பொது செய்தி

இந்தியா

ஐ.பி.எல்.,டுவென்டி-20 கிரிக்கெட் : டில்லி அணி அசத்தல் வெற்றி

Updated : ஏப் 15, 2016 | Added : ஏப் 15, 2016
Share
Advertisement
புதுடில்லி: பஞ்சாப் அணிக்கு எதிரான பிரிமியர் லீக் போட்டியில் குயின்டன் அரை சதம் விளாச, டில்லி அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.இந்தியாவில், 9வது பிரிமியர் கிரிக்கெட் தொடர் நடக்கிறது. இதில் புனே, மும்பை, கோல்கட்டா உள்ளிட்ட 8 அணிகள் பங்கேற்கின்றன. டில்லியில் உள்ள பெரோஷா கோட்லா மைதானத்தில் நடந்த லீக் போட்டியில் ஜாகிர் தலைமையிலான டில்லி அணி, டேவிட் மில்லர்

புதுடில்லி: பஞ்சாப் அணிக்கு எதிரான பிரிமியர் லீக் போட்டியில் குயின்டன் அரை சதம் விளாச, டில்லி அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்தியாவில், 9வது பிரிமியர் கிரிக்கெட் தொடர் நடக்கிறது. இதில் புனே, மும்பை, கோல்கட்டா உள்ளிட்ட 8 அணிகள் பங்கேற்கின்றன. டில்லியில் உள்ள பெரோஷா கோட்லா மைதானத்தில் நடந்த லீக் போட்டியில் ஜாகிர் தலைமையிலான டில்லி அணி, டேவிட் மில்லர் வழிநடத்தும் பஞ்சாப் அணியை சந்தித்தது. 'டாஸ்' வென்ற டில்லி அணி கேப்டன் ஜாகிர் கான் 'பவுலிங்' செய்தார்.
மிஸ்ரா அசத்தல்:பஞ்சாப் அணிக்கு முரளி விஜய் (1) ஏமாற்றினார். வோரா 32 ரன்கள் எடுத்தார். மிஸ்ரா 'சுழலில்' ஷான் மார்ஷ் (13), கேப்டன் மில்லர் (9), மேக்ஸ்வெல் (0) சிக்கினர். மோகித் சர்மா 15, மிட்சல் ஜான்சன் 4 ரன்கள் எடுத்தனர். முடிவில், பஞ்சாப் அணி 20 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 111 ரன்கள் எடுத்தது. பிரதீப் சகு (18), சந்தீப் சர்மா (1) அவுட்டாகாமல் இருந்தனர். டில்லி அணி சார்பில் அதிகபட்சமாக மிஸ்ரா 4 விக்கெட் வீழ்த்தினார்.
குயின்டன் அரை சதம்:எளிய இலக்கை துரத்திய டில்லி அணிக்கு ஸ்ரேயாஸ் ஐயர் (3) சொதப்பினார். பின் இணைந்த குயின்டன், சாம்சன் ஜோடி பொறுப்புடன் செயல்பட்டது. சாம்சன் 33 ரன்கள் எடுத்தார். குயின்டன் அரை சதம் அடித்தார். முடிவில், டில்லி அணி 13.3 ஓவரில் 2 விக்கெட்டுக்கு 113 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. குயின்டன் (59), பவான் நேகி (8) அவுட்டாகாமல் இருந்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X