பதிவு செய்த நாள் :
ராஜ்யசபா தேர்வு குழுவுக்கு உறுப்பினரை
தேர்வு செய்ய முடியாமல் தவித்த அ.தி.மு.க.,

முக்கிய மசோதாவை, பரிசீலனை செய்யும், ராஜ்யசபா தேர்வுக்குழுவுக்கு, கட்சியின் சார்பில், பெயர் தருவது குறித்து, தெளிவாக கையாளத்தெரியாமல் போனதால், ரெண்டுங் கெட்டான் நிலைக்கு, அ.தி.மு.க., ஆளாகியுள்ள பரிதாபம், அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 ராஜ்யசபா தேர்வு குழுவுக்கு உறுப்பினரை தேர்வு செய்ய முடியாமல் தவித்த அ.தி.மு.க.,

இதுகுறித்து டில்லியில், தகவலறிந்த வட்டாரங்கள் கூறியதாவது:பட்ஜெட் கூட்டத்தொடரின் முதல் கூட்டம், மார்ச் 16ல் நிறைவடைந்தபோது, பல்வேறு மசோதாக்கள் அறிமுகம் செய்யப்பட்டன.

அவற்றில், எதிரிகள் சொத்து சீரமைப்பு மசோதாவும் ஒன்று. அந்த மசோதா தாக்கல் செய்யப்பட்ட நிலையில், அப்படியே, ராஜ்யசபாவின் தேர்வுக்குழுவுக்கு அனுப்பப்பட்டது.சபையில், ஒரு மசோதா தாக்கல் செய்யப்பட்டவுடன், அது குறித்து, தீவிரமான பரிசீலனை மேற்கொள்வதற்கு, பல கட்சிகளைச் சேர்ந்த எம்.பி.,க்களை, உறுப்பினர்களாக கொண்ட குழு, அமைக்கப்படுவது வழக்கம். அதன்படி, இந்த மசோதாவுக்கும், பா.ஜ., - எம்.பி., புபிந்தர் யாதவ் தலைமையிலான, 23 உறுப்பினர்கள் கொண்ட குழு அமைக்கப்பட்டது.

அ.தி.மு.க., தலைமைக்கு...சபையில் மிகப்பெரிய கட்சி களில் ஒன்றான, அ.தி.மு.க., சார்பில், யாரை உறுப்பினராக போடுவது என்று, அக்கட்சியின் ராஜ்யசபா தலைவரிடம் கேட்கப்பட்டது. எந்த ஒரு சிறிய விஷயமாக இருந்தாலும், அதுகுறித்து என்ன செய்வது, எப்படி செய்வது எனக் கேட்டு அ.தி.மு.க., தலைமைக்கு, 'நோட்' அனுப்பியாக வேண்டும்.

அதன்படி, இந்த தேர்வுக்குழுவுக்கு, யாரை

போடுவது என்று கேட்டு, 'நோட்' அனுப்பப்பட்டது. ஆனால், தலைமையிடம் இருந்து, உத்தரவு வர தாமதம் ஏற்பட்டது. இதற்கிடையில், பார்லிமென்ட் விவகாரத்துறை இணையமைச்சர் முக்தர் அப்பாஸ் நக்வி தரப்பில், அழுத்தம் தரப்பட்டது.

இதையடுத்து, அ.தி.மு.க., துணைத் தலைவராக உள்ள, முத்துக் கருப்பனின் பெயர் அளிக்கப் பட்டது. அந்த பெயரே, தேர்வுக்குழு உறுப்பினர் பட்டியலில் இடம்பெற்று, அதை, சபையும் ஒருமனதாகஏற்றுக்கொண்டது. இந்நிலையில்தான், ஏற்கனவே போட்டிருந்த நோட்டிற்கு, அ.தி.மு.க., தலைமையிடம் இருந்து, பதில் வந்தது.அதில், தேர்வுக்குழுவில், அ.தி.மு.க., சார்பில், ரபிபெர்னாட் இடம்பெற பரிந்துரைக்கப்பட்டிருந்தது. இதனால், குழப்பம் உருவானது.

என்ன செய்வது என்று யோசிக்கவே, வேறு வழியின்றி, விவகாரம், முக்தர் அப்பாஸ் நக்விடம் சென்றது. கட்சித் தலைமை, தன்னையே உறுப்பினராக அங்கீகரித்துள்ளதாக கூறி, ரபிபெர்னாட் சார்பில் கடிதம் தரப்பட்டது.

அதைப் பார்த்த முக்தர் அப்பாஸ் நக்வி, கடும் அதிருப்தியும், கோபமும் அடைந்தார். ''மனம் போன போக்கில் பெயர் மாற்றம் செய்ய முடியாது. இப்போது, பெயரை மாற்ற வேண்டுமெனில், மீண்டும், குழுவில் உள்ள அனைவரின் அனுமதியை பெற வேண்டும். அதோடு, இந்த மாற்றத்திற்கு, சபையின் ஒப்புதலையும் பெற வேண்டும்,'' என்று கூறி, ரபிபெர்னாட்டின் கடிதத்தை, நக்வி ஏற்க மறுத்து விட்டார்.

ரெண்டுங் கெட்டான் நிலை...இதனால், ரெண்டுங் கெட்டான் நிலைக்கு, அ.தி.மு.க., தள்ளப் பட்டுள் ளது. இந்நிலையில், மார்ச் 28ல், இந்த தேர்வுக் குழுவின் ஆலோசனைக் கூட்டம், டில்லியில் நடந்தது.

அந்த கூட்டத்திற்கு, அ.தி.மு.க.,சார்பில், யார் வரப்போகிறார் என்ற எதிர்பார்ப்பு இருந்தது. முத்துக்கருப்பன் கலந்து கொள்ளலாம் என்றால், அது அம்மாவின் ஆணையை, மீறியதாகிவிடும். ரபிபெர்னாட் கலந்து கொள்ளலாம் என்றால், அது, ஹமீத் அன்சாரியின் ஆணையை மீறியதாகி விடும்.எனவே, இருதலைக் கொள்ளியாய் மாட்டிக் கொண்டு முழிக்கும் நிலைக்கு ஆளான அ.தி.மு.க., சற்றே யோசித்து, ஒரு அருமையான முடிவை

Advertisement

எடுத்தது.

அதன்படி, அன்றைய கூட்டத்தில் முத்துக் கருப்பனும் கலந்து கொள்ளவில்லை; ரபி பெர்னாட்டும் கலந்து கொள்ளவில்லை. அ.தி.மு.க., சார்பில் யாரும் கலந்து கொள்ளா மலேயே அந்த கூட்டம் நிறைவு பெற்றது. மீண்டும், இதே குழுவின் நேற்றைய ஆலோ சனை கூட்டத்தையும், அ.தி.மு.க., தவிர்த்து விட்டது. இவ்வாறு, அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

ஏன் இந்த குழப்பம்?

வெளிநாடு சுற்றுப்பயண வாய்ப்பு வந்தால், அ.தி.மு.க., சார்பில் எந்த எம்.பி., செல்லலாம் என்பது குறித்து, தலைமைதான் முடிவு செய்யும். வெளிநாடுகளைச் சேர்ந்த எம்.பி.,க்கள் குழு, அவ்வப் போது பார்லிமென்டிற்கு வருகை தருவதுண்டு. கூட்டத்தொடரை பார்வையிடும் இந்த குழுவுக்கு, மாலையில், ராஜ்யசபா தலைவர் அல்லது லோக்சபா சபாநாயகர் சார்பில், தேனீர் விருந்து தரப்படும்.

ஒரு அறையில், மிகசாதாரணமாக நடைபெறும், இதுபோன்ற டீ, பிஸ்கட் சாப்பிடும் நிகழ்ச்சியில் கூட, அ.தி.மு.க., சார்பில் யார் கலந்து கொள்ள வேண்டுமென்று, சென்னைக்கு, 'நோட்' போட்டு, அங்கிருந்து, உத்தரவு வருகிறது. பார்லிமென்ட் நடவடிக்கைகளின் போக்கு மற்றும் சூழ் நிலை க்கு ஏற்ப, உடனடியாக முடிவெடுக்கும் அதிகாரம், அ.தி.மு.க.,வில் யாருக்கும் இல்லா ததே இதுபோன்ற குழப்பங்களுக்கு காரணம்.

- நமது டில்லி நிருபர் -

Advertisement

வாசகர் கருத்து (24)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
MUNIASAMY - madurai,இந்தியா
16-ஏப்-201615:06:18 IST Report Abuse

MUNIASAMYஇவர்களையெல்லாம் தேர்வு செய்த தமிழ்நாட்டு மக்கள் தலை குனியனும் . இதைவிட கேவலம் வேறுதுவும் இல்லை .

Rate this:
Sridhar Rengarajan - Trichy,இந்தியா
16-ஏப்-201614:39:21 IST Report Abuse

Sridhar Rengarajanஒரு போன் போட்டு கன்பர்ம் பண்ண எவ்வளவு நேரமாகிடும்.

Rate this:
kovai - kovai,இந்தியா
16-ஏப்-201614:35:54 IST Report Abuse

kovaiஎல்லாம் அம்மா... அம்மாவின்றி ஒரு அணுவும் அசையாது பாராளுமன்றத்தில்...

Rate this:
மேலும் 21 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X