பதிவு செய்த நாள் :
கேரள கோவிலில் கோர வெடி விபத்து
தீயில் கருகி 105 பக்தர்கள் பலி

கொல்லம்:கேரள மாநிலம் கொல்லம் அருகே, பரவூர் புற்றிங்கல்தேவி கோவில் திருவிழாவில், போட்டி, 'வாணவேடிக்கை'யின் போது, பட்டாசு வெடித்து பெரும் தீ விபத்து ஏற்பட்டது. திடீரென தீப்பிடித்து மளமளவென பரவியதில், 105 பேர் தீயில் கருகி பலியாயினர்.

கேரள கோவிலில் கோர வெடி விபத்து தீயில் கருகி 105 பக்தர்கள் பலி

கொல்லம் அருகே உள்ள, பரவூர் புற்றிங்கல்தேவி கோவில் பிரசித்தி பெற்றது. தனியார் நிர்வகிக்கும் இக்கோவிலில், பங்குனி மாதத்தின் கடைசி, 10 தினங்கள், 'மீனபரணி' என்ற உற்சவம் நடக்கும். பத்தாம் நாள் இரவில், 'கம்பம் கட்டு' என்ற, 'வெடி வழிபாடு' நடக்கும். போட்டி 'வாண வேடிக்கை' இதற்காக கோவிலின் முகப்பில் உள்ள, திடலில் வெடிமருந்து களை போட்டு வெடிக்கச் செய்ய இரும்பு குழாய்கள் நடப்பட்டிருக்கும். இந்த குழாய்களில் வெடிமருந்துகளை நிரப்பி, 'வாண வேடிக்கை' நிகழ்த்துவர். ஆண்டுதோறும் வெடி வழிபாட்டின் போது, இரு குழுக்களுக்கு இடையே, போட்டி, 'வாண வேடிக்கை' நடக்கும்.
கலெக்டர் தடை :தற்போது கோவிலை சுற்றிலும் நிறைய வீடுகள் வந்து விட்டன. வெடி வழிபாட்டில் விபரீதம் நடக்கலாம் என்பதால், தடை கோரி அப்பகுதியினர் கொல்லம் கலெக்டர் சைனாமோளிடம் மனு கொடுத்திருந்தனர். அதனால், 'வாண வேடிக்கை'க்கு தடை விதிக்கப்பட்டது.
வெடிமருந்து பதுக்கல்:இருப்பினும், 9ம் தேதி இரவு, 11:00 மணிக்கு, 'வெடி வழிபாடு' துவங்கியது. தடை விதிக்கப்பட்டதால் வெடிகளையும், அதற்கான மருந்து பொருட்களையும் மறைத்து வைத்திருந்தனர். இரவு, 11:00 மணி முதல், அதிகாலை, 3:00 மணி வரை, 80 சதவீத, 'வாண வேடிக்கை' முடிந்து விட்டது.

அதிகாலை, 3:10 மணிக்கு, வெடியின் தீப்பிழம்பு, கட்டடம் ஒன்றில் வைக்கப்பட்டிருந்த வெடிக்குவியலில் விழுந்தது. சில நிமிடங்களில், அந்த கட்டடம் பலத்த சத்தத்துடன் வெடித்து தரைமட்டமானது. வெடிமருந்துகளில் இருந்து ஒரு பனைமர உயரத்திற்கும் மேலாக தீப்பிழப்பு எழுந்தது.
கட்டடங்கள் சேதம்:கட்டடம் வெடித்து சிதறியதில், 200 மீட்டர் சுற்றளவில் இருந்த கட்டடங்கள் அனைத்தும் சேதம் அடைந்தன. புற்றிங்கல்தேவி கோவிலை சுற்றியுள்ள சிறிய மண்டபங்களும் தகர்ந்தன. இதில், 60 பேர் சம்பவ இடத்திலேயே இறந்தனர்; 200க்கும் மேற்பட்டோர் தீக்காயங்களுடன் பரிதவித்தனர்.

வெடி விபத்தால், அப்பகுதி முழுவதும் மின்சாரம்துண்டிக்கப்பட்டது. மக்கள் அலை பாய்ந்து மரண ஓலத்துடன் ஓட்டம் பிடித்தனர். பரவூர், கொல்லம் உள்ளிட்ட இடங்களில் இருந்து தீயணைப்பு துறையினர் வந்து தீயை அணைத்தனர். காயம் அடைந்தவர்கள் கொல்லம் அரசு மருத்துவமனை, திருவனந்தபுரம், கொட்டியம் தனியார் மருத்துவமனைகளிலும் அனுமதிக்கப்பட்டனர். அடுத்த சில மணி நேரங்களில் இறப்பு எண்ணிக்கை அதிகரித்தது.105 பேர் பலி:இந்த சம்பவத்தில், 60 பேர் இறந்திருக்கலாம் என, கணக்கிடப்பட்டது. அரசு மருத்துவமனையில், 20க்கும் மேற்பட்டோர் இறந்தனர். நேற்று மாலை நிலவரப்படி, 105 பேர் பலியாயினர். இதில், பலர் ஆண்கள். இதில், 56 பேர் உடல் மட்டுமே அடையாளம் காணப்பட்டு உள்ளது. மீதமுள்ளவர்களின் உடல் அடையாளம் காண முடியாத அளவு கருகி விட்டதால், டி.என்.ஏ., பரிசோதனை நடத்த முடிவு செய்யப்பட்டு உள்ளது.
நீதி விசாரணை:சம்பவம் நடந்த இடத்தை, கேரள முதல்வர் உம்மன் சாண்டி, உள்துறை அமைச்சர் ரமேஷ் சென்னிதலா, எதிர்க்கட்சி தலைவர் அச்சுதானந்தன், கலெக்டர் சைனாமோள் ஆகியோர் பார்வையிட்டனர். நிவாரண நிதி: தீ விபத்தில், இறந்தவர்கள் குடும்பத்துக்கு பிரதமர் நிவாரண நிதியில் இருந்து, 2 லட்சம் ரூபாய், மாநில அரசு நிதியில்இருந்து, 10 லட்சம் ரூபாய் வழங்கப்படும் என, அறிவிக்கப்பட்டுள்ளது. காயம் அடைந்தவர்களுக்கு மருத்துவச் செலவு முழுவதையும் மாநில அரசு ஏற்றுக்கொள்ளும் என, முதல்வர், உம்மன் சாண்டி அறிவித்துள்ளார்.

நீதி விசாரணை:விபத்து குறித்து விசாரித்து அறிக்கை சமர்ப்பிக்க, ஓய்வு பெற்ற நீதிபதி கிருஷ்ணன் நாயர் நியமிக்கப்பட்டு உள்ளார். அவர், ஆறு மாத காலத்துக்குள் அறிக்கை சமர்ப்பிப்பார்.
எச்சரிக்கையை மீறியதே காரணம்:வாண வேடிக்கை வெடிகள், அதிகளவில் குவித்து வைக்கப்பட்டதே விபத்தின் கோரத்தை அதிகப்படுத்தி உள்ளது. வாண வேடிக்கையின் போது, ஒரு வெடி திசை மாறி விழுந்து ஒருவர் காயம் அடைந்தார். உடனே, வாண வேடிக்கையை நிறுத்தும்படி போலீசார் எச்சரித்தனர். ஆனால், இன்னும் சிறிதளவே இருக்கிறது எனக்கூறி, தொடர்ந்து வெடித்த போது தான் பெரும் விபத்து ஏற்பட்டு உள்ளது.போலீசாரின் அறிவுரையை ஏற்று நிறுத்தி இருந்தால், பெரும் விபத்து தவிர்க்கப்பட்டிருக்கும். இதில், ஒரு போலீஸ்காரரும் உயிரிழந்துள்ளார்.
இங்கு வெடி வழிபாடு கூடாது என, கலெக்டர் உத்தரவிட்ட பிறகும் நடந்துள்ளது. உளவுத்துறை மற்றும் போலீசார் கண்காணிக்கவில்லை. ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதிபதியை கொண்டு விசாரணை நடத்த வேண்டும்.
அச்சுதானந்தன், எதிர்க்கட்சி தலைவர்
மீட்பு பணியில் விமானங்கள்: தீ விபத்தில் பாதிக்கப்பட்டவர்களை மீட்க, சூலுார் விமானப் படைத்தளத்தில் இருந்து, மூன்று ஹெலிகாப்டர்களில் வீரர்கள் விரைந்தனர். விபத்தில், தீக்காயமடைந்தவர்களை மீட்டு, மருத்துவமனைகளில் சேர்க்க, சூலுார் விமானப் படைத்தளத்தில் இருந்து வீரர்கள், தேவையான மீட்பு உபகரணங்களுடன் நேற்று மதியம், மூன்று ஹெலிகாப்டர்களில் புறப்பட்டு சென்றனர்.தீக்காயமடைந்தவர்களை மீட்டு, திருவனந்தபுரம் மருத்துவமனைகளில் சேர்க்கும் பணிகளில் ஈடுபட்டனர்.
ரத்தம் கொடுக்க நீண்ட வரிசையில் கொடையாளர்கள்: கொல்லம் வெடிவிபத்தில் காயமடைந்த பலருக்கு, அதிக அளவில் ரத்தம் வெளியேறியது. இவர்களுக்கெல்லாம் ரத்தம் உடனடியாக தேவைப்பட்டதால் ரத்தம் கேட்டு மருத்துவமனை நிர்வாகம் 'மீடியா'க்களில் அறிவிப்பு வெளியிட்டது.

அடுத்த சில மணி நேரத்தில் ஆயிரக்கணக்கான ரத்த கொடையாளர்கள் அங்கு கூடினர். ஒரே நேரத்தில், 10 பேரிடம் மட்டுமே, அங்கு ரத்தம்

Advertisement

பெறும் வசதி இருந்தது. இதை தொடர்ந்து, நடமாடும் யூனிட்டும் வரவழைக்கப்பட்டது. என்றாலும், ரத்தம் கொடுக்க வந்தவர்களின், வரிசை நீண்டு கொண்டே இருந்தது. எனினும் பொறுமையாக, வரிசையில் நின்று ரத்தம் கொடுத்தனர். ஒரு கட்டத்தில் வந்தவர்களின் பெயர், மொபைல போன் எண்ணை பதிவு செய்து திருப்பி அனுப்பினர்.
தலைவர்கள் இரங்கல்:கேரள கோவிலில், வெடி விபத்தில், 105 பேர் பலியான சம்பவத்திற்கு, தி.மு.க., தலைவர் கருணாநிதி உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளார்.

கருணாநிதி: கேரள மாநிலம், பரவூர் கோவில் வருடாந்திர திருவிழாவை ஒட்டி, நடந்த வாணவேடிக்கையின் போது பெரிய விபத்து ஏற்பட்டுள்ளது. இதில் பலியான குடும்பத்தினர் அனைவருக்கும், என் ஆழ்ந்த இரங்கலையும், காயமடைந்து சிகிச்சைக்காக மருத்துவமனையில் உள்ளோருக்கும் என் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

ம.தி.மு.க., பொதுச் செயலர் வைகோ: உயிர் இழந்தவர்களுக்கு, என் கண்ணீர் அஞ்சலியை தெரிவித்துக் கொள்கிறேன். பலத்த காயமடைந்தோர் விரைவில் நலம் பெற, அரசும், மருத்துவமனைகளும், விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன்.

பா.ம.க., முதல்வர் வேட்பாளர் அன்புமணி:இவ்விபத்தில் காயம் அடைந்தவர் கள் மீட்கப்பட்டு, மருத்துவமனை களில் அனுமதிக்கப்பட்டுள்ள னர். அவர்களுக்கு தரமான மருத்துவம் அளிக்க, மருத்துவமனை நிர்வாகங்களுக்கு அரசு ஆணையிட வேண்டும். உயிரிழந்தோர் குடும்பங்களுக்கும், காயமடைந்தவர்களுக்கும், உரிய இழப்பீடு வழங்க, அரசுகள் முன்வர வேண்டும்.
பிரதமர் மோடி ராகுல் நேரில் பார்வை: வெடி விபத்து நடந்த இடத்தை, நேற்று மாலை, 4:00 மணியளவில் பிரதமர் நரேந்திர மோடி பார்வையிட்டார். அவருக்கு விபத்து நடந்த இடத்தை முதல்வர் உம்மன் சாண்டி, ரமேஷ் சென்னிதலா உள்ளிட்டோர் உடன் சென்று காண்பித்தனர். கோவில் முகப்பையும் பார்வையிட்டார். மாலை, 5:10 மணிக்கு, கொல்லம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறுபவர்களை சந்தித்து ஆறுதல் கூறினார்.
பின், கொல்லம் அரசு விருந்தினர் மாளிகை யில் முதல்வர், மாநில அமைச்சர்களுடன் ஆலோசனை மேற்கொண்டார். காயமுற்றவர் களுக்கு தீவிர சிகிச்சையளிக்க கேட்டுக் கொண்டார்.

காங்கிரஸ் கட்சி துணைத் தலைவர் ராகுல், மாலை, 6:00 மணிக்கு, புற்றிங்கல் தேவி கோவில் முன் சம்பவ இடத்தை பார்வையிட் டார். கொல்லம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறுவோரை சந்தித்து ஆறுதல் கூறினார். சம்பவம் குறித்து பரவூர் போலீசார், கோவில் கமிட்டி நிர்வாகிகள் மீதும் வெடிவழிபாடு நடத்தும் சுரேந்திரன் மீதும் வழக்குப் பதிவு செய்தனர்.
துரதிர்ஷ்டவசமானதுஜெயலலிதா இரங்கல்:'கேரள மாநில, கோவில் தீ விபத்து துரதிர்ஷ்ட வசமானது' என, முதல்வர் ஜெயலலிதா, இரங்கல் தெரிவித்துள்ளார். அவரது அறிக்கை: கொல்லம் கோவில், தீ விபத்து துரதிர்ஷ்டவசமானது. இதில், 100க்கும் மேற்பட் டோர் இறந்துள்ளனர். அவர் களின் குடும்பத்தினருக்கு, ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். மீட்புப் பணியில், கேரள அரசுக்கு அனைத்து வகையிலும், தமிழக அரசு உறுதுணையாக இருக்கும். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப் பட்டுள்ளது.

Advertisement

வாசகர் கருத்து (16)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
MOHAN. A - Tiruvannamalai,இந்தியா
11-ஏப்-201617:59:34 IST Report Abuse

MOHAN. Aதேர்தல் நடக்க இருக்கும் எல்லா மாநிலத்திலும் ஏதாவது அசம்பாவிதம் நடக்கிறது.. முதலில் கொல்கத்தா, அடுத்து கேரளா, இன்று அசாமில் 11 போலீசார் பலி..... தமிழ்நாடு, பாண்டிச்சேரி உஷார்.... உஷார்... உஷார்

Rate this:
K.Sugavanam - Salem,இந்தியா
11-ஏப்-201616:22:40 IST Report Abuse

K.Sugavanamநன்கு விசாரிக்கப் படவேண்டும்...

Rate this:
Vas San - Chennai,இந்தியா
11-ஏப்-201615:58:18 IST Report Abuse

Vas Sanமனித உயிர்கள் காக்கப்பட வேண்டும். பாதுகாப்பாக நடத்த தெரியவில்லை என்றால் எப்படி நடத்தினார்கள் ? அனுமதியில்லாமல் நடத்தவேண்டும் என்ற ஒரு மனப்போக்கா? அனுமதியில்லாமல் எப்படி இவ்வளவு வெடி மருந்து வாங்க முடிந்தது. நிர்வாகத்தில் பெரிய ஓட்டை இருக்கிறது. பொறுப்பற்ற தன்மை. மரணம் அடைந்தவர்களின் ஆன்மா இறைவனின் திருப்பாதங்களில் இளைப்பாரட்டும்.. ஆழ்ந்த அனுதாபங்கள்..

Rate this:
மேலும் 13 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X