண் பால்சிங் உள்ளிட்ட, 500 இந்தியர்களின் பெயர்கள் அடங்கிய பட்டியல், 'பனாமா பேப்பர் லீக்ஸ்' என்ற பெயரில், சமீபத்தில் வெளியானது.மேலும், உலகின் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த தலைவர்கள், வி.வி.ஐ.பி.,க்களின் பெயர்களும் இதில் இடம் பெற்றன.
உலகின் பல்வேறு நாடுகளிலும், இந்தியாவிலும், மக்கள் மத்தியில், இப்பட்டியல் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்நிலையில், பெல்ஜியம், அமெரிக்கா, சவுதி அரேபியா ஆகிய நாடுகளுக்கு சுற்றுப்பயணம் சென்றிருந்த பிரதமர் நரேந்திர மோடி, ஐந்து நாட்களுக்கு பின், சமீபத்தில் நாடு திரும்பினார்.
அப்போது, 'பனாமா பேப்பர்ஸ்' விவகாரத்தில், இந்தியர்களின் பெயர்கள் இடம்பெற்றதற்கு வருத்தம் தெரிவித்த பிரதமர் மோடி, அடுத்த, 15நாட்களில் இதுகுறித்து முதல் அறிக்கை தாக்கல் செய்யும்படி, அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
அறிவுறுத்தல்இந்த விவகாரம் குறித்து, எஸ்.ஐ.டி., எனப்படும், சிறப்பு புலனாய்வு அமைப்பு விசாரிக்க வேண்டாம் என்றும், சிறிய அளவிலான நிபுணர் குழு விசாரித்தால் போதும் என்றும்,

Advertisement

பிரதமர் அறிவுறுத்தி உள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.நிபுணர் குழு ஆலோசனை
'பனாமா பேப்பர்ஸ்' விவகாரம் குறித்து விசாரிக்க, சிறப்பு நிபுணர் குழுவை, மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி அமைத்திருந்தார். இக்குழுவில், நிதிப்புலனாய்வு பிரிவு, வரி ஆராய்ச்சி பிரிவு, மத்திய நேரடி வரிகள் புலனாய்வு பிரிவு, ரிசர்வ் வங்கி ஆகியவற்றை சேர்ந்த நிபுணர்கள் இடம் பெற்றிருந்தனர். இவர்கள், 7ல், டில்லியில் கூடி, பனாமா பேப்பர்ஸ்
விவகாரம் குறித்து, ஆலோசனை நடத்தினர்.


Advertisement

வாசகர் கருத்து (14)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Desabakthan - San Francisco,யூ.எஸ்.ஏ
10-ஏப்-201610:09:07 IST Report Abuse

Desabakthanசக்திவாய்ந்த மாபியா இதுவரை இத்தாலி காரங்கன்னு நினைச்சிருந்தது தவறு. ரஷ்யாகாரங்க தான். நம்ம பெருந்தலைகளுக்கும் அவனுகளுக்கும் தான் பல கால சுமுக உறவு உண்டே. அப்புறம் எப்படி போய் புடிக்க போறாங்களாம்?. முளையிலேயே கிள்ளி எறிய வேண்டிய காலமெல்லாம் போய் விட்டது. லஞ்சம் தலை தூக்க ஆரம்பிக்கும் போதே நசுக்காமல் விட்டுவிட்டு இப்போ லஞ்சம் அவசியம்னு சட்டம் நியமிக்கிற காலத்துல போய் சும்மா கருப்பு பணக்காரனை கூண்டிலேற்றி விடுவோம் முகமூடியை கிழிப்போம் என்பது நிச்சயம் மோடியால், ஏன் கடவுளே வந்தாலும் கூட முடியாது. இப்பவும் தானாக முன்வந்து வரி செலுத்தும் திட்டம் எனபது இந்த கருப்பு பண முதலைகள் மிரட்டி அஞ்சு பத்து அரசு கஜானாவுல சேர்த்து ராஜ உபசாரம் பண்ணுவதென்பது என்னை பொருத்தவரை ஒரு அதிகார பூர்வ லஞ்சமே. மாத சம்பளம் வாங்குவோனுக்கு தான் ரிடைர்மென்ட் திட்டம் அதில் வரி எல்லாம் கண்ணுமுன்னாலே நேற்றுவரை கஞ்சிக்கு வழியில்லாதவன் இன்று திடீர் பணக்காரனாய் பென்ஸ் காரில் வருவோனுக்கு எந்த விசாரணையோ வரியோ கிடையாது.

Rate this:
Desabakthan - San Francisco,யூ.எஸ்.ஏ
10-ஏப்-201609:50:44 IST Report Abuse

Desabakthanஏற்கனவே அதானி சகோதரர்களில் ஒருவர் பெயரும் அதில் இருப்பதை இந்த செய்தி ஏனோ மறைத்துள்ளது. லிஸ்ட் வாங்கி என்ன பிரயோஜனம்? பெயரை வெளியிட தில்லுண்டா இல்லை விருந்துண்டு மத்திய தர மக்களை ஆட்டுக்கல்லில் போட்டு ஆட்டவா? இங்கிருந்து வெளியே போகும்போது எவரும் கண்டுக்கவே இல்லை. இப்போ உதார் விட்டு கொண்டிருக்கிறார்கள். மோடி எனும் தனி மனிதர் மாபெரும் மக்கள் அபிமானத்தில் வந்தவர் ரிமோட்-இல் இயங்குவது இயக்கப்படுவது (வேற யாரு அதே காஷ்மிரி காங்.பரம்பரை கொய்யா பணம் தான்) ரொம்ப வருத்தமளிக்கிறது. எந்தக்கட்சி வந்தாலும் அவர்கள் அபிமானிகளை தண்டிக்க போவதில்லை. அப்புறம் எப்படி பணம் திரும்பி வரும். ஒழுங்க வரி கட்டிக்கிட்டிருகிறவன் தான் இலவசம், ஊதாரித்தனம், இந்த விசாரணைக்கான தண்ட செலவுக்கும் வரி கட்டி அழணும். ஆனா கருப்பு பண முதலைங்க சுரண்டின நாட்டிலையும் சுகம், பதுக்கின நாட்டிலேயும் (அமெரிக்காவையும் சேர்த்து தான்) சுகம் அனுபவிப்பாங்க. இந்த மோடிக்கும் ஜெட்லிக்கும் நிஜ தையிரியம் இருந்தால் கருப்பு பண ஆட்களிடமிருந்து எவ்வளவு அரசு கஜனாவுல மிரட்டி சேர்த்தாங்க என்பதை பொது மக்களுக்கு தெரிவிக்க வேண்டும். அதுதான் மோடியின் நிர்வாகம், ஒழுக்கம், நேர்மை தவிர்த்து அவதார புருஷராக இருப்பின் பெருமை.

Rate this:
மதுரை விருமாண்டி - சான் ஹோஸே, கலிபோர்னியா ,யூ.எஸ்.ஏ
10-ஏப்-201608:54:36 IST Report Abuse

மதுரை விருமாண்டிபணம் இருந்தது, ஆனா இல்லே ன்னு.. அறிக்கையை ஜெட்லீ வாசிப்பார்..

Rate this:
மேலும் 11 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X