அரசியல் செய்தி

தமிழ்நாடு

பதிவு செய்த நாள் :
கற்பனைக்கு எட்டாததை செய்து
முடிப்பேன்: ஜெ., சூளுரை

அருப்புக்கோட்டை:''நீங்கள் நினைத்துக்கூட பார்க்க முடியாத, உங்கள் கற்பனைக்கு எட்டாத திட்டங்களை செய்து முடிப்பேன்,'' என, முதல்வர் ஜெயலலிதா அருப்புக்கோட்டை பிரசாரத்தின் போது தெரிவித்தார்.

 கற்பனைக்கு எட்டாததை செய்து முடிப்பேன்: ஜெ., சூளுரை

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் 14 வேட்பாளர்களை அறிமுகப்படுத்தி, தென் மாவட்டங்களில் நிறைவேற்றிய திட்டங்கள் குறித்து அவர் பேசியது:தமிழகத்தில் நல்லாட்சி தொடர வேண்டும். கடந்த தேர்தலில் தெரிவிக்கப்பட்ட 53 வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டன. ஒவ்வொரு நாளும் புதிய திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. ஆளும் கட்சி, எதிர்கட்சி என்ற வேறுபாடு இல்லாமல் அனைத்து தொகுதிகளிலும் வளர்ச்சி பணிகளை நிறைவேற்றி உள்ளேன்.

மீன்பிடி இல்லாத காலத்தில், மீன்பிடி குறைந்த காலத்தில் வழங்கப்படும் தொகையை காலத்திற் கேற்ப உயர்த்தி வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். 'அம்மா' உணவகம், 'அம்மா' குடிநீர் என தேர்தல் அறிக்கையில் சொல்லாததையும் நாங்கள் செய்துள்ளோம்.

ராமநாதபுரம், சிவகங்கை, துாத்துக்குடியில், விருதுநகரில் 5ஆண்டுகளில் 860 ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்பட்டுள்ளன. ரூ.416 கோடி செலவில் வகுப்பறை, ஆய்வகங்கள், குடிநீர் வசதி செய்யப்பட்டு சீரமைக்கப்பட்டு உள்ளன. பரமக்குடி, முதுகுளத்துார், சிவகாசி, அருப்புக்கோட்டை, சாத்துார், கோவில்பட்டி,

விளாத்திகுளத்தில் அரசு கல்லுாரிகள் துவக்கப்பட்டுள்ளன.

ரூ.173 கோடி மதிப்பீட்டில் கூட்டு குடிநீர் திட்டங்கள் முடிக்கப்பட்டு உள்ளன. நகர குடிசை பகுதிகளில் சுற்றுப்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ், ரூ.3.67 கோடியில் மேம்பாட்டு பணிகள் செய்யப்பட்டுள்ளனதென்மாவட்டங்களில் 5 ஆண்டுகளில் 27 கால்நடை மருந்தகங்கள், 12 புதிய ஆரம்பசுகாதார நிலையங்கள், 11 நகர்ப்புற ஆரம்பர சுகாதார நிலையங்கள் துவக்கப்பட்டுள்ளன.

11 ஆரம்ப சுகாதார நிலையங்கள், 30 படுக்கைகளுடனும் ஏர்வாடி மனநல மருத்துவமனை 50 படுக்கைகளுடன் தரம் உயர்த்தப்பட்டுள்ளன. கோவில்பட்டி, பரமக்குடியில் பச்சிளம் குழந்தை பராமரிப்பு மையம், ராஜபாளையத்தில் 20 படுக்கைகளுடன் கூடிய குழந்தைகள் தீவிர சிகிச்சை பிரிவு துவக்கப்பட்டுள்ளது.

ராமநாதபுரத்தில் மாநில, மாவட்ட முக்கிய நெடுஞ்சாலைகளை ஐந்தாண்டுக்கு மேம்படுத்திட ஒப்படைப்பு ஆவணம் வழங்க வகை செய்யப் பட்டுள்ளது.மானாமதுரை சிப்காட் தொழில் வளாகத்தில், கிரானைட் தொழில் உட்பட புதிய தொழில்பூங்கா அமைக்க, நிலஎடுப்பு பணிகள் துவக்கப்பட்டுள்ளன. ராமநாதபுரத்தில் புதிய உற்பத்தி மண்டலம் அமைக்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. ராமநாதபுரத்தில் ஒருங்கிணைந்த ஜவுளிபூங்கா அமைக்க, மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது.

விருதுநகரில் உணவு பதப்படுத்துதல், பொறியியல் மற்றும் அச்சு தொழில்கூடங்கள் இடம்பெறும் வகையில் தொழில்பூங்கா அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும். இதற்கான நில எடுப்பு பணிகள் துவக்கப்பட்டுள்ளன.ராமநாதபுரத்தில் 4,000 மெகாவாட் மின்உற்பத்தி திறன் கொண்ட அனல் மின்நிலையம், வைப்பாற்றின் குறுக்கே தடுப்பணைகள், நெடுஞ்சாலை மூலம் 285 கி.மீ., நீளத்தில் சாலைப் பணிகள் மேற்கொள்ளப் பட்டுள்ளன.நீங்கள்

Advertisement

நினைத்துக்கூட பார்க்காத, கற்பனைக்கு எட்டாத திட்டங்களையும் செய்து முடிப்பேன், என்றார்.

வெயிலில் மூன்று பெண்கள் மயக்கம்
* அருப்புக்கோட்டைக்கு ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர், துாத்துக்குடி பகுதிகளில் இருந்து காலை 10 மணி முதல் வேன், பஸ் களில் தொண்டர்கள் அழைத்து வரப்பட்டனர்.
* மேடைக்கு முன் பகுதி, பெண்களுக்கு ஒதுக்கப்பட்டிருந்தது. கடும் வெயிலில் 2 பெண்கள் மற்றும் பெண் டி.எஸ்.பி., ஒருவர் மயக்கம் அடைந்தனர்.
* கூட்டத்திற்கு வந்தவர்களுக்கு தண்ணீர் பாக்கெட், குளுக்கோஸ் வழங்கப்பட்டது.
* முதல்வரை வரவேற்க கும்பத்துடன் நின்றிருந்த சிவகாசி பள்ளப்பட்டி இருளாயி அணிந்திருந்த 4.5 பவுன் நகை மாயமானது.
* ரோட்டோரம் தடுப்புகளுக்காக வைத்திருந்த தகரம் சாய்ந்து, அருப்புக்கோட்டை வெள்ளக்கோட்டையை சேர்ந்த சங்கர் காயம் அடைந்தார்.
* அருப்புக்கோட்டை வேட்பாளர் வைகை செல்வன், அவ்வப்போது மேடையில் இருந்து 'மைக்' மூலம் கூட்டத்தினரை ஒழுங்குபடுத்தும் பணியை செய்தார்.
* லோக்சபா துணை சபாநாயகர் தம்பித்துரை, மதியம் ௧ மணி முதல் ஜெ., வரும் வரை மேடையில் தனி ஒருவராக நின்று கூட்டத்தை கண்காணித்தார்.

Advertisement

வாசகர் கருத்து (97)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
இளங்கோ - chennai,இந்தியா
16-ஏப்-201619:53:39 IST Report Abuse

இளங்கோகூரை ஏறி கோழி பிடிக்காவிட்டாலும் வானம் ஏறி வைகுண்டம் போவேன். நீங்கள் நம்ப வேண்டும்.

Rate this:
S ANBUSELVAN - AL JUBAIL,சவுதி அரேபியா
16-ஏப்-201619:05:32 IST Report Abuse

S ANBUSELVANதிமுக 70-75 அதிமுக 75-80 மக்கள் நல கூட்டணி 50-60 மற்றவை- மீதம் இது தான் நடக்க போகிறது. மே 19 தெரியும்

Rate this:
kowsik Rishi - Chennai,இந்தியா
16-ஏப்-201618:21:56 IST Report Abuse

kowsik Rishiசெல்வி ஜே ஜே வின் ஆட்சியில் குறை என்ன? சட்டம் ஒழுங்கு தமிழ் நாடு அமைதி பூங்கா போய் பாருங்கள் மற்ற இந்திய மாநிலங்களின் நிலையை இந்தியாவிலே தமிழ் நாடு மட்டும் தான் அதுவும் செல்வி ஜே ஜே வின் ஆட்சி காலங்களில் தான் மிக சிறப்பாக, அமைதியாக, மக்கள் நிமதியாக அம்மா உணவகம், அம்மா மருந்தகம், அம்மா சிமெண்ட், அம்மா திட்டங்கள் எல்லாம் மக்கள் நலன் தரும், கொடுக்கும் திட்டகள் மக்கள் நிமதி, மகிழ்ச்சி ஆரவாரம் பாருங்கள் செல்வி ஜே ஜே வின் வெற்றி கூட்டணி தமிழ் நாடு மக்களோடு தான் தமிழ் நாட்டின் மக்கள் கற்பனைக்கும் எட்டாத திட்டங்கள் செல்வி ஜே ஜே செய்வார் ஓன்று சொல்லவா மினரல் வாட்டர் திட்டம் கடல் தண்ணிரை நனிராகும் திட்டம் தண்ணியில் பணம் பண்ணும் ஒரு கூட்டம் கொள்ளை கும்பல் இப்போதே பதற ஆரம்பித்து விட்டது மக்கள் சொல்வதை கேளுங்கள் அம்மா திட்டங்கள் எல்லாம் ஒவ்வொரு குடும்பத்திற்கும் போய் சேருகிறது உணவு, தண்ணீர், உடை, படிப்பு, வேலை, கல்யணம், சீமந்தம், பேறுகாலம், முதியர் நலன் என்று எல்லரரையும் போய் சேருகிறது

Rate this:
Anandan - chennai,இந்தியா
17-ஏப்-201603:33:31 IST Report Abuse

Anandanஇப்படி பட்ட ஜால்ரா சத்தம் மக்களுக்கு வெறுப்பாகி ரொம்ப நாளாச்சு. இடத்தை காலி பண்ணுப்பா காத்து வரட்டும் ...

Rate this:
மேலும் 93 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X