பொது செய்தி

இந்தியா

பதிவு செய்த நாள் :
போர்!
திறந்தவெளியில் மலம் கழிப்பதற்கு எதிராக :
அசிங்கப்படுத்த களமிறங்கும் உ.பி., நிர்வாகம்

ஆக்ரா:திறந்தவெளியில் மலம் கழிப்பதற்கு எதிராக, பெரும் போரையே துவங்கியுள்ளன, உத்தர பிரதேச மாவட்டநிர்வாகங்கள். இங்கு, திறந்தவெளியில் மலம் கழிப்பவர்களுக்கு, சிறை தண்டனை, அபராதத்துடன், அவர்களுக்கு மாலை அணிவித்து, புகைப்படம் எடுத்து, 'வாட்ஸ் ஆப்' போன்ற சமூக வலைதளங்களில் வெளியிட்டு அசிங்கப்படுத்தவும் களமிறங்கியுள்ளன.

திறந்தவெளியில் மலம் கழிப்பதற்கு எதிராக போர்:அசிங்கப்படுத்த களமிறங்கும் உ.பி., நிர்வாகம்

'நாட்டின் மக்கள் தொகையில், 70 சதவீதம் பேர் கிராமங்களில் வாழ்கின்றனர். இவர்களில், 55 கோடி பேர், திறந்தவெளிகளிலேயே மலம் கழிக்கின்றனர்' என, ஆய்வில் தெரியவந்துள்ளது. கிராமப்புறங்களைச் சேர்ந்தவர்கள் தான் இப்படி என்று இல்லாமல், நகர்ப்புறங்களைச் சேர்ந்த, 13 சதவீதம் பேரும், திறந்த வெளிகளிலேயே, காலைக் கடன்களை முடிக்கின்றனர்.பல்வேறு சுகாதார சீர்கேடுகளுக்கு காரணமாக இருக்கும் இந்த செயலுக்கு, முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், மத்திய அரசு, பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
ஏப்., 15க்குள்...பிரதமர் மோடி, 2014 ஆகஸ்டில், தன் முதல் சுதந்திர தின உரையில், நாட்டில் திறந்தவெளியில் மலம் கழிப்பதை ஒழிக்க நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார். அத்துடன், நாடு முழுவதும், 10 கோடி கழிப்பறைகள் கட்டும் திட்டம் குறித்தும் அறிவித்தார்.

மத்திய அரசு, இப்படி பல நடவடிக்கைகளை எடுத்த போதும், வட மாநிலங்களில் இன்னும் இந்த சீர்கேடு தொடரத் தான் செய்கிறது. குறிப்பாக, மிகப்பெரிய மாநிலமான உத்தர பிரதேசத்தில், திறந்தவெளியில் மலம் கழிப்பது சர்வ சாதாரண நிகழ்வாகவே உள்ளது. இதனால், ஏப்., 15க்கு பின், மாநிலத் தில் திறந்தவெளியில் மலம் கழிக்கும் நடைமுறை இல்லை என்ற இலக்கை எட்ட தீவிரமாகநடவடிக்கைகளை எடுத்து வருகின்றன, உ.பி., மாவட்ட நிர்வாகங்கள்.
தர்மசங்கடம் வரும்:இதற்காக, திறந்தவெளியில் மலம் கழிப்பவர்களுக்கு தர்மசங்கடத்தை ஏற்படுத்தும் வகையில், அவர்களுக்கு மாலை அணிவித்து, அதை புகைப்படமாக எடுத்து, சமூக வலைதளங்களில் வெளியிடுவது; காலை மற்றும் மாலை நேரங்களில் திறந்தவெளி களில் அதிகாரிகளை ரோந்து பணிக்கு அனுப்புவது போன்ற நடவடிக்கைகளில் இறங்கியுள்ளன. இருப்பினும், இக்குற்றச்செயலில் தொடர்ந்து ஈடுபடுபவர்களை சிறையில் அடைக்கவும்; 250 முதல், 2,500 ரூபாய் வரை அபராதம் விதிக்கவும் மாவட்ட நிர்வாகங்கள் முடிவு செய்து உள்ளன.கர்நாடகாவில், திறந்தவெளியில் மலம் கழிப்பவர்களுக்கு, மூன்று மாதம் சிறை தண்டனை விதிக்க சட்டம் இயற்றப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.'வாட்ஸ் ஆப்'பில் மானம் கப்பலேறும்!: ஆக்ரா மாவட்டத்தில், திறந்தவெளியில் மலம் கழிப்பவர்களுக்கு மாலை அணிவித்து, அவர்களை தர்மசங்கடத்துக்கு உள்ளாக்கவும்;அடுத்தடுத்து இக்குற்றச்செயலில் ஈடுபடுவோருக்கு சிறை தண்டனையும், 250 முதல், 2,500 ரூபாய் வரை அபராதமும் விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது

மதுராவில், திறந்தவெளியில் மலம் கழிப்பவர்களுக்கு மாலை அணிவித்து, புகைப்படம் எடுத்து, அதை, 'வாட்ஸ் ஆப்' சமூக வலைதளத்தில் வெளியிட்டு, அவர்களை அசிங்கப்படுத்தவும் அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்

Advertisement

கான்பூரில், செம்புடன் திறந்தவெளிக்கு செல்பவர்களை மணியடித்து, அலற வைக்க அதிகாரிகள் திட்டமிட்டுஉள்ளனர் ஷாஜகான் பூரில், திறந்தவெளிக்கு செல்பவர்களைப் பார்த்ததும், விசில் அடித்து, அவர்களை அலறடிக்கச் செய்ய உள்ளனர்.
கழிப்பறை கட்டினால் ரூ.12,000 நிச்சயம்!: திறந்தவெளியில் காலைக் கடன்களை முடிப்பது, சுகாதார சீர்கேடுகளை ஏற்படுத்துவது ஒரு புறம் இருந்தாலும்,இன்னொரு பக்கம், இந்த பகுதிகளில், பெண்களுக்கு எதிராக, பாலியல் தாக்குதல்களும் நடக்கின்றன.

இதைத் தடுக்க, வீடுகளில் கழிப்பறைகள் கட்ட வேண்டும் என, தேசிய அளவில் பிரசாரம் செய்யப்படுகிறது. மணமகன் வீட்டில் கழிப்பறை இல்லாததால், புகுந்தவீட்டுக்குச் செல்ல, மணப்பெண்கள் மறுத்த சம்பவங்களும் நாட்டில் அரங்கேறியுள்ளன.
இதனால், உ.பி.,யில், கழிப்பறைகள் கட்டுவதை ஊக்குவிக்க, புதிய திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது, கழிப்பறைகள் கட்டி முடித்து, அதை அதிகாரிகளிடம் காட்டினால் போதும், மாநில அரசின் உதவித்தொகை, 12 ஆயிரம் ரூபாய் வழங்கப்படுகிறது.

Advertisement

வாசகர் கருத்து (7)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
madayan - Anaheim,யூ.எஸ்.ஏ
11-ஏப்-201605:52:57 IST Report Abuse

madayanமலம். அது மண்ணுக்கு நல்ல உரம்

Rate this:
Manian - Chennai,இந்தியா
11-ஏப்-201605:12:20 IST Report Abuse

Manianமுகத்தை மூடிக் கொண்டுதான் இதை செய்கிறார்கள். பல தடவை நான் நேரில் கண்டதுண்டுதமிழ் நாட்டிலு புடவையை பெரிய வட்டாமாக விரித்து உட்ககார்ந்து போவதை ஒரு நண்பர் எதேச்சையாக எடுத்த போட்டோவை காட்டினா். பெண்கள் படும் கஷ்டங்கள் அதிகம். ஏன், எப்படி, எங்கு, எதனால் இ்ப்படி நடக்கிறு என்பதை சமூகியல், மருருத்துவர்கள், செவிலியர்கள் போன்ற சிறந்த அறிஞர்கள்(ஜாதி-மதம்-இட ஒதுக்கீட்டில், லஞ்சம் மூலம் வேலை வாங்கியவர்கள் யாரும வேண்ணடாம்)களப்பணி மூலம் புள்ளி விவரம் சேகரித்து, சமார் 90% பேர் முதலில் பயன் அடையச் செய்ய வேண்டும்.தண்ணீ் பெரிய குவளை 50 காசு டோக்கன் மூலம்(தற்போது குடிக்க நீருக்கு சில ஊர்களில் இந்த முறை உள்ளதாக) சில நாள் முன் தினமலரி்ல் செய்தி வந்தது. காபி,டீ, சோஆ, இளநீர்,, பதனீர் விற்குமிடம் 1க்கு போக மோபில் டாய்லெட் வெள்ளி ஹைடிராக்சைடு பூசியது -10 வருஜங்களுக்கு நாறாதாம்.சட்டம் மற்ற பணியாத மாடுகளுக்கே ஒன்று 5 ரூபா போலீசுக்கு கொடுப்பாங்க, இல்லே 1000 பேரை ஜெயிலிலே ஒரேயடியா போட்டா அங்கே யாரு கழுவுவாங்க?. புள்ளி விவரம் இல்லாத எந்த சட்டமும் பயன்தராது. சரித்திரம் சொல்லும் உண்மை இது வெட்கம், மானம், மரியாதை விலை என்ன இப்போன்னு கேக்குற காலம்.

Rate this:
jagan - Chennai,இந்தியா
11-ஏப்-201604:50:10 IST Report Abuse

jaganதமிழ் நாட்டிலும் இதுக்கு குறைவில்லை.....அதான் சுடைலின் 'விடியல்' மீட்க கிளம்பிவிட்டாரே

Rate this:
மேலும் 4 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X