பொது செய்தி

இந்தியா

நடன பெண்களை தொட்டால் சிறை, அபராதம் நிச்சயம்

Updated : ஏப் 12, 2016 | Added : ஏப் 12, 2016 | கருத்துகள் (1)
Advertisement

புதுடில்லி:மஹாராஷ்டிராவில், முதல்வர் தேவேந்திர பட்னவிஸ் தலைமையிலான, பா.ஜ., - சிவசேனா கூட்டணி ஆட்சி நடக்கிறது. இங்கு, மும்பை உள்ளிட்ட நகரங்களில், மதுபான பார்களில் பெண்களின் நடன நிகழ்ச்சிகள் நடப்பது வழக்கம். இவர்கள், பார்வையாளர்களின் தொந்தரவுக்கு ஆளாவதாக புகார் எழுந்தது. இதையடுத்து, மாநில அமைச்சரவை, 'பார்' நடன பெண்கள் தொடர்பான சட்டத்திருத்தத்துக்கு, மார்ச் 29ம் தேதி, ஒப்புதல் அளித்தது. இந்த சட்டத்திருத்தம், சட்டசபையில், இன்று தாக்கல் செய்யப்பட உள்ளது.
இப்புதிய சட்டத்திருத்தம் நிறைவேறி, சட்டமாக அமலுக்கு வந்தால், நடனப் பெண்களை தொடுவது, பணத்தை வீசியெறிவது போன்ற குற்றங்களுக்கு, சிறை தண்டனையும், 50 ஆயிரம் ரூபாய் வரை அபராதமும் விதிக்கப்படலாம். சட்ட விரோதமாக, 'பார்' மற்றும் பெண்களின் நடன நிகழ்ச்சி நடத்தப்பட்டால், 'பார்' உரிமையாளருக்கு, 25 லட்சம் ரூபாய் வரை, அபராதம் விதிக்க சட்டத்தில் வகை செய்யப்பட்டு உள்ளது.
'வீடியோ' எடுக்கணும்!சட்டத்திருத்தத்தில் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்கள்:பள்ளி, கல்லுாரிகளுக்கு ஒரு கி.மீ., சுற்றளவு துாரத்தில், நடனப் பெண்களுடன் இயங்கும், 'பார்'களுக்கு அனுமதி கிடையாதுஅந்தரங்க பாகங்கள் வெளியே தெரியும் வகையில் ஆடக் கூடாதுஆபாச உடல் அசைவுகளுடன் நடனமாடக் கூடாது'பார்' நுழைவாயிலிலும், நடனம் நடக்கும் பகுதியிலும், கண்காணிப்பு கேமரா பொருத்த வேண்டும்'பார்' உரிமையாளர், நடன நிகழ்ச்சியை வீடியோ பதிவு செய்து, 30 நாட்களுக்கு வைத்திருக்க வேண்டும்நடன பெண்களை தவறான வகையில் நடத்தினால், 'பார்' உரிமையாளருக்கு, மூன்று ஆண்டு சிறை, 10 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்படலாம்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Pasupathi Subbian - trichi,இந்தியா
12-ஏப்-201614:25:14 IST Report Abuse
Pasupathi Subbian ஷரியத் சட்டம் நடைபெறும் அரபு நாட்டில் கூட நடன பெண்களின் மேல் பணத்தை கட்டு கட்டாக கொட்டுவதும், மடியில் உட்காரவைத்து ரசிப்பதும், அரைகுறை ஆடையில் அப்பெண்கள் முகத்தில் கீழ்பாதியை மட்டும் மூடிக்கொண்டு ஆடுவதும். வழக்கம். அந்த அருவருப்பை மகாராஷ்டிரா மக்கள் ரசிக்கின்றனர் போலும்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X