கடும் சர்ச்சை எதிரொலி: காரை ஒப்படைத்த எடியூரப்பா

Added : ஏப் 18, 2016 | கருத்துகள் (1)
Advertisement

பெங்களூரு:பெரும் சர்ச்சை ஏற்பட்டதால், கர்நாடகா மாநில, பா.ஜ.,வின் புதிய மாநில தலைவரான எடியூரப்பா, முன்னாள் அமைச்சர் முருகேஷ் நிரானி, தனக்கு பரிசாக அளித்த சொகுசு காரை, அவரிடமே திரும்ப ஒப்படைத்தார்.கர்நாடகா மாநில பா.ஜ., தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட எடியூரப்பாவுக்கு, முன்னாள் அமைச்சர் முருகேஷ் நிரானி, ஒரு கோடி ரூபாய் மதிப்புள்ள சொகுசு காரை பரிசளித்திருந்தார். இந்த காரை, வறட்சி பாதிக்கப்பட்ட மாவட்டங்களுக்கு சுற்றுப்பயணம் செய்வதற்கு பயன்படுத்த எடியூரப்பா திட்டமிட்டிருந்தார்.
இந்த செய்தி ஊடகங்களில் வெளியானதால் சர்ச்சை எழுந்தது. 'மாநிலத்தில் கடும் வறட்சி நிலவும் சூழ்நிலையில், எடியூரப்பா சொகுசு காரில் சுற்றுப்பயணம் செய்ய வேண்டிய அவசியம் என்ன?' என்ற விமர்சனம் எழுந்தது.
இதையடுத்து, தேவையற்ற விவாதங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ள எடியூரப்பா, முன்னாள் அமைச்சர் முருகேஷ் நிரானியிடமே அந்த காரை திரும்ப ஒப்படைத்துள்ளார்.இதுகுறித்து எடியூரப்பா வெளியிட்டுள்ள அறிக்கை:என், 40 ஆண்டுகால அரசியல் வாழ்க்கையில், பேருந்து, ரயில் போன்ற வாகனங்களில் பயணித்து, கட்சியை வலுப்படுத்தினேன். எனக்கு இப்படிப்பட்ட கார் தான் வேண்டுமென ஒருபோதும் கேட்டதில்லை. தற்போது நான் பயன்படுத்தி வரும் காரை பற்றி சர்ச்சை எழுந்துள்ளதால், முருகேஷ் நிரானியிடம் அதை திரும்ப ஒப்படைக்கிறேன். இவ்வாறு அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டு உள்ளது.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Loganathan - Madurai,இந்தியா
18-ஏப்-201606:21:11 IST Report Abuse
Loganathan பழைய வெள்ளை அம்பாசடர் காரில் பயணிக்கலாம்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X