பொது செய்தி

தமிழ்நாடு

மண்ணுரிமை மீட்பு இயக்க நிர்வாகிகள் ஆலோசனை

Added : டிச 21, 2010
Share
Advertisement
பெரம்பலூர்: தமிழ்நாடு மண்ணுரிமை மீட்பு இயக்க நிர்வாகிகள் ஆலோசனைக்கூட்டம் பெரம்பலூர் நந்தனார் அறக்கட்டளை அலுவலக கூட்ட அரங்கில் நடந்தது. கூட்டத்துக்கு ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ்., அதிகாரி கருப்பன் தலைமை வகித்தார். தடா பெரியசாமி பேசினார். கூட்டத்தில், தமிழகத்தில் உள்ள பஞ்சமி நிலங்களை மீட்டு தாழ்த்தப்பட்ட மக்களுக்கு வழங்க வேண்டும். பெரம்பலூர் மாவட்டத்தில் ஆதிதிராவிடர்

பெரம்பலூர்: தமிழ்நாடு மண்ணுரிமை மீட்பு இயக்க நிர்வாகிகள் ஆலோசனைக்கூட்டம் பெரம்பலூர் நந்தனார் அறக்கட்டளை அலுவலக கூட்ட அரங்கில் நடந்தது. கூட்டத்துக்கு ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ்., அதிகாரி கருப்பன் தலைமை வகித்தார். தடா பெரியசாமி பேசினார். கூட்டத்தில், தமிழகத்தில் உள்ள பஞ்சமி நிலங்களை மீட்டு தாழ்த்தப்பட்ட மக்களுக்கு வழங்க வேண்டும். பெரம்பலூர் மாவட்டத்தில் ஆதிதிராவிடர் நிபந்தனைக்குட்பட்ட நிலம் 1,263 ஏக்கர் 948 நபர்களின் பெயரில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதை ரத்து செய்ய வேண்டும். தாழ்த்தப்பட்டவர்களின் பெயர்களில் இருந்தும் மற்ற சமூகத்தினரின் பயன்பாட்டில் உள்ள நிலங்களை மீட்டு உரியவர்களிடம் ஒப்படைப்பதோடு மற்ற சமூகத்தினர் மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தின்கீழ் வழக்கு தொடர வேண்டும். பெரம்பலூர் மாவட்டத்தில் அமைய உள்ள எம்.ஆர்.எப்., மற்றும் சிறப்பு பொருளாதார மண்டலம் ஆகியவற்றுக்கு கையகப்படுத்தப்பட்ட நிலங்களில் பஞ்சமி நிலங்கள் கணிசமாக உள்ளது. எனவே, இவற்றை தாழ்த்தப்பட்ட மக்களுக்கு மீள் ஒப்படை செய்ய வேண்டும். பஞ்சமி நிலங்களை மற்ற சமூகத்தினர் விற்பனை பத்திரம் போன்ற ஆவணங்களை பதிவு செய்ய உடனடியாக தடை விதித்து கலெக்டர் ஆணை பிறப்பிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.


Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X