அரசியல் செய்தி

தமிழ்நாடு

பதிவு செய்த நாள் :
ஆதரவாளர்கள் 'அவுட்' -
அழகிரிக்கு ராஜ்யசபா 'சீட்'

ஆதரவாளர்களுக்கு, 'சீட்' வழங்கப்படாததால் அதிருப்தி அடைந்த, முன்னாள் மத்திய அமைச்சர் அழகிரி, சென்னையில் நேற்று, தி.மு.க., தலைவர் கருணாநிதியை சந்தித்தார்.

ஆதரவாளர்கள் 'அவுட்' - அழகிரிக்கு ராஜ்யசபா 'சீட்'

இதுகுறித்து, தி.மு.க., வட்டாரங்கள் கூறியதாவது: கருணாநிதியை, மார்ச், 24ல், அழகிரி சந்தித்துப் பேசினார்.

அப்போது, கூட்டணி விவகாரம், கட்சி நிலவரம் குறித்தும், கருணாநிதியின் சுற்றுப் பயணம் குறித்தும், ஆலோசனை நடத்தினார். அதைத் தொடர்ந்து, அவ்வப்போது கருணாநிதியும், அழகிரியும் தொலைபேசியில் பேசி வருகின்றனர்.

கடந்த, 8ம் தேதி, சென்னையில் நட்சத்திர ஓட்டல் ஒன்றில் நடந்த, தமிழரசு மணி விழாவில் அழகிரி பங்கேற்றார். ஆனால்,

அப்போது, கருணாநிதியை அவரால் சந்திக்க முடியவில்லை.

இந்நிலையில், நேற்று முன்தினம், வேட்பாளர்கள் பட்டியல் வெளியானதும், அந்த பட்டியலில் அழகிரி ஆதரவாளர்கள் யாரும் இடம் பெறவில்லை.

இதனால், அழகிரி எந்தஅதிருப்தியும் அடையக் கூடாது என்பதற்காக, அவருக்கு ராஜ்ய சபா எம்.பி., பதவி கொடுக்கப்படும் என, தெரிவிக்கப்பட்டது. அதற்கு அழகிரி, 'அதுக்கு, 34 எம்.எல்.ஏ.,க்கள் ஜெயிச்சு வரணுமே' என, கிண்டலாக கூறிய அழகிரி, 'ஜூன் முதல் நம்ம ஆட்சி தான்' என, தன் பாணியில், 'கமென்ட்' அடித்துள்ளார்.

இப்பின்னணியில், நேற்று காலையில் கருணா நிதியை சந்தித்துள்ளார். தன் ஆதரவாளர்கள் ஒருவர் கூட இடம் பெறாதது வருத்தம் அளிப்பதா கவும், வேட்பாளர்கள் பட்டியல் தனக்கு திருப்தி அளிக்க வில்லை என்றும், மனக்குமுறலை பதிவு செய்துள்ளார்.

அதற்கு பதிலளித்த கருணாநிதி, 'வேட்பாளர்கள் அனைவரும் தி.மு.க.,வினர் என்பதால், அவர்களை வெற்றி பெற வைக்க வேண்டும்.தென் மாவட்டங் களில் வெற்றி பாதிக்கக் கூடாது' என, கூறியுள்ளார்.

வெளியே வந்த அழகிரி, நிருபர்களிடம், 'தன் தாயார் தயாளுவை சந்திக்க வந்ததாகவும்,

Advertisement

அரசியல் பற்றி தான் எந்த கருத்தும் கூற விரும்பவில்லை' என, கூறிவிட்டு சென்று விட்டார்.இவ்வாறு கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

'சொல்வதற்கு ஒன்றுமில்லை!:
தி.மு.க., பொருளாளர் ஸ்டாலின் கூறுகையில், ''தன் தந்தையை சந்திக்க அழகிரி வந்துள்ளதை பற்றி சொல்வதற்கு ஒன்றுமில்லை:

தேவையற்ற கேள்விகளுக்கு நான் பதில் சொல்ல விரும்ப வில்லை. தேர்தல் பிரசார முன்னேற்பாடுகளில், நாங்கள் கவனம் செலுத்தி வருகிறோம்,'' என்றார்.

- நமது நிருபர் -

Advertisement

வாசகர் கருத்து (75)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
mindum vasantham - madurai,இந்தியா
16-ஏப்-201601:11:27 IST Report Abuse

mindum vasanthamகேள்வியே கேட்காத, பேச்சை பதிவு செய்யாத ஒரே மந்திரி அழகிரி தான். போன லோக்சபாவில் ( இது உண்மை தான் சோதனை செய்து கொள்ளுங்கள் ), ராஜ்ய சபாவில் அனுப்பிவிட்டால் அங்கே திரு திரு வென்று முழித்து கொண்டிருப்பார் அது தான் பிளான் ) இங்கே இருந்தால் ரௌடிசம் , மிரட்டல் என்று பிரச்சனை தான் கொடுப்பார்

Rate this:
Sundeli Siththar - North Carolina,யூ.எஸ்.ஏ
15-ஏப்-201621:07:22 IST Report Abuse

Sundeli Siththarதலைவருக்கு தெரிந்துவிட்டது... ஸ்டாலின் வெற்றியைத் தேடித் தரமாட்டார் என்று.. அதனால்தான் அழகிரியை அரவனைத்துக்கொண்டுவிட்டார்...

Rate this:
karunchilai - vallam,இந்தியா
16-ஏப்-201614:47:04 IST Report Abuse

karunchilaiAakave thiruvaarooril thirumangalam ...

Rate this:
vijayaraja - manama,பஹ்ரைன்
15-ஏப்-201620:31:43 IST Report Abuse

vijayarajaஇது ஒரு குடும்பம் இதிலென்ன பெற்றோர் சும்மா நாடகம் நடக்குது ஸ்டாலினை பயமுறுத்த கருணாவுக்கு அழகிரி ஒரு பூச்சாண்டி

Rate this:
மேலும் 71 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X