அரசியல் செய்தி

தமிழ்நாடு

பதிவு செய்த நாள் :
தி.மு.க., வேட்பாளர், மாற்றம், மோதல்

தி.மு.க., வேட்பாளர்கள் அறிவிப்புக்கு, பல ஊர்களில் எதிர்ப்பும், மோதலும் வெடித்துள்ளது. இதனால், அ.தி.மு.க.,வைப் போல, தி.மு.க.,விலும், வேட்பாளர் மாற்றம் வருமா என்ற ஆவலும்,
எதிர்பார்ப்பும், அக்கட்சியினர் மத்தியில் எழுந்துள்ளது.

தி.மு.க., வேட்பாளர், மாற்றம், மோதல்

தி.மு.க., வேட்பாளர்கள் பட்டியல், நேற்று முன்தினம் மாலை வெளியானது. பல தொகுதிகளில், வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டவர்களுக்கு, கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது. உருவபொம்மையை எரித்து, தலைமையின் முடிவுக்கு எதிராக, சில தொகுதிகளில் தி.மு.க.,வினர் கொந்தளித்துள்ளனர். உச்சகட்டமாக, ஆற்காடு வேட்பாளரை அடித்து உதைத்துள்ளனர்.எனவே, பரவலாக எதிர்ப்பும், மோதலும் வெடித்துள்ளதால், அ.தி.மு.க.,வைப் போல, தி.மு.க.,விலும் வேட்பாளர் மாற்றம் வரும் என, கூறப்படுகிறது.

எதிர்ப்பு விவரம்
* புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி தொகுதியில், அறந்தாங்கி ஒன்றிய செயலர் மெய்யநாதன் போட்டியிட வாய்ப்பு கிடைக்கவில்லை. அதனால், வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள, டாக்டர் சதீஷுக்கு எதிராக, துண்டு பிரசுங்களை வழங்கி, எதிர்ப்பு தெரிவித்தனர்
* பொன்னேரி தொகுதியில், டாக்டர் பரிமளத்துக்கு வாய்ப்பு வழங்கப்பட்டதை எதிர்த்து, முன்னாள் அமைச்சர் சுந்தரத்தின் ஆதரவாளர்கள், தலைமைக்கு புகார் அனுப்பி வருகின்றனர்
* துாத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் தொகுதிக்கு வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருக்கும் பீமராஜ், ஏற்கனவே கட்சியில் இருந்து நீக்கப்பட்டவர். இவர் மீது ஏகப்பட்ட புகார்களை வாசிக்கும் கட்சியினர், அவரை, மாற்றும் வரை ஓயமாட்டோம் என, கட்சித் தலைவர் கருணாநிதியை சந்தித்து முறையிட்டுள்ளனர் இந்தத் தொகுதியில் ரெட்டியார் இனத்தவர் அதிகம் என்பதால், அந்த இனத்தைச் சாராதவர்களுக்கு, 'சீட்' கொடுப்பதால் தான், தி.மு.க., தொடர் தோல்வியை தழுவி வருவதாகவும், அவர்கள் கொடி பிடிக்கின்றனர்
* மதுரை, திருப்பரங்குன்றம் தொகுதி, முன்னாள் சபாநாயகர் சேடப்பட்டி முத்தையாவின் மகன் மணிமாறனுக்கு வழங்கப்பட்டுள்ளதால், அத்தொகுதியை எதிர்பார்த்து காத்திருந்த டாக்டர் சரவணனின் ஆதரவாளர்கள் கடும் அதிருப்தி அடைந்து, தலைமையிடம் முறையிட்டுள்ளனர்
* தேனி மாவட்டம், கம்பத்தில், முன்னாள் டில்லி பிரதிநிதியான செல்வேந்திரனுக்கு, 'சீட்' கொடுக்காமல், ராமகிருஷ்ணனுக்கு வழங்கப்பட்டுள்ளதால், அம்மாவட்டத்திலும், தி.மு.க.,வினர் மத்தியில் கடும் எதிர்ப்பு நிலவுகிறது
* கடலுாரில், முன்னாள் அமைச்சர்

எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் எதிர் கோஷ்டியை சேர்ந்த துரை கி.சரவணனுக்கு, புவனகிரி வழங்கப்பட்டுள்ளது. இதற்கு, பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்
* நாகப்பட்டினம் தெற்கு மாவட்ட செயலர் ஏ.கே.எஸ்.விஜயனின் எதிர் கோஷ்டியான முன்னாள் அமைச்சர் மதிவாணனுக்கு, கீழ்வேளூர் தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. தனக்கு சீட் கிடைக்காமல், மதிவாணனுக்கு கிடைத்ததில், அதிருப்தி அடைந்திருக்கும் விஜயனும், அவரது ஆதரவாளர்களும், எதிர்ப்பை பதிவு செய்து வருகின்றனர்
* சேலம் மேற்கு மாவட்ட செயலர் சிவலிங்கம், கோவை புறநகர் வடக்கு மாவட்ட செயலர் சி.ஆர்.ராமச்சந்திரன், கோவை மாநகர வடக்கு மாவட்ட செயலர் வீரகோபால், கோவை மாநகர் தெற்கு மாவட்டசெயலர் நாச்சிமுத்து, ஈரோடு வடக்கு மாவட்ட செயலர் நல்லசிவம் ஆகியோருக்கு சீட் வழங்கவில்லை.மாறாக, அவர்களின் எதிர்கோஷ்டியினருக்கு சீட் வழங்கப்பட்டுள்ளதால், அங்கெல்லாம் கட்சியினர் மத்தியில் கொந்தளிப்பான சூழல் ஏற்பட்டு உள்ளது
* கிருஷ்ணகிரி மாவட்டத்தில், முன்னாள் எம்.பி., சுகவனம் எதிர்கோஷ்டியை சேர்ந்த செங்குட்டுவனுக்கு, கிருஷ்ணகிரி தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. இதனால், சுகவனம் கடுமையாக எதிர்க்கிறார். இதற்கிடையில், தமிழகம் முழுவதும் கிளம்பி உள்ள எதிர்ப்புகளை சமாளிக்க, வேட்பாளர்களை மாற்றலாமா அல்லது எதிர்ப்பு கோஷ்டியினரை சமாதானப்படுத்தலாமா என, கட்சித் தலைமை ஆலோசித்து வருகிறது.

'மாஜி' பெண் மந்திரிதிடீர் போர்க்கொடி: தி.மு.க., முன்னாள் அமைச்சர் தமிழரசி, மானாமதுரை தனி தொகுதியில் போட்டியிட ஆர்வமாக இருந்தார். அதனால், தொகுதி நிர்வாகிகளின் வீட்டு விசேஷங்களில், தவறாமல் கலந்து கொண்டார்.

ஓராண்டாக தொகுதி முழுவதும் நிர்வாகிகளை சந்தித்து, ஆதரவு திரட்டி வந்தார்.ஆனால், அவருக்கு பதிலாக, முன்னாள் அமைச்சர் சமயநல்லுார் செல்வராஜ் மகள் சித்ரா செல்விக்கு, 'சீட்' கிடைத்துள்ளது. இதனால் அதிருப்தி அடைந்த அவர், தன் ஆதரவாளர்களுடன், தலைமைக்கு எதிராக கொடி தூக்க, சென்னையில் முகாமிட்டுள்ளார்.

'வாய்ப்பு வரும்; காத்திருங்கள்!' :தி.மு.க., தலைவர் கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கை:தி.மு.க., போட்டியிடும், 173 இடங்களில், 97 பழைய முகங்களுக்கும், 76 புதுமுகங்களுக்கும், 19 பெண்களுக்கும் வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.

ஒரு தொகுதியில், ஒருவரை தான் தேர்ந்தெடுக்க முடியும். ஒரு தொகுதிக்கு, பல பேர் விருப்ப மனு தாக்கல் செய்த நிலையில், அவர்களில், பலரும் வெற்றி வேட்பாளர்கள் என்று கருதினாலும், அதில் ஒருவரை தான் எங்களால் அறிவிக்க முடிந்தது; அறிவிக்கப் படாதவர்கள் யாரும் வருத்தப்படக் கூடாது.

எல்லாருக்கும் நல் வாய்ப்பு வரும்; தன்னுடைய சுற்று வரும் வரை காத்திருக்கக் கற்றோருக்கு தான்காரியம் கை கூடும். வாய்ப்பு கிடைத் தோரும், அனைவரையும் அன்போடு அரவணைத்து, கட்சியின் வெற்றிக்காக, முழு

Advertisement

மூச்சுடன் பாடுபட வேண்டும்.

மாறாக, நாங்கள் மோதியே தீருவோம் என்ற ரீதியில் நிகழ்வுகள் நடக்குமானால், அது மோதுவோருக்கும், மோதுவோரின் சொந்த வீடான,இந்த இயக்கத்திற்கும் தீங்காக முடியும். அது வேட்பாளர்களையும் பாதித்து,தமிழகத்தின் எதிர்காலத்தையே பாதித்து விடும். ஒற்றுமை நீங்கிடில் அனைவர்க்கும் தாழ்வு என்பதை நினைவிலிருந்து சிறிதும் அகன்று விடாமல், நிலைநிறுத்திக் கொள்ள வேண்டும்.இவ்வாறு அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

வேலுார்:வேலுார் மாவட்டம், அணைக்கட்டு தொகுதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள,
ஏ.பி.நந்தகுமாரை மாற்ற வேண்டும் என, ஒன்றிய செயலர் பாபு தரப்பினர், 1,000 பேர், நேற்று முன்தினம் இரவு, 7:00 மணியில் இருந்து, 10:00 மணி வரை, மத்திய மாவட்ட செயலர் அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

நேற்று காலை, 11:00 மணிக்கு, அம்பேத்கர் பிறந்த நாள் மற்றும் வேட்பாளர் அறிமுக கூட்டம் நடத்துவதற்காக, மாவட்ட செயலர் அலுவலகத்துக்கு நந்தகுமார் வந்தார்.

அப்போது அங்கு வந்த, பாபுவின் ஆதரவாளர்கள், நந்தகுமாரை கடுமையாக தாக்கினர். அடித்து, உதைத்து, அலுவலகத்துக்கு இழுத்து வந்தனர். அதில், அவரது சட்டை, பேன்ட் கிழிந்தது. அவரை அறைக்குள் தள்ளி பூட்டினர். மாவட்ட அவைத் தலைவரும், முன்னாள் எம்.பி.,யுமான முகமது சகி, பாபு ஆதரவாளர்களுடன் பேச்சு நடத்தி அமைதிப்படுத்தினார்.

பாளையங்கோட்டை:ஏற்கனவே மூன்று முறை போட்டியிட்டு வெற்றி பெற்றதோடு, நான்காவது முறையும் அவருக்கே வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதால், முன்னாள் அமைச்சர் மைதீன்கானுக்கு, பாளையங்கோட்டை தொகுதியில், கட்சியினர் கடும் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். மைதீன்கானின் உருவபொம்மையை எரித்து, எதிர்ப்பு காட்டி உள்ளனர்.

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி தொகுதியை, கட்சியின் செய்தி தொடர்பாளர் கே.எஸ்.ராதாகிருஷ்ணன் எதிர்பார்த்தார். ஆனால், அவருக்கு சீட் வழங்கப்படாமல், சுப்பிரமணியனுக்கு வழங்கப்பட்டதால், ராதாகிருஷ்ணன் அதிருப்தி அடைந்துள்ளார்.

மதுரை:மதுரை மாவட்டத்தில், முன்னாள் மத்திய அமைச்சர் அழகிரியின் கடும் எதிர்ப் பையும் மீறி, முன்னாள் சபாநாயகர் பழனிவேல் ராஜனின் மகன் தியாகராஜனுக்கு, மதுரை மத்திய தொகுதிஒதுக்கப்பட்டுள்ளது. இது, அழகிரி ஆதரவாளர்களை கொந்தளிக்க வைத்துள்ளது.

சென்னை:சென்னை, வில்லிவாக்கம் தொகுதிக்கு வேட்பாளராக அறிவிக்கப் பட்டிருக் கும் முன்னாள் எம்.எல்.ஏ., ரங்கநாதன் மீது ஏகப்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன; அதை பட்டியல் போடும் தி.மு.க.,வினர், 'இப்படிப்பட்டவருக்கா சீட்' என, எதிர்ப்புக் குரல் எழுப்புகின்றனர்.

- நமது சிறப்பு நிருபர் -


Advertisement

வாசகர் கருத்து (150)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
MAVEERAN - chidambaram,இந்தியா
15-ஏப்-201621:50:01 IST Report Abuse

MAVEERANadmk 1996 எதிர்ப்பு அலையில் 27சதவீதம் ஒட்டு வாங்கியது . 2004 எதிர்ப்பு அலையில் 34 சதவீதம் ஓட்டு வாங்கியது. தற்போது அந்த அளவு எதிர்ப்பு இல்லை . ஆகவே 40 சதவீதம் ஓட்டு நிச்சயம் .

Rate this:
Rama Subbu - thiruvarur,இந்தியா
15-ஏப்-201619:41:45 IST Report Abuse

Rama Subbuகூட்டணி கட்சிக்கு கொடுத்த உடுமலை பேட்டையில் போட்டியிட ஆளே இல்லையாம் ...சீட்டும் வேணாம் ஒன்னும் வேணான்னு ஜவாகிருல்லா ஓடிட்டார் ...வேற வழி இல்லாம மத 4 இடங்களில் மாட்டி கொண்டார் ....

Rate this:
jagan - Chennai,இந்தியா
15-ஏப்-201619:14:51 IST Report Abuse

jaganஅண்ணன் அஞ்சா நோஞ்சானுக்கு ராஜ்யசபா எனும் லாலிபாப் வைத்த, தம்பிக்கு அண்ணன் சரியான ஆப்பு வைப்பார்.....

Rate this:
மேலும் 147 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X