வாக்காளருக்கு பணம் கொடுக்க மாட்டேன் : வருகிறது வேட்பாளர்களுக்கும் உறுதிமொழி| Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

'வாக்காளருக்கு பணம் கொடுக்க மாட்டேன்' : வருகிறது வேட்பாளர்களுக்கும் உறுதிமொழி

Added : ஏப் 15, 2016
Share
சிவகங்கை:வேட்பு மனுத் தாக்கலின் போது வேட்பாளர் வாசிக்கும் உறுதிமொழியுடன், 'வாக்காளருக்கு பணம் கொடுக்க மாட்டேன்,' என்ற வாசகமும் சேர்க்கப்பட உள்ளது.தேர்தலை நேர்மையாக நடத்தி முடிக்க ஆணையம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதற்காக பறக்கும் படைகள், நிலையான கண்காணிப்பு குழுக்கள், வீடியோ படைகள் அமைக்கப்பட்டு, தீவிரமாக கண்காணித்து வருகின்றன. அவற்றையும் மீறி


சிவகங்கை:வேட்பு மனுத் தாக்கலின் போது வேட்பாளர் வாசிக்கும் உறுதிமொழியுடன், 'வாக்காளருக்கு பணம் கொடுக்க மாட்டேன்,' என்ற வாசகமும் சேர்க்கப்பட உள்ளது.
தேர்தலை நேர்மையாக நடத்தி முடிக்க ஆணையம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதற்காக பறக்கும் படைகள், நிலையான கண்காணிப்பு குழுக்கள், வீடியோ படைகள் அமைக்கப்பட்டு, தீவிரமாக கண்காணித்து வருகின்றன. அவற்றையும் மீறி அரசியல் கட்சியினர், வேட்பாளர்கள் பணம், பரிசுகளை கொடுத்து வாக்காளர்களை கவர்ந்து வருகின்றனர்.
மற்ற மாநிலங்களை விட தமிழகத்தில் தான் வாக்காளர்களுக்கு அதிகளவில் பணம் கொடுப்பதாக ஆணையமும் வருத்தம் தெரிவித்துள்ளது. 'ஓட்டிற்கு பணம், பரிசு கொடுத்தாலோ, வாங்கினாலோ சிறைத் தண்டனை வழங்கப்படும்,' என ஆணையம் எச்சரித்துள்ளது. மேலும் இந்த தேர்தலில் வேட்புமனுத் தாக்கலின் போது, வேட்பாளர் அளிக்கும் உறுதிமொழியுடன், 'வாக்காளர்களுக்கு பணம் கொடுக்க மாட்டேன். நேர்மையான முறையில் ஓட்டு சேகரிப்பேன்; நேர்மையற்ற முறையில் சேகரிக்க மாட்டேன்,' என்ற வாசகமும் சேர்க்கப்பட உள்ளது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X