மலிவு விலை காது கேட்கும் கருவி இந்திய மாணவன் சாதனை

Added : ஏப் 13, 2016 | கருத்துகள் (13)
Share
Advertisement
ஹூஸ்டன்:அமெரிக்காவின் கென்டகி மாகாணத்தில் உள்ள லுாயிஸ்வில்லி நகரில் வசிக்கும் மாணவன், முகுந்த் வெங்கடகிருஷ்ணன். இந்தியாவின் பெங்களூரு தான், இவரது பூர்வீகம். இரண்டு ஆண்டுகளுக்கு முன், தாத்தா - பாட்டியை பார்ப்பதற்காக பெங்களூரு வந்தார். தாத்தாவுக்கு காது கேட்காத காரணத்தால், மருத்துவரிடம் அழைத்துச் சென்றுள்ளார்.அவரை பரிசோதித்த மருத்துவர், காது கேட்கும் கருவியை
இந்திய மாணவன் சாதனை

ஹூஸ்டன்:அமெரிக்காவின் கென்டகி மாகாணத்தில் உள்ள லுாயிஸ்வில்லி நகரில் வசிக்கும் மாணவன், முகுந்த் வெங்கடகிருஷ்ணன். இந்தியாவின் பெங்களூரு தான், இவரது பூர்வீகம். இரண்டு ஆண்டுகளுக்கு முன், தாத்தா - பாட்டியை பார்ப்பதற்காக பெங்களூரு வந்தார்.
தாத்தாவுக்கு காது கேட்காத காரணத்தால், மருத்துவரிடம் அழைத்துச் சென்றுள்ளார்.அவரை பரிசோதித்த மருத்துவர், காது கேட்கும் கருவியை பொருத்த வேண்டும் எனக் கூற, கடைக்கு சென்று விசாரித்த போது, அது, விலை அதிகமாகவும், பொருத்துவது சிக்கலானதாகவும் இருந்துள்ளது. ஊர் திரும்பிய அவர், இதற்கு மாற்று கண்டுபிடிக்க வேண்டும் என்ற உந்துதலுடன், தீவிர ஆராய்ச்சியில் இறங்கினார். விளைவு, 'கம்ப்யூட்டர் ப்ராசசர்' போன்ற ஒரு உபகரணத்தை கண்டுபிடித்தார். இதன் விலை, வெறும், 4,000 ரூபாய் தான். அதேசமயம், சந்தையில் விற்பனையாகும் கருவிகளின் விலையோ, 66,500 ரூபாய்.இந்த கருவியை, கென்டகி மாகாண அறிவியல் மற்றும் பொறியியல் கண்காட்சியில் காட்சிக்கு வைத்தார். அக்கருவி முதல் பரிசை தட்டிச் சென்றது. இதையடுத்து, மாணவனின் கண்டுபிடிப்பை உற்பத்தி செய்து, வினியோகிக்க, பல நிறுவனங்கள் முன்வந்துள்ளன.

Advertisement




வாசகர் கருத்து (13)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
VSK - CARY,யூ.எஸ்.ஏ
13-ஏப்-201617:49:32 IST Report Abuse
VSK 'மேக் இன் இண்டியா ' எனும் திட்டம் உண்மையெனின் மோடி இந்த கண்டுபிடிப்பை உடனே அங்கீகரித்து அந்தச் சிறுவனை பாராட்ட வேண்டும் . இதை இந்தியாவில் தயாரிக்கவும் முன்வர வேண்டும் என வேண்டுகோள் விடுக்கிறேன் .
Rate this:
Cancel
Ramaswamy Sundaram - Mysore,இந்தியா
13-ஏப்-201613:23:51 IST Report Abuse
Ramaswamy Sundaram இப்படித்தான் அதிசய மனிதர் ஜி டி நாயிடு கோவையில் பல கருவிகளை கண்டுபிடித்தார்....ஆனாலும் அரசாங்கத்தின் பிடிவாத மன போக்கால் அத்தனையும் வீண் ஆயிற்று.....தம்பி வேங்கட கிருஷ்ணனுக்கு வாழ்த்துக்கள்.... தப்பி தவறி இந்தியா பக்கம் வந்துடாதீங்க.....இங்க இருக்கிற அரசியல் வாதிகள் உங்களை உருப்பட விடமாட்டாங்க. உஷார் உஷார்...
Rate this:
Cancel
ganapati sb - coimbatore,இந்தியா
13-ஏப்-201612:56:17 IST Report Abuse
ganapati sb தாத்தா பிரச்சனைக்கு தீர்வளித்த சிறுவனின் கண்டுபிடிப்புக்கு வாழ்த்துக்கள்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X