அரசியல் செய்தி

தமிழ்நாடு

பதிவு செய்த நாள் :
கருணாநிதி வீடு முன் திடீர் முற்றுகை

பாளையங்கோட்டை தொகுதி, தி.மு.க., வேட்பாளர் மைதீன்கானை மாற்றக் கோரி, சென்னை கோபாலபுரத்தில் உள்ள, தி.மு.க., தலைவர் கருணாநிதி வீட்டை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்பட்டது.

 கருணாநிதி வீடு முன் திடீர் முற்றுகை

தமிழக சட்டசபை தேர்தலில், 173 தொகுதிகளில், தி.மு.க., போட்டியிடுகிறது. பாளையங்கோட்டை தொகுதிக்கான வேட்பாளராக மைதீன்கான் அறிவிக்கப்பட்டுள்ளார். ஆனால், அவரை மாற்ற வேண்டும் என, வலியுறுத்தி, திருநெல்வேலி மாவட்ட தி.மு.க.,வினர், வேட்பாளர் பட்டியல் வெளியானது முதல் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

நான்காவது முறையாக போட்டியிடும் மைதீன் கான், இதுவரை தொகுதிக்கு எதுவுமே செய்த தில்லை என்று கூறி, கட்சியினர் அவரின்

உருவ பொம்மையையும் எரித்து எதிர்ப்பு காட்டினர்.
இந்நிலையில், நேற்று காலை, தி.மு.க., தலைவர் கருணாநிதியின் கோபாலபுரம் இல்லத்துக்கு வந்த, திருநெல்வேலி மாவட்ட தி.மு.க., நிர்வாகிகளும், தொண்டர்களும், முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

'விரைவில் வேட்பாளர் மாற்றம் இருக்கும். அப்போது, மைதீன்கானும் மாற்றப்படுவார்' என, கட்சித் தலைவர்கள் சிலர் கூறி, ஆர்ப்பாட்டம் செய்தவர்களை சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர்.

இதற்கிடையில், திண்டிவனம் (தனி) தொகுதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள, 70 வயதான சீத்தாபதியை மாற்ற வேண்டும் என்றும் கோரிக்கை எழுந்துள்ளது. இவரது கணவர் சொக்க லிங்கம், கட்சி விரோத நடவடிக்கையில் ஈடுபட்டதாக, 2006ல் நீக்கப்பட்டவர்.

மேலும், திண்டிவனம் தொகுதி அ.தி.மு.க., வேட்பாளர் ராஜேந்திரனும், சொக்கலிங்கமும் சம்பந்திகள்.அதனால், இருவரும் சேர்ந்து உள்குத்து வேலைகளில் ஈடுபடலாம் என, தி.மு.க.,வினர் அஞ்சுகின்றனர். எனவே, வேட்பாளரை மாற்றக் கோரி, இன்று பெரிய அளவில் போராட்டம் நடத்தவும் திட்டமிட்டுள்ளனர்.


Advertisement

சீர்காழியிலும்: நாகை மாவட்டம், சீர்காழி தொகுதியில், கடலுார் மாவட்டம், கிள்ளையை சேர்ந்த கிள்ளை ரவீந்திரன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். இதற்கு, சீர்காழி தொகுதி தி.மு.க.,வினர் மத்தியில் எதிர்ப்பு எழுந்துள்ளது.

வேட்பாளரை மாற்ற வேண்டும் என, 100க்கும் மேற்பட்ட தி.மு.க.,வினர், நேற்று முன்தினம், சீர்காழியில் சாலை மறியல் செய்தனர். இரண்டாவது நாளாக, இதே கோரிக்கையை வலியுறுத்தி, நேற்றும், பஸ் ஸ்டாண்டு அருகே, சாலை மறியலில் ஈடுபட முயன்றனர். போலீசார், அவர்களை தடுத்து நிறுத்தினர். இதனால், அப் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
- நமது நிருபர் -

Advertisement

வாசகர் கருத்து (33)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
pmrani - Delhi,இந்தியா
16-ஏப்-201618:03:17 IST Report Abuse

pmraniதமிழ் மக்களே சிந்தியுங்கள் இந்த ஹிந்து விரோதக் கட்சியின் ஆட்சி நமக்குத் தேவைதான என்று

Rate this:
anuthapi - dubai,ஐக்கிய அரபு நாடுகள்
16-ஏப்-201617:42:51 IST Report Abuse

anuthapiஆ இ அ தி மு கவில் வேட்பாளரை மற்றும் பொழுது நம்முடிய தமிழ் ஊடகங்களில் விவாதம் நடத்தினார்கள். அப்பொழுது விவாதம் நடத்துபவரும் சரி விவாதத்தில் கலந்து கொண்டவர்கலகிய இதர கட்சி உறுப்பினர்களும், அறிவு ஜீவிகளும் முதலமைச்சர் ஜெயலலிதா அவர்களை விமர்சனம் செய்தார்கள் . இன்று எந்த ஒரு தமிழ் ஊடகங்கள் இந்த வேட்பாளர் மாற்றாத்தை பற்றி தைரிமாக விவாதம் நடத்துவார்கள?

Rate this:
sha_newyork - new york,யூ.எஸ்.ஏ
16-ஏப்-201620:00:38 IST Report Abuse

sha_newyorkஅந்த அளவுக்கு அம்மையார் மீது குரோதம் நண்பரே. சர்வாதிகாரி என்பார்கள் ஆனால் யார் வேண்டுமானாலும் அவரை ஊடகங்களில் விமர்சிக்கலாம். ஆனால் சுடலயனயோ முகவையோ விமர்சித்து பார்க்கட்டுமே அந்த ஊடகமே இல்லமால் செய்துவிடுவார்கள் ஆனால் அது சர்வதிகாரம் இல்லை. ஜனநாயகம். ...

Rate this:
T.Palani - Panruti,இந்தியா
16-ஏப்-201621:24:59 IST Report Abuse

T.Palaniபழனி ஐயர்: EXCELLENT ...EXCELLENT அனுதாபி ... ...

Rate this:
Mannan - chennai,இந்தியா
16-ஏப்-201615:09:26 IST Report Abuse

Mannanதிமுக .....கட்சியின் தலைமையின் கட்டுபாட்டில் இருந்து விலகி ......விலகி மேலும் விலகி போய் கொண்டே உள்ளது ............கட்சி தலைமையின் கட்டுபாட்டில் இல்லை என்றால் ............அதன் வளர்ச்சி என்பதை நோக்கி போகாது .......சரியான மாற்று கட்சி வந்து விட்டால் கட்சி அத்தோடு நின்று விட வாய்ப்பு அதிகம்

Rate this:
மேலும் 28 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X