பாகிஸ்தானை சீர்குலைக்க இந்தியா முயற்சி: ராணுவ தளபதி புலம்பல்

Updated : ஏப் 13, 2016 | Added : ஏப் 13, 2016 | கருத்துகள் (28) | |
Advertisement
குவாடர்(பாகிஸ்தான்): பாகிஸ்தானின் குவாடர் துறைமுகத்திலிருந்து சீனாவின் மேற்கு பகுதிக்கு பொருட்களை கொண்டு செல்லப்படும் வகையில் 46 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பிலான திட்டத்தை இந்தியா சீர்குலைக்க முயற்சிப்பதாக பாகிஸ்தான் ராணுவ தளபதி ரஹீல் ஷெரீப் கூறியுள்ளார்.இது தொடர்பாக சீனா பாகிஸ்தான் பொருளாதார வளர்ச்சி தொடர்பான கூட்டத்தி்ல் அவர் பேசியதாவது: பாகிஸ்தான்-
பாகிஸ்தான், சீர்குலைக்க,  இந்தியா முயற்சி,  ராணுவ தளபதி புலம்பல்

குவாடர்(பாகிஸ்தான்): பாகிஸ்தானின் குவாடர் துறைமுகத்திலிருந்து சீனாவின் மேற்கு பகுதிக்கு பொருட்களை கொண்டு செல்லப்படும் வகையில் 46 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பிலான திட்டத்தை இந்தியா சீர்குலைக்க முயற்சிப்பதாக பாகிஸ்தான் ராணுவ தளபதி ரஹீல் ஷெரீப் கூறியுள்ளார்.
இது தொடர்பாக சீனா பாகிஸ்தான் பொருளாதார வளர்ச்சி தொடர்பான கூட்டத்தி்ல் அவர் பேசியதாவது: பாகிஸ்தான்- சீனா இடையிலான பொருளாதார கூட்டணியின் முக்கியத்துவம், இந்த பிராந்தியத்தில் பலரின் புருவங்களை உயர்த்தியுள்ளது. இந்த நேரத்தில் இந்தியா பற்றி கூற வேண்டியுள்ளது. நமது வளர்ச்சிக்கான முயற்சிக்கு எதிராக இந்தியா வெளிப்படையாக சவால்விட்டுள்ளது. இந்தியாவின் உளவு அமைப்பான 'ரா' பாகிஸ்தானை முற்றிலும் சீர்குலைக்க முயற்சி செய்கிறது.

பாகிஸ்தானில் எந்தவொரு பகுதியிலும் கொந்தளிப்பு மற்றும் எவ்வித தடையையும் ஏற்படுத்த விட மாட்டோம். எனவே நாம் அனைவரும் முரண்பாட்டை விட்டுவிட்டு, ஒற்றுமையாக செயல்படுவது குறித்து கவனம் செலுத்த வேண்டும் எனக்கூறினார்.
இதுபற்றி இதுவரை இந்திய எந்தவித கருத்தும் இதுவரை தெரிவிக்கவில்லை. கடந்த மாதம் பாலுசிஸ்தான் பகுதியில் ரா உளவுப்பிரிவு அதிகாரியை கைது செய்துள்ளதாக பாகிஸ்தான் கூறியது. ஆனால் இதனை மறுத்துள்ள இந்தியா அவர் இந்திய கடற்படையின் முன்னாள் அதிகாரி எனக்கூறியுள்ளது. பலுசிஸ்தான் பகுதியில் பிரிவினையை இந்தியா ஆதரித்து வருவதாக பாகிஸ்தான் கருதுகிறது. கராச்சியில் நடந்த வன்முறைக்கு இந்தியா தான் காரணம் என பாகிஸ்தான் குற்றம்சாட்டி வருகிறது. இதனை இந்தியா மறுத்துள்ளது.
ஆப்கனில் தலிபான்களை ஆதரித்துவரும் பாகிஸ்தான், காஷ்மீர் மற்றும் இந்தியாவில் பல்வேறு பகுதிகளில் நடக்கும் பயங்கரவாத தாக்குதலின் பின்னணியில் பாகிஸ்தான் செயல்படுவதாகவும் இந்தியா கூறி வருகிறது. ஆனால், தாக்குதலுக்கும் தங்களுக்கும் எந்தவித தொடர்பும் இல்லை எனவும், காஷ்மீர் மக்களுக்கும் தூதரக ரீதியிலான ஆதரவு மட்டும் அளிப்பதாக பாகிஸ்தான் கூறிவருகிறது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (28)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Lion Drsekar - Chennai ,இந்தியா
14-ஏப்-201620:14:46 IST Report Abuse
Lion Drsekar பாக்கிஸ்தான் தளபதி அவர்களுக்கு இங்கு எங்கள் தலைவர்கள் தங்கள் தொண்டர்களை ஏவி விட்டு ஒருவரை ஒருவர் அடித்துக் கொள்ளும் அளவிற்கு அதற்கே நேரம் இல்லாத போது உங்கள் நாட்டிற்கு அனுப்பி என்பது நம்பும்படியாக இல்லை, எங்களுக்கு நாட்டைப்பற்றியோ உங்கள் நாற்றப்பற்றியோ கவலையே இல்லை, நாற்காலி மட்டுமே குறி, இதை புரிந்து கொண்டால் சரி, வந்தே மாதரம்
Rate this:
Cancel
Endrum Indian - Kolkata,இந்தியா
14-ஏப்-201619:10:40 IST Report Abuse
Endrum Indian அப்பா எவ்வளுவு கஷ்டம்டா இந்த பதவியில் இருக்க? அழுகின தேங்காய் இந்த பாகிஸ்தான் ஆட்சி அதைக்கூட ஒருவர் இன்னும் நல்ல தேங்காய் இது இதை அழுக வைக்க இந்தியா முயற்சி????? முடியுமா? வேடிக்கை என்னவென்றால் இதுவரை அமெரிக்காவிடம் ரூ.86,000 கோடி வாங்கியிருக்கின்றதாம் பாகிஸ்தான் தீவிரவாதிகளை ஒடுக்க?
Rate this:
Cancel
Rajesh - Bangalore,இந்தியா
14-ஏப்-201613:46:06 IST Report Abuse
Rajesh தமிழ் நிலா நீ முதலில் உண்மையான பெயரில் கருத்து எழுது . சகிப்பு தன்மைவேண்டும் யாருக்கு ??
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X