'உடைந்து' வரும் மண்பானை தொழில்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

'உடைந்து' வரும் மண்பானை தொழில்

Added : ஏப் 15, 2016 | கருத்துகள் (4)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
 'உடைந்து' வரும் மண்பானை தொழில்

பேரையூர்,:பேரையூர் பகுதிகளில் மண்பானை தொழிலில் பின்னடைவு ஏற்பட்டதால், தொழிலாளிகள் மாற்றுத்தொழிலுக்கு செல்வது தொடர்கிறது.

பேரையூர் அருகே சிலைமலைப்பட்டியில் சில ஆண்டுகளுக்கு முன்பு வரை 100 குடும்பத்தினர் மண்பானை தொழில் செய்து வந்தனர். கோடை வெயிலுக்கு மண்பானை விற்பனை 'சூடுபிடித்தாலும்' இத்தொழில் நாளுக்கு நாள் நலிவடைந்து வருகிறது.வைரவன்: மண்பாண்டம் தொழிலில் தற்போது 10 பேர்மட்டுமே ஈடுபட்டுள்ளனர். பிறர் மாற்றுத்தொழிலுக்கு சென்றுவிட்டனர்.

இதற்கு காரணம், நகர்ப்புறத்தில் மண்பாண்டங்களின் பயன்பாடு குறைந்துவிட்டது. மேலும், மண்பாண்டம் செய்ய பயன்படும் களிமண்ணுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுஉள்ளது. அதேபோல், மண்ணைசூடுபடுத்துவதற்கான விறகு ஒருடன் ரூ.2500க்கும் விற்கப்படுகிறது. இதுபோன்ற காரணங்களால் தொழில் நலிவடைந்து வருகிறது, என்றார்.

Advertisement


வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Vijayan Singapore - Singapore,சிங்கப்பூர்
15-ஏப்-201613:54:32 IST Report Abuse
Vijayan Singapore இப்போது தெரியாது இதன் மதிப்பு, கான்செர், வயிறு வலி வந்து படுக்கும்போது மண்பாண்டங்கள் எவ்வளவு சிறந்தவை உடல் நலனுக்கு என்று புரியும்
Rate this:
Share this comment
Cancel
balakrishnan - coimbatore,இந்தியா
15-ஏப்-201613:07:45 IST Report Abuse
balakrishnan நமது பாரம்பரியமிக்க இந்த தொழில் அழிவில் விளிம்பில் உள்ளது, ஆனால் எதிர்காலத்தில் இதற்க்கு நிறைய தேவைப்பாடு நிச்சயம் இருக்கும், இப்போதே ஏராளமான மக்கள் வீட்டு தோட்டத்தில் ஆர்வம் செலுத்த ஆரம்பித்துள்ளார்கள், இது மேலும் விரிவடையும் போது மண்பாண்டங்கள் தொழில் சிறப்படைய வாய்ப்புள்ளது, எது எதுக்கோ இலவசம் கொடுக்குறாங்க இந்த தொழில் செய்பவர்களுக்கு அரசாங்கம் எதாவது ஒரு வகையில் உதவ வேண்டும், இது போலவே பொய்க்கால் குதிரை ஆட்டம், பொம்மலாட்டம், கதா காலட்சேபம், லாவணி கச்சேரி போன்ற கலைகளும் அழிந்து வருகிறது, சில முற்றிலும் அழிந்தே விட்டது, நாம் அடுத்த தலைமுறைக்கு வைத்துவிட்டு போவது எதுவும் இல்லை
Rate this:
Share this comment
Cancel
Rangiem N Annamalai - bangalore,இந்தியா
15-ஏப்-201606:14:31 IST Report Abuse
Rangiem N Annamalai டீ குடிக்க பயன் படுத்தும் பிளாஸ்டிக் கப்புகளை தடை செய்தால் போதும்.இந்த தொழிலில் அனைவரும் உள்ளே வருவார்கள் .
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X