அரசியல் செய்தி

தமிழ்நாடு

பதிவு செய்த நாள் :
தோப்பு இருக்கு: தேங்காய் இல்லை

'ஏன் தான் கட்சி துவங்கினோமோ...தேர்தல் அறிவித்ததும் போதும்... ஒரு நாள் கூட நிம்மதியான துாக்கம் இல்லை' என, த.மா.கா., தலைவர் வாசன், இரண்டு நாட்களுக்கு முன், கட்சியின் மூத்த தலைவர் ஒருவரிடம் உதிர்த்த வார்த்தைகள்.

தோப்பு இருக்கு: தேங்காய் இல்லை

சின்னம், கூட்டணி, குடும்ப அரசியல், மூத்த தலைவர்கள் ஓட்டம் என, ஏகப்பட்ட பிரச்னை களை சந்தித்து வரும் த.மா.கா.,விற்கு, இப்போது புது பிரச்னை முளைத்து உள்ளது. ம.ந.கூ.,யில் தொகுதிகள் பிரிக்கப்பட்டு, நேற்று முன்தினம் அறிவிக்கப்பட்டன.

இதில் இளித்தவாயாகி இருப்பது த.மா.கா.,தான். கூட்டணியில் இடம் பெற்ற மற்ற ஐந்து கட்சிகளும் தங்களுக்கு சாதகமான தொகுதி களை ஒதுக்கிக் கொண்டது போக, மீதமுள்ள ஏப்பசாப்பையான வெற்றி வாய்ப்பு இல்லாத தொகுதிகளை த.மா.கா.,விடம் தள்ளி விட்டுள்ளன.
வாங்கிய தொகுதிகளை, இருக்கும்

தலைவர்களை வைத்து, தேர்தலை கடந்து விடலாம் என, தலைவர்களைத் தேடினால்; 'நான் சிக்கமாட்டேன்' என கூறாமல், தலைவர்கள் பதுங்கி ஒதுங்குவது, வாசனை அதிர்ச்சிக்கு உள்ளாக்கி இருக்கிறது.
கோவை மாவட்டம், வால்பாறை தொகுதியில் தொடர்ச்சியாக போட்டியிட்டு வரும் கடசியின் துணைத் தலைவர் கோவை தங்கத்துக்கு, 'சீட்' கொடுத்தாலும், 'நேரம் சரியில்லை' என சொல்லி, ஒதுங்கி ஓடுகிறாராம்.
திண்டுக்கல்லை சேர்ந்த கட்சியின் மூத்த துணை தலைவர் ஞானதேசிகனுக்கும், அவர் மகனுக்கும் திண்டுக்கல்லில் சீட் எதிர்பார்க்கப்பட்டது. தொகுதி கிடைக்கவில்லை. அதனால், வேறு தொகுதி வேண்டாம் என, மறுத்துவிட்டனர்.
வேலுார் தொகுதியில் போட்டியிடும் கட்சியின் துணை தலைவர் ஞானசேகரனுக்கு, வேலுார் கிடைக்காததால், அவரை, கிடைத்த வாணியம்பாடிக்கு செல்லுமாறு வற்புறுத்தப்படுகிறார்.கட்சியின் சிட்டிங் எம்.எல்.ஏ., பட்டுக்கோட்டை ரங்கராஜனுக்கு, பட்டுக்கோட்டை தொகுதி இல்லை. அதனால், அவரும் போட்டியிடவிருப்பமில்லாமல் இருக்கிறார்.

கட்சியின் வடசென்னை மாவட்ட தலைவர் பிஜு சாக்கோவுக்காகதிருவொற்றியூர் கேட்டால், ஒதுக்கப்பட்டது ராயபுரம். அவரும் தலை சுற்றி நிற்கிறார்.தென்சென்னை மாவட்ட தலைவர் முருகன், வேளச்சேரியை எதிர்பார்த்து காத்திருந்தார். அதிர்ஷ்ட தேவதை இவள்தான் என சொல்லி மயிலாப்பூரை தள்ளியுள்ளனர்.

Advertisement

கட்சியின் இளைஞர் அணி தலைவர் யுவராஜா மையல் கொண்டது ஈரோடு மேற்கு மீது. ஆனால், அவருக்கு தள்ளப்பட்டதோ பெருந் துறை. அந்தளவுக்கு எனக்கு பெரிய மனது இல்லை என்று சொல்லி ஒதுங்குவதாக கேள்வி.மகளிர் அணி மாநில செயலர் மகேஸ்வரி கோவையில் ஒரு தொகுதியை எதிர்பார்த்து ஒற்றைக் காலில் நின்றார். மேட்டுப் பாளையம் தான் கிடைத்திருக்கு. தேவை யானால், அங்கே சென்று ரெட்டை காலில் நிற்கலாம் என்கின்றனர்.

மாநில பொதுச் செயலர் விடியல் சேகர் காங்கேயம் காளையாக வலம் வரலாம் என நினைத்தார். அவரை பெருந்துறைக்கு கொம்பு சீவிய தஞ்சாவூர் காளையாக்க பார்ப்பதால், அவர் மிரண்டு ஓடுகிறார். பாவம் த.மா.கா., தலைவர்கள். நினைத்தது நடக்காத விரக்தியில், சின்ன குழந்தைகள் வாயில் விரல் வைத்து அழுவது போன்ற நிலையில்உள்ளனர்.

-நமது சிறப்பு நிருபர் -

Advertisement

வாசகர் கருத்து (67)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Cheenu Meenu - cheenai,இந்தியா
17-ஏப்-201600:50:51 IST Report Abuse

Cheenu Meenuவாசனுக்கும்,வைகோவுக்கும் இனி அரசியல் சரிபடாது.

Rate this:
D.RAMIAH - RAIPUR,இந்தியா
16-ஏப்-201621:57:18 IST Report Abuse

D.RAMIAHஆஹா வாசனுக்கு கோவிந்தா கோவிந்தா 26 தொகுதிகளிலும் டெப்பாசிட் கூட கிடைக்காது

Rate this:
PERUMAL MANI DUBAI - vadakarai,இந்தியா
16-ஏப்-201617:14:04 IST Report Abuse

PERUMAL MANI DUBAIவாசன் அம்மா கொடுக்கிற சீட்டை பெற்றுக்கொண்டு தேர்தலில் நின்றிருந்தால் நின்ற அனைத்திலும் வென்று கட்சியை காப்பாத்தி இருக்கலாம்

Rate this:
மேலும் 64 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X