அரசியல் செய்தி

தமிழ்நாடு

பதிவு செய்த நாள் :
5 ஆண்டுகளில் அ.தி.மு.க., பட்டை நாமம்
மதுரையில் ஸ்டாலின் ஆவேசம்

மதுரை,:''தமிழக மக்களுக்கு 5 ஆண்டுகளில் அ.தி.மு.க., அரசு பட்டை நாமம் போட்டுள்ளது. எந்த வளர்ச்சித் திட்டங்களும் மக்களுக்கு கிடைக்கவில்லை,'' என தி.மு.க., பொருளாளர் ஸ்டாலின் பேசினார்

 5 ஆண்டுகளில் அ.தி.மு.க., பட்டை நாமம்மதுரையில் ஸ்டாலின் ஆவேசம்

மதுரை அருகே ஒத்தக்கடையில் பிரசாரத்தை துவக்கிய அவர் பல்வேறு இடங்களில் பேசிய தாவது:தமிழகத்தில் மே 16ல் ஒரு போர்க்களத்தை சந்திக்க உள்ளோம். அதற்கான பூமி பூஜை யாகதான் இந்த பிரசாரம் துவங்கி உள்ளது. ஜெயலலிதாவை நாட்டைவிட்டு விரட்டவும், கருணாநிதியை 6வது முறையாக முதல்வராக்கவும் சபதம் ஏற்று இங்கு வந்துள்ளேன்.

இந்த தேர்தலில் தி.மு.க.,.வின் தேர்தல் அறிக்கை மக்களிடம் சென்றடைந்து உள்ளது. கடந்த 2006ல் தி.மு.க., தேர்தல் அறிக்கையை முதலில் 'சீரோ' என வர்ணித்தனர். ஆனால் 'ஹீரோ'வாக இருந்தது. 2016 ல் இது 'சூப்பர் ஹீரோ'வாக இருக்கும்.

இதன் கதாநாயகன் யார்? என்று உங்களுக்கு தெரியும். நானும் ஒரு கதாநாயகனாக இங்கு வந்துள்ளேன். சினிமாவில் வில்லன்களிடம் இருந்து கதாநாயகன் மக்களை காப்பாற்றுவார். ஆனால் இந்த தேர்தலில், ஜெயலலிதா என்ற வில்லியிடமிருந்து நாட்டை காப்பாற்றும்

கதாநாயகனாக,கருணாநிதி இருப்பார்.

மதுவிலக்கு குறித்து தேர்தல் அறிக்கையில்குறிப்பிட்டதற்கு, அனைத்து பெண்களும் கொண்டாடுகின்றனர். அதை கருணாநிதியால் மட்டும் கொண்டு வரமுடியும். பயிர்கடன் ரத்து, கல்விக்கடன் ரத்து, கரும்புக்கு அதிக விலை, மாணவர்களுக்கு இணையதள வசதி போன்ற தேர்தல் வாக்குறுதிகள், மக்களிடம் நல்லதாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

2 மாதத்திற்கு ஒரு முறை மின்கட்டணம் என்பதை மாதம் ஒரு முறை மின் கட்டணம் என்ற முடிவால் வீடுகளுக்கு ரூ.2,000 வரை மிச்சம். ஜல்லிக்கட்டு, 'ரோக்ளா ரேஸ்' அனைத்திற்கும் அனுமதி அளிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

கடந்த 2011ல் ஜெயலலிதா கொடுத்த எந்த உறுதிமொழியையும் நிறைவேற்றவில்லை. மதுரையில் தமிழன்னைக்கு சிலை, தோப்பூர் துணை நகரம், 'எய்ம்ஸ்' மருத்துவமனை என எந்த திட்டத்தையும் நிறைவேற்றவில்லை.தொழில் வளர்ச்சியில் 13 வது இடத்தில் தமிழகம் உள்ளது. மின்கட்டணம், பஸ் கட்டணம், ஆவின் பால் விலைதான் உயர்ந்துள்ளது. ஒரு லட்சம் கோடி கிரானைட் ஊழல், ஒரு லட்சம் கோடி தாது மணல் ஊழல், பள்ளிக் குழந்தைகளுக்கு வழங்கும் முட்டையிலும் ஊழல் என எங்கும் ஊழல், எதிலும் ஊழல் மயம்.

முதல்வர் கோட்டைக்கே வரவில்லை. ஆனால் சம்பளம் வாங்குகிறார். எந்த திட்டத்தையும் நிறைவேற்றாமல் மக்களுக்குபட்டை நாமத்தை போட்டுள்ளார்.தி.மு.க.,வில் வெற்றிபெறும் எம்.எல்.ஏ.,க்கள் வாரம் ஒரு முறை மக்களை சந்திக்க வேண்டும். சந்திக்காதவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். மக்களின் பாதம் பணிந்து கேட்கிறேன். காலை தொட்டு கேட்கிறேன், தி.மு.க., ,வை வெற்றி பெற வையுங்கள்.இவ்வாறு

Advertisement

பேசினார். வேட்பாளர்கள் மேலுார் ரகுபதி, மதுரை கிழக்கு மூர்த்தி, தெற்கு பாலசந்திரன், மேற்கு தளபதி மத்தி தியாகராஜன், திருப்பரங்குன்றம் மணிமாறன், உசிலம்பட்டி இளமகிழன், சோழவந்தான் பிரியா தேன்மொழி ஆகியோரை ஆதரித்து பல இடங்களில் பேசினார்.

கச்சத்தீவு மாநில பிரச்னை அல்ல

மதுரை தெற்கு தொகுதி வேட்பாளர் பால சந்திரனை ஆதரித்து முனிச்சாலையில் தி.மு.க., பொருளாளர் ஸ்டாலின் பேசியதாவது: 'கச்சத்தீவை தி.மு.க.,தான் தாரை வார்த்தது' என அபாண்டமான குற்றச்சாட்டை ஜெயலலிதா கூறியுள்ளார்.

கச்சத்தீவு தேசிய பிரச்னை; மாநில பிரச்னை அல்ல. எமர்ஜென்சி காலத்தில்தான் கையெழுத் தானது. அப்போது தி.மு.க., ஆட்சியில் இல்லை. இதற்காக தி.மு.க., தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறது. அப்போது பொதுக்குழு கூட்டி தீர்மானம் நிறைவேற்றிய முதல் கட்சியும் தி.மு.க., தான். ஜெயலலிதா தேர்தல் காலத்தில் தனது தவறுகளை மறைக்க, இது போன்ற குற்றச் சாட்டுகளை தொடர்ந்து கூறி வருகிறார், என்றார்.

Advertisement

வாசகர் கருத்து (192)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
A shanmugam - VELLORE,இந்தியா
21-ஏப்-201609:48:38 IST Report Abuse

A shanmugamதீமூக்காவுக்கு ஒட்டு போட்டால் ஆன்மிகம், "பிரபஞ்சம்", சித்திரை தமிழ் புத்தாண்டு, தமிழ் மரபு, கலாசாரம் எல்லாம் ஒழிந்துவிடும். ஏன்னென்னில் பலவருடங்களுக்கு முன் பெரியாரும், கருணாநிதியும் "சாமியை" செருப்பால் அடித்து பாடையில் கட்டி தெருவில் ஊர்வலமாக கொன்றுசென்றனர் என்பதை தமிழக மக்கள் மறக்காமல் நினைவில் வைத்துக்கொண்டு "நல்லவரிடம்" ஆட்சி பொறுப்பை ஒப்படைப்பது தமிழக மக்களின் வாழ்வாதாரத்தை முன்னேற்ற பாதையில் கொண்டு செல்லும்.

Rate this:
அம்பி ஐயர் - நங்கநல்லூர், சென்னை - 600 061,இந்தியா
17-ஏப்-201611:39:47 IST Report Abuse

அம்பி ஐயர்என்ன ஒரு அறிவு.....?? அட... அட... அடா.... மின் கட்டணம் மாதா மாதம் செலுத்தினாலும் சரி இரண்டு மாதத்திற்கு ஒரு முறை செலுத்தினாலும் சரி.... எவ்வளவு உபயோகப்படுத்துகிறோமோ அதற்கு ஏற்பத்தான் கட்ட வேண்டும்..... இதில் எங்கிருந்து ரூ. 2000/- மிச்சம்...??? ஒண்ணும் புரியலையே..... ஒரு வேளை அம்மாவோட “அம்னீஷியா” புள்ளைக்கும் வந்துடுத்தோ..... வயசாயிடுத்தோல்லியோ....

Rate this:
Gopalakrishnan Ra - Madurai,இந்தியா
17-ஏப்-201600:14:43 IST Report Abuse

Gopalakrishnan Raஸ்டாலின் அவர்கள் கச்சு தீவு தி மு க ஆட்சி காலத்தில் தாரை வார்க்கப்படவில்லை, அது எமெர்ஜென்சி காலத்தில் தாரைவார்க்கப்பட்டது என்று ஒரு அப்பட்டமான பொய்யை பரப்புகிறார். அவருக்கு அரசியல் அறிவு கொஞ்சம் கம்மி என்பது நாம் அறிந்த ஒன்றுதான். மார்ச் 15,1971 முதல் 31, ஜூன் 1976 வரை கருணாநிதிதான் முதல் அமைச்சர். கச்சு தீவு ஜூன் 26 ,1974 இல் இலங்கைக்கு தாரைவார்க்கப்பட்டது. ஆக அது சமயம் தமிழ் நாட்டின் முதல்வர் கருணாநிதிதான் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. ப்ரெசிடெண்ட் ஆட்சி தமிழ் நாட்டில் வந்தது ஜூன் 31, 1976 முதல் ஜூன் 30, 1977 வரை. பொய் பேசி தமிழ் நாட்டு மக்களை ஏமாத்தலாம் என்று ஸ்டாலின் நினைத்தால், மக்கள் ஒன்றும் ஏமாற மாட்டார்கள். இது கணினி உலகம். உங்கள் பொய் பித்தலாட்டம் இனி எடுபடாது என்பதனை ஸ்டாலின் உணர்ந்து கொள்ளவேண்டும்.

Rate this:
மேலும் 189 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X